Sunday, November 02, 2008

சபரிமலை நடை பயணம் - #3

மணிகண்டனும் அவர்களுடைய விருப்பப்
படியே அவர்களுடன் கல்லிலும் முள்ளிலும்
நடந்து *பொன்னம்பல மேட்டுக்குச் சென்றார்.
அவருக்குக் கல்லும் முள்ளும்
காலுக்கு மெத்தையானது.

அவருடைய பக்தர்களின் கால்களுக்கும்
கல்லும் முள்ளும் மெத்தையானது.
 [* பொன்னம்பலமேடு என்கிற
காந்தமலை பம்பையாற்றின்
கரையில் இருந்து பன்னிரண்டு
கல் தூரத்திலுள்ளது.
ஐயப்ப பக்தர்கள் முக்கியத்துவம்
கொடுக்கும் திருக்கோயில்களுள்
இதுவும் ஒன்று ]

மஹிஷியின் கொடுமைக்குள்ளாகி
இருந்த தேவர்கள் முன்பே
பொன்னம்பல மேட்டில் மணி
கண்டசொரூபத்தை பிரதிஷ்டை
செய்து, தங்களைக் காத்து இரட்சிக்குமாறு
வேண்டிக் கொண்டனர். அங்கே
கோயில் கொண்டிருக்கும்
மணிகண்டனை ''பூதநாதன்'' என்பார்கள்.
--------------------------------------------------

இந்திரனும், தேவர்களும் மணிகண்டனின்
துணையோடு போருக்கு வருவதை
அறிந்த மஹிஷியின் சினம் எரிமலையாய்
பொங்கியது. பன்னிரண்டு வயதே நிரம்பிய
மணிகண்டன் தன்னுடன் போரிட
வந்திருப்பதை கண்டு நகைத்தாள்.

மணிகண்டனுக்கும் மஹிஷிக்கும்
நேருக்கு நேர் போர் படு உக்கிரமாய்
நடந்தது. மணிகண்டன் மஹிஷியைத்
தமது கைளால் பற்றி வெகு வேகமாய்
சுழற்றி வீசினார். அவள் பம்பைநதியை
அடுத்து ஓடும் அல்சா நதிக்கரையில் விழுந்தாள்.

தீயவர்கள் தங்கள் ஆற்றலில் இறுமாப்படைகிற
போது அவர்களை இறைவனே வதம்
செய்கிறான். மஹிஷியின் விஷயத்திலும்
அதுதான் நடந்தது.

மணிகண்டன் சாதாரண மனிதப்
பிறவியல்ல என்பதை உணர்ந்த மஹிஷிமுகி,
தன் முற்பிறவிப்பையும் அறிந்து தனக்குப்
பாவ விமோசனம் அளிக்க வேண்டினாள்.

சாப விமோசனம் பெற்ற மஹிஷி
மணிகண்டனிடம்,'' ஐயனே தங்களால்
நான் சாப விமோசனம் பெற்றேன்.
என்னை மனைவியாக ஏற்றுகொள்ள
வேண்டும்'' என்றாள்.

அவளது மனவேதனை உணர்ந்த
ஐயன் அவளை நோக்கி '
' *நீ மஞ்ச மாதா என்ற நாமத்துடன்
இங்கே கோயில் கொள்வாயாக,
என்னை தரிசிக்க வருகிற பக்தர்கள்
உன்னையும் வணங்கிச்செல்வர்.

என்னை முதல் முறையாய்
தரிசிப்பதற்கென்று வரும் பக்தன்
(கன்னி ஐயப்பன்) வாராது இருக்கின்றானோ
அன்று நான் உன்னை மணந்து கொள்வேன்''
என்றார். 

அதாவது "என்னைத் தரிசிப்பதற்குரிய
நாள்களில் என்றாவது கன்னியாத்திரை
செய்யும் பக்தன் (கன்னிச்சாமி) வராமல்
இருக்கிறானோ அன்றைக்கு உன்னை
மணந்து கொள்வேன்" என்றான்.
------------------------------------------

[ * மஞ்ச மாதாவே இன்று மாளிகை
புறத்து அம்மனாய் அறியப்படுகிறாள்.
சபரி மலை பதினெட்டாம்
படியில் மஞ்சமாதாவிற்கென்று
ஓர் ஆலயம் இருப்பதைக் காணமுடியும்.
அக்கோயிலின் கதவுகள்
ஒருபோதும் திறக்கப்படுவதில்லை ]
----------------------------------------------------------------

பந்தள மன்னன் இராஜசேகரன்
மணிகண்டனுக்குக் கோயில் கட்டும்
திருப்பணியைத் தொடங்கினான்.
பம்பா நதியில் நீராடி, விநாயக பூஜை
நடத்திய மன்னன் அப்பெருமானின்
அருளைப் பெற்று அடிக்கல் நாட்டினான்.

திருப்பணி தொடங்கப்பட்டபோது
வானம் மழை பொழிந்தது.
ஐயப்பனின் திருத்தோற்றம்,
யோகப்பட்டம் அணிந்த முட்டுக்களுடனும்
சின்முத்திரையுடனும் கூடிய
வலத் திருக்கையுடனும்,
அபயஹஸ்தம் அளிக்கும் இடது
திருக்கையுடனும், ஒன்றாய்ப் பொருந்தி
விளங்கும்.

தாமரைப்பாதங்களும், யோகாசனத்துடன்
கூடிய தவநிலையில் ஐயப்பன் விக்கிரம்
ஒரு மகர சங்கராந்தி ஆகவேதினத்தன்று
பஞ்சமி உத்திரம் கூடிய சுப முகூர்த்தத்தில்
பிரதிஷ்டை செய்யப்பட்டது.
தர்ம சாஸ்தா மெய்யப்பனாகி
பதினெட்டாம் படிக்கோயிலுள் அமர்ந்து
விண்ணையும், மண்ணையும்
காக்கும் தனது பரிபாலனத்தைத்
தொடங்கினர். தொடர்ந்து மாளிகைபுறத்தம்மன்,
வாபரன், கடுத்த சுவாமி, விநாயகர், 
யசி, நாகர் திருவிக்கிரங்களும் பிரதிஷ்டை 
செய்யப்பட்டன.

சபரிமலை நடை பயணம் தொடக்க
முனையான எருமேலி என்ற திருத்தலத்திலிருந்து
வனப்பிரதேசம் ஆரம்பமாகிறது.

மலைகளும் காடுகளும் நிறைந்த
கரடுமுரடான பாதை, நடப்பது சிரமம்.
ஐயப்பனின் பிரதான துணைவன் வாபரன்.

வாபரனுடைய கோயில் எருமேலிக் கோட்டத்தில்
உள்ளது. சபரிமலைச் செல்லும்
காட்டுவழியில் ஏழு கோட்டைகள் உள்ளன.
முதலாவது கோட்டை எருமேலி.

இங்கு ஓர் ஐயப்பன் கோயில் உள்ளது.
இக்கோயிலுக்குச் சற்று தொலைவில்
எருமேலி பேட்டை என்ற இடம் உண்டு.
அங்குள்ள வாபர் கோயில் மார்கழி மாதம்
பேட்டைத் துள்ளல் என்ற விழா நடக்கும்.

பேட்டையில் இருந்து எருமேலி வருவது
சுவாமி வேட்டை முடித்து வருவதான ஐதீகம்.

அங்கிருந்து ஐந்து கிலோ மீட்டர்
தொலைவிலுள்ள பெரும்தோடு இருக்கிறது.

இங்கு நதியில் நீராடி இளைப்பாறலாம்.
ஐயப்பன் இந்த இடத்தில் பூதகணத்தவர்களுடன்
தங்கி இளைப்பாறியதாய் நம்பப்டுகிறது.

அடுத்துச் செல்கிற இடம் காளை கட்டு.
இது இரண்டாவது கோட்டை. எருமேலியிலிருந்து
ஒன்பது கி.மீ.

இங்கு நந்திப்பெருமான் தேவனாக
விளங்குகிறார். மஹிஷி அரக்கியை
ஐயப்ப சுவாமி வதம் செய்து ஆனந்த
தாண்டவம் ஆடிய இடம் இது.

அரக்கியை அழித்து ஆனந்தத்
தாண்டவம் ஆடிய காட்சியை
நந்திகேசுவரர் தரிசித்ததால்
'காளைக்கட்டி' என்று அத்தலம்
பெயர் பெற்றது.

மூன்றாவது உடும்பறைக் கோட்டை.
இங்கே பூதநாதர் வியாக்ரபாதன் என்ற
பெயரில் குடிகொண்டுள்ளார். இந்த
இடத்தில் ஐயப்பனனோடு அவருடைய
பூதகணங்களுக்கும் பூஜைகள் நடக்கிறது.

நான்காவது கோட்டை கரிமலை.
இங்கு கரிமலை பகவதியும், கொச்சுக் கடுத்த
சுவாமியும் கோயில் கொண்டு
உள்ளார்கள். கரிமலை ஏற்றம் சிரமமானது.

ஐந்தாவது கோட்டை சபரிபீடம்.
இதனை அடைவதற்கு முன் நீலிமலையைக்
கடக்க வேண்டும். பக்தர்கள் மலர்
முதலியன கொண்டு நீலிமலையை
பூஜித்தப்பின் மலை ஏறுவர்.

ஆறாவது கோட்டை சரங்குத்தி.
இங்கு அஸ்திர பைரவன் என்ற தேவன்
வாசம் செய்வதாக நம்பப்படுகிறது.

சபரிமலை நடைப்பயணம் தொடக்க
முனையான எருமேலி என்ற திருத்தலத்திலிருந்து
வனப்பிரதேசம் ஆரம்பமாகிறது. மலைகளும்
காடுகளும் நிறைந்த கரடுமுரடான பாதை,
நடப்பது சிரமம். ஐயப்பனின்
பிரதான துணைவன் வாபரன்.

வாபரனுடைய கோயில் எருமேலிக்
கோட்டத்தில் உள்ளது. சபரிமலைச்
செல்லும் காட்டுவழியில் ஏழு
கோட்டைகள் உள்ளன.

முதலாவது கோட்டை எருமேலி.
இங்கு ஓர் ஐயப்பன் கோயில் உள்ளது.

இக்கோயிலுக்குச் சற்று தொலைவில் எருமேலி
பேட்டை என்ற இடம் உண்டு. அங்குள்ள
வாபர் கோயில் மார்கழி மாதம் 
பேட்டைத் துள்ளல் என்ற விழா நடக்கும்.
பேட்டையில் இருந்து எருமேலி
வருவது சுவாமி வேட்டை முடித்து 
வருவதான ஐதீகம்.

அங்கிருந்து ஐந்து கிலோ மீட்டர்
தொலைவிலுள்ள பெரும்தோடு இருக்கிறது.

இங்கு நதியில் நீராடி
இளைப்பாறலாம். ஐயப்பன் இந்த இடத்தில்
பூதகணத்தவர்களுடன் தங்கி
இளைப்பாறியதாய் நம்பப்படுகிறது.

அடுத்துச் செல்கிற இடம் காளைக் கட்டு.
இது இரண்டாவது கோட்டை.
எருமேலியிலிருந்து ஒன்பது கி.மீ.

இங்கு நந்திப்பெருமான் தேவனாக
விளங்குகிறார். மஹிஷி என்ற அரக்கியை 
ஐயப்ப சுவாமி வதம் செய்து ஆனந்த
தாண்டவம் ஆடிய இடம் இது.
அரக்கியை அழித்து ஆனந்தத் 
தாண்டவம் ஆடிய காட்சியை நந்திகேசுவரர்
தரிசித்ததால் 'காளைக்கட்டி' என்று 
அத்தலம் பெயர் பெற்றது.

மூன்றாவது உடும்பறைக்கோட்டை.
இங்கே பூதநாதர் வியாக்ரபாதன் என்ற 
பெயரில் குடிகொண்டுள்ளார்.இந்த
இடத்தில் ஐயப்பனனோடு அவருடைய 
பூதகணங்களுக்கும் பூஜைகள் நடக்கிறது.

நான்காவது கோட்டை கரிமலை.
இங்கு கரிமலை பகவதியும், கொச்சுக் 
கடுத்த சுவாமியும் கோயில் கொண்டு
உள்ளார்கள். கரிமலை ஏற்றம் சிரமமானது.

ஐந்தாவது கோட்டை சபரிபீடம்.
இதனை அடைவதற்கு முன் நீலிமலையைக் 
கடக்க வேண்டும்.பக்தர்கள் மலர்
முதலியன கொண்டு நீலிமலையை 
பூஜித்தப்பின் மலை ஏறுவர்.

ஆறாவது கோட்டை சரங்குத்தி.
இங்கு அஸ்திர பைரவன் என்ற தேவன் 
வாசம் செய்வதாக நம்பப்படுகிறது.

ஏழாவது கோட்டை சுவாமி ஐய்யப்பனின் 
சந்நிதானமாகிய பதினெட்டாம் படியாகும்.
படியின் வலதுபுறம் கருப்பசாமியும் இடதுபுறம் 
கடுத்த சுவாமியும் வீற்றிருக்கிறார்கள். 
தர்ம சாஸ்தாவான மூல ஸ்தானத்தில் 
கன்னி மூலையில் மகாகணபதி, வாயுமூலையில் 
மாளிகைபுறத்தம்மனும் வடக்குப்பக்கத்தில் 
வாபர சுவாமியும் பரிவார தேவதைகளாய் 
விளங்குகிறார்கள். 

ஐயப்பமார்கள் தலையில் இருமுடிக்கட்டுடன் 
சரணம் சொல்லிக் கொண்டே படி 
ஏறுகிறார்கள். அந்தச் சரணம்தான் அவர்களைப் 
பதினெட்டு படிகளையும் கடக்க உதவுகிறது.

மணிகண்டன் தமது திருக்கையில் 
தாங்கியிருந்த பதினெட்டு ஆயுதங்களே 
பதினெட்டு படிகள் என்றோர் ஐதீகம்.
ஐந்து இந்திரியங்கள், எட்டு ராகங்கள், 
மூன்று குணங்கள், வித்தை, அவித்தை 
ஆகியவைகள் குறிக்கப்படுவது 
உட்பொருளாய் உள்ளது.

திருக்கோயில் பகவான் யோகாசன 
நிலையில் 'தத்வமஸி' என்ற சின்மய 
முத்திரை காட்டி அமர்ந்து
இருக்கிறார்.

அன்பொடு
கிருஷ்ணன்
சிங்கப்பூர்



No comments: