அதனைக் கேட்ட அர்சசகர்களும் பிறரும்
இறைவனை வாழ்த்தி அவ்விடம் சென்று
தாம்பாளத்தைக் கண்டெடுத்துக் கொண்டு
அண்ணாமலைக்கு வந்து சேர்ந்தனர்.
மறுநாள் பகலவன் தோற்றமாகும் போது
குரு நமச்சிவாயர் எழுந்து தன் ஞானாசிரியைத்
தொழுது கிழக்கு நோக்கிச் செல்லும்போது,
இருடிவனம் என்பதொரு திரு நகரினைக் கண்டார்.
அந்நகரில் அம்மையும், அப்பனும் அர்த்தநாரீஸ்வர
வடிவத்தில் எழுந்தருளியுள்ளனர். அவ்வடிவம்
அகத்திய முனிவரால் பூசிக்கப் பெற்றதாகும்.
அங்கு ஐயாயிரம் கொண்டான் என்றொரு
புனிதத் தீர்த்தம் உண்டு.
அதில் நீராடி பூசை முடித்துத் தூயமனத்துடன்
சுவாமியை துதித்துச் சிவயோகத்தில் இருக்கும்போது
பசி வந்தது.
அப்போது, அன்னை பராசக்தியை நோக்கி,
''தாயிருக்கப் பிள்ளை தளருமோ தாரணியில்
நீயிருக்க நான் தளர்தல் நீதியோ - வேயிருக்கும்
தோளியோ விண்ணோர் துதிக்கும் திருமுத்து
வாளியே சோறுகொண்டு வா''
என்று ஒருவெண்பாவினை இயற்றினார்.
அம்மை அதனைத் திருச்செவியில் ஏற்று
''குருநமச்சிவாயா! நான் இடப்பாகம் பிரியாமல்
இருப்பவும் நீ என்னை பிரித்துப் பாடியது
முறையோ?
இப்போது உன் வாக்கினால் சேர்த்துப்
பாட வேண்டும்'' என்று கூற,
குருநமச்சிவாயா மூர்த்தி,
'' மின்னும் படிவந்த மேக களத் தீசருடன்
மன்னும் திருமுத்து வாளியே - பொன்னின்
கவையாளே! தாயே! என் கன்மனத்தே நின்ற
மலையாளே சோறு கொண்டு வா''
என்று ஒரு வெண்பாவைவினால்
சேர்த்துப் பாடினார்.உடனே அம்மையார்
அமுதுகொண்டு வந்து கொடுத்தார்.
அதனை உட்கொண்டு புறப்பட்டு
விருத்தாசலம் வந்து பழமலை
நாதரையும் பெரியநாயகி அம்மையையும்
வழிபட்டு ஒரு குளக்கரையில்
சிவயோகத்திலிருக்கும் போது பசி அணுகிற்று.
அப்போது,
''நன்றிபுனை யும் பெரிய நாயகியெ நுங்கிழத்தி
என்றும் சிவன்பா லிடக்கிழத்தி - நின்ற
நிலைக்கிழத்தி மேனிமுழு நீலக் கிழத்தி
மலைக்கிழத்தி சோறுகொண்டு வா...''
-என்ற வெண்பாவைப் பாடினார்.
அம்மையார் தண்டூன்றி விருத்தாம்பிகையாய்
வந்து, குரு நமச்சிவாயாரைப் பார்த்து,
''என்னப்பா! உன்னுடைய சொல்லினால் என்னைக்
கிழத்தி கிழத்தி என்று பாடுதல் நலமா?
கிழவிக்கு நடக்க இயலுமா? தண்ணீர் எடுக்கக்
கூடுமோ? உகட்டுப்பட்டு, உணவு கொண்டு வர
உடலில் உரம் இருக்குமோ? என்றார்.
உடனே, குரு நமச்சிவாய தேவர்
''அன்னையே! ஆண்ட கோடி ஈன்ற பின்னும்
கன்னி என மறைபேசும் ஆனந்த ரூப மயிலே!
பாலகாசியில் பாலாம்பிகை; இது விருத்தகாசி;
நீர் பெரிய நாயகி; இங்குள்ள
இறைவனும் பழமலை நாதர்;
அதுபற்றியே யான் அவ்வாறு சொல்லினேன்'' என்றார்.
அடியவர் கூறியன கேட்ட அம்பிகை
'' என அருமை மகனே! நமச்சிவாயம்!
உன்னுடைய இனிய வெண்பாவிலே என்னை இளமையாக
வைத்துப் பாடுக!'' என்றார்.
குரு நமச்சிவாய தேவர் ''கருணை கடலே!
இரண்டு அம்மையார் ஆக கூடுமே'' என்று
சொல்ல அம்மையார் ''அதனால் பிழை
ஒன்றும் இல்லை பாடுக! என்றார்.
உடனே குரு நமச்சிவாயர் பின்வரும்
வெண்பாவினைப் பாடி மகிழ்ந்தார்.
அன்பொடு,
கிருஷ்ணன்,
சிங்கை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment