Saturday, July 05, 2008
சதுரகிரி யாத்திரை #4
சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்
சதுரகிரி செல்ல எண்ணி இராஜபாளையத்திலிருக்கும்
நண்பர் திரு. தணுஷ்கோடி அவர்களுக்குப் போன் போட்டு
சதுரகிரிப் பயணம் குறித்த செய்தி கூறினேன்.
அவரும்வாருங்கள் நானும் வருகிறேன், செல்வோம் என்றார்.
குறிப்பிட்டபடி, குறித்த நாளில் திரு.தணுஷ்கோடியை
இராஜபாளையத்தில் சந்தித்தேன். மறுநாள் செல்வதற்கு ஏற்பாடுகளை செய்துவிட்டதாகக் கூறி, இன்று ஓய்வுஎடுத்துக்கொள்ளுங்கள்
என்று கூறினார். ஆனால்.அன்றுமதியமே வானம் இருண்டு இலேசமாக தூறல் ஆரம்பித்துவிட்டது. மாலைக்குள் மழை விட்டுவிடும் என்றிருந்த
எங்களுக்குச் சோதனையாக மழை தொடர்ந்து பெய்தது.
மறுநாளும் தொடர்ந்து மழை.
இப்படித் தொடர்ந்து மழை பெய்ததால் திரு.தணுஷ்கோடி
'இந்த மழையில் செல்ல இயலாது.
பாதைகள் ஈரமாகவும், வழுக்கலாகவும் இருக்கும்.
பயணத்தை ஒத்திவைக்கலாம் என்றார்.
அந்த ஒத்திவைப்பு சுமார் நான்கு ஆண்டுகளுக்குப்
பின் 25-6-2008 அன்றுநிறைவேறியது.
இம்முறை சிங்கப்பூரிலிருந்து திரு,மணியம்,
திரு.வி.ஆர்.பி.மாணிக்கம், ஈரோடிலிருந்து
திரு.திருநாவுக்கரசுடன் நண்பர்.
திரு.தணுஷ் கோடி, திரு.முருகேசன் சிவா
மற்றும் உள்ளூர் நண்பர்கள் என பத்து பேர்
சதுரகிரி யாத்திரையை தொடங்கினோம்.
நண்பர் திரு.தணுஷ்கோடி மதிய உணவுவை
வீட்டிலேயே தயாரித்து கொண்டு வந்தார்.
உடன் இரவு உணவுக்கு அரிசியையும்
கொண்டு வந்திருந்தார்.
மேலும் பூஜைக்குரிய பொருட்களும், தேங்காய்,
இளநீரும், பழங்களை ஸ்ரீவில்லிபுத்தூரிலும்
வாங்கிக்கொண்டோம். இராஜபாளையம்,
ஸ்ரீ வில்லிபுத்தூலிருந்து கிருஷ்ணன் கோயில்,
வத்திராயிருப்பு வழியாக தாணிப்பாறை வந்துசேர்ந்தோம்.
தாணிப்பாறையில் ஏற்கனவே சொல்லி வைத்திருந்த
இரண்டு சுமைகள் தூக்கும்மலையினர்
எங்களின் சுமைகளைத் தூக்கிகொண்டு புறப்பட தாணிப் பாறை மலையடிவாரத்து நுழைவுப் பாதைமுன்பு நின்று,
சித்தர்களையும் ஸ்ரீ மகாலிங்க சுவாமியை
மனதில் தியானித்துக் கொண்டு சதுர மலை மீது
ஏறத்தொடங்கும்போது காலை மணி 10.45.
மலைப்பகுதி வனங்களில் மரங்கள் நிறைத்திருப்பதால்,
மலை நடைப்பாதை நிழலில்பயணத்தை தொடர்ந்தோம்.
வழி நெடுகிலும் ஒரே ஏற்ற இறக்கமாக இருந்தது.
மலை உச்சிக்குச் செல்ல பிரதான பாதைகளோ
படிக்கட்டுகளோ கிடையாது.
குண்டுப் பாறைகள் மீது ஏறித்தான்
போக வேண்டும். சில இடங்களில் சமதளமான இடம் வரும்.
பிறகு மீண்டும் உயரமான பாறை. செல்லும் பாதை
மாறி விடாமல் இருக்க, அம்புக்குறியிட்டு
அடையாளம் காட்டப்பட்டு இருந்தது.
பயணத்தின் முதல் ஆலயமாக இருந்தது
*கருப்பண்ண சாமி* கோயில்.
சிறிய கோயில். நாங்கள் கருப்பண்ணர் சந்நிதி
கடக்கும் சமயம் அங்கு ஒரு குடும்பம் கருப்பண்ண
சாமிக்குப் பொங்கல் வைத்து சாமிகும்பிட்டுக்
கொண்டு இருந்தார்.
இரண்டு ஆடுகள் கழுத்தில் மாலையுடன் நின்று
கொண்டு இருந்தது. எந்த நிமிடமும்
வெட்டுவதற்குத் தயாராக இருந்தது.
அந்தக் காட்சியை நாங்கள் காண விரும்பவில்லை.
விரைவாக அவ்விடத்தினை விட்டு நகர்ந்து விட்டோம்.
(தொடரும்)
அன்பொடு
கிருஷ்ணன்,
சிஙகை
........................................
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
கிருஷ்ணன்,
இப்போது தான் முதல் முறையாக போய் வந்தீர்களா?
நான் சில ஆண்டுகளுக்கு முன் ஆடி அமாவாசையன்று சென்று வந்தேன். கூட்டத்தோடு, கூட்டமாக மேடு பள்ளங்களைக் கடந்து, டயர்கள் கொளுத்திய புகையை சுவாசித்துக் கொண்டும், குடிக்க, குளிக்க தண்ணீர் இல்லாமலும்....... அப்பப்பா! மறக்க முடியாத பயணம்.
ஏனோ பயணம் சுவாரஸ்யமாக இல்லை.
வெயிலான் அவர்களே,
வருகைக்கு நன்றி.
அன்புடன்
கிருஷ்ணன்
சதுரகிரி யாத்திரை மின் புத்தகத்தை பதிவிறக்க http://kricons.blogspot.com/2008/08/blog-post_18.html
Post a Comment