அப்போது குரு நமச்சிவாயர், அன்னை சிவகாமசுந்தரியைச் சிந்தனை செய்தார். அன்னம் வந்தது! முதிய அடியவரை நோக்கி ''இதனை ஏற்றுக்கொள்ளும்''என்றார்.
அப்போது அம்பலத்தாடுவார், 'நாம் இதனை
ஏற்றுக்கொள்ளோம்' என்றார். குரு நமச்சியாவர்
''காரணம் என்ன?'' என்று வினாவ, அடியவர்,
''ஐயா! இவ்வாறே ஒவ்வொரு நாளும்
உணவளிப்பதாக உறுதி கூறினால்
ஏற்றுக்கொள்வோம், இன்றேல்
ஏற்றுக்கொள்ளோம்'' என்றார்.
அது கேட்ட குரு நமச்சிவாயர்,
''நீர் மிகவும் மூப்படைந்திருக்கின்றீர்!
யானோ, இன்று இவ்வூரில் இருக்கிறேன்,
நாளை காசியோ, இராமேசுவரமோ அறியேன்;
இவ்வாறு இருப்ப உமக்கு நித்தியம்
அன்னம் கொடுக்கிறோம் என்று எவ்வாறு
கூற இயலும்?'' என்றார்.
அப்போது அம்பலத்தாடுவார்,
''ஐயா! நீர் செல்லும் திசைகளில் யாம்
உமக்கு முன்னே நடந்தால் அன்னம் கொடும்.
உமக்குப் பின்னால் நடந்தால் அன்னம்
வேண்டாம் என்றார். அப்போது, குரு
நமச்சிவாயர், 'நீர் முன்னே நின்றால்
அன்னம் கொடுக்கிறேன், இன்றேல் இயலாது'' என்றார்.
அம்பலத்தாடுவாரும் அதற்கு இசைந்தார்.
ஆகவே குரு நமச்சிவாயர் சுவாமியை பார்த்து
''உணவு கொள்ளும்''என்றார். அதற்கு அவர்,
' திருநீற்றுக் கோயிலையும் உருத்திராக்கத்தையும்
தொட்டு உறுதி கூறிக்கொடுத்தால் கொள்வோம்'' என்றார்.
குரு நமச்சிவாயர் அவ்வாறே செய்ய,
வந்த அடியவர் கொடுத்த அமுதைக்
கொள்வது போல் காட்டி,
''நீர் வேட்கை தணியுமாறு தண்ணீர் தரவேண்டும்'' என்றார்.
குரு நமச்சிவாயர் அருகிலிருந்த திருப்பாற்கடல்
எனப்படும் நீர் நிலைக்காட்டி,''அதன்கண் நீர் அருந்துக!''
என்றார். அவ்வாறே நீர் அருந்தச் செல்பவர்
போல் காட்டி மறைந்தருளினார்.
மறைந்தருளிய அம்பலத்தாடுவார்
தில்லை மூவாயிரவரிடம், 'நாம் சென்று
குரு நமச்சிவாயன் கோயிலுக்குள்
வருவதற்குரிய வழியை வகுத்து விட்டோம்,
நீவீர் அனைவரும் கூடி விருதுகளுடனும்
நாம் ஏறும் பல்லக்கு உடனும் சென்று,
வீதிவலமாக நம்மிடம் அழைத்து வருக!'' என்றார்.
அவ்வாறே தில்லை மூவாயிரவரும் சென்று
வணங்கிப் பல்லக்கில் ஏறுமாறு வேண்டினர்.
குரு நமச்சிவாயரை நோக்கி,
''சுவாமி! இது பல்லக்கன்று, சூன்ய
சிங்காசனம் என்றனர்.
அப்பொழுதும் குரு நமச்சிவாயர் மறுத்துவிட்டார்.
பிறகு மூவாயிரம், '' ஐயனே! நேற்று
நண்பகலில் எம்பெருமான் உம்மிடம்
வந்தார் அல்லவா, நீர் அவரிடம் யாது
கூறினீர்'' என்றார்கள்.
குரு நமச்சிவாயர் யோகக்
காட்சியினால் பார்த்தார்.
சபாபதியின் காட்சி கிடைத்தது.
''சபாநாயகர் இவ்விடத்தில் வந்து
என்னுடன் உடையாடி அங்கும் சென்று
செய்தி கூறினரோ!'' என்று பரமன் அருளைப்பாராட்டி,
சங்கயமாய் அம்பலவர் தாமே எழுந்தருளி
யிங்கெமக்குப் பிச்சை யிடுவென்ன-வங்கமுது
திட்டமு டன் நமக்கு நீதினமு மேசர்வ
கட்டளையுண் டாக்குகென்றார் காண்''
என்ற வெண்பாவைப் பாடிக்கொண்டே
பல்லாக்கில் ஏறி, அல்லாகிய இருவினை
தனையறுத் தடியினை தருவாரோ?
மல்லல் நீடிய புவியின் மேலின்னமும்
வரும் பிறப்பறுப்பாரோ? நல்ல மாமுலை
மாதுமை நாயகர் நாயகர் நான் நிதம்
நவின்றேத்தும் தில்லைநாயகர்
அம்பலத் தாடுவார் திருவுளம்
தெரியாதோ! என்ற ஓதிக்கொண்டே
கோயிலுக்குட்குச் சென்று கொடி மரத்தருகே
பல்லாக்கில் இருந்து இறங்கிப் பஞ்சாக்கரமதில்
மட்டும் பாதக்குறடு இட்டு சென்றார்.
பிறகு பொன்னம் பலத்தை அணுகி,
திருநடம்புரி தேசிகனை வணங்கி தில்லை
மூவாயிரவரைப் பார்த்து, இப்போது நாம்
உண்டாக்க வேண்டிய கட்டளையாது!'' என்று
வினவினார்!
அப்போது சபாநாயகர்,''சர்வ ஜனத்துக்கும்
சர்வ கட்டளை என்று அசரீயாய் நின்று
உணர்த்தினார். ''சபாநாயகர் பிச்சை கொடுத்தால்
கட்டளை எப்போதும் தொடந்து நடைபெறும்''
என்று சொல்லிக்கொண்டே
பொற்றாம்பாளத்தைக் கையில் ஏந்தி
''காத லுடன் சர்வ கட்டளையாய் உன்னுடைய
பாத மலர்ப்பூசை பண்ணவே - ஓது
குருவா யெனையாண்டு கொண்டவனே! பிச்சை
தருவாய் சிதம்பர நாதா''
என்ற வெண்பாவைப் பாடினார்.
அன்பொடு,
கிருஷ்ணன்,
சிங்கை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment