Thursday, October 05, 2006

இறைவன் திருவடிகள்

இறைவன் திருவடிகள்

மெய்ப்பொருள் ஒன்று. அதனை பல்வேறு பெயர் கொண்டு அழைக்கிறார்கள்.
இம் மெய்பொருளை பல்வேறு மதத்தவர் பல்வேறு பெயர் கொண்டு வணங்குகிறார்கள்.
விஞ்ஞானத்தினால் கூட அணுக முடியாத இப்பெரும் சக்தியை பரப்பிரம்மம் என்கிறது
வேதாந்தம்.பல்வேறு கிளைநதிகள் வெவ்வேறு திசையில் உற்பத்தியாயினும் இறுதியில்
கடலில் சங்கம்மாவது போல் இம்மதங்கள் யாவும் தியும் அந்தமுமற்ற ஒரு மெய்ப்
பொருளையே சார்ந்து நிற்கிறது. சிந்து நதித் தீரத்திலே தோன்றிய பழம் பெரும்
மதமான இந்துமதமும் பரப்பிரம்மாகிய மெய்ப்பொருளை று வெவ்வேறு வடிங்களில்,
று சமயப் பிரிவுகளின் வாயிலாக வழிபடுகின்றன. சைவம்,வைஷணம்,சாக்தம்,காணபத்யம்,
கெளமாரம்,செளரம் கிய இந்து மதத்தின் று பெரும் பிரிவுகளும் முறையே சிவன் பெருமான், விஷ்ணு, சக்தி, சாக்தம், விநாயகர், முருகன், சூரியன் கியோரை முழு
முதற் கடவுளாக கொண்டு வழிபடுகின்றன. இதற்கேற்ப பரம்பொருளின் வடிவம்,பெயர்,
வழிபாடுகின்றன.
சிவம் அடிமுடி காணாத பொருள். விஷ்ணு என்னும் சொல் எங்கும் விரிந்தது
என்று பொருள்படுகிறது. சக்தி என்னும் அம்பிகையே தெய்வங்கள் அனைத்தையும்
தன்னகத்து அடக்கியுள்ள் திபராசக்தியாகிறாள். அவளும் அகண்ட பரம்பொருள்.
சிவ சக்தியின் குமாரர்களாகிய கணபதியும், முருகனும் தத்தம் முறையில் அகண்ட
பரம்பொருள். மெய்ப்பொருள் ஒன்று; அதற்குச் சான்றோர்கள் பல பெயரிட்டு
அழைத்தனர். று சமயங்களுள் எதை வழுத்தினாலும் அது பரமனது வழிபாடு.
திருவாசகத்தில் திருவண்டப் பகுதியில்
''அறுவகைச் சமயத்து அறுவகையோர்க்கும்
வீடு பேறு ய் நின்ற விண்ணோர் பகுதி
கீடம் புரையும் கிழவோன் நாள் தொறும்''
என்று கூறுகிறது. எவ்வாறாயினும் தான் வணங்கும் தெய்வமே வெவ்வேறு சமயங்களில்
வெவ்வேறு பெயர்களில் வணங்கப்படுகின்றன என்பதை சமரசம் உடைய எந்த ஒரு
சாதகனும் அறிந்துக் கொள்ளும் வேண்டும்.

சைவம் (சிவம்)

''தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்களுக்கும் இறைவா போற்றி...''
எல்லா நாட்டவராலும் கடவுள் என போற்றப்படுபவரை சிவன் என போற்றி துதிக்கிறது இந்துமதத்தின் முக்கிய பிரிவான சைவசமயம்.குணமும் குறியும் கடந்த இறைவன் நமக்கு அருள் செய்வதற்கும்,நற்சிந்தனைகளை வழங்கவும் பல அருள் மூர்த்தங்கள் தாங்கி அருள் பாலித்து வருகிறார். லயங்களில் சிவவழிபாட்டிற்குரிய சின்னமாய் கருதப்படும் அருவுருவ வடிவில் சிவன் எழுந்தருளியுள்ள சிவலிங்கமே. வுடையாள் என்னும் கீழ்ப்பகுதி சக்தியின் சின்னம். அதிலுள்ள லிங்கம் சிவத்தின் சின்னம். சிவசக்தியின் ஐக்கியத்தால் சராசரங்கள் யாவும் தோன்றியுள்ள என்பதை இச்சின்னம் குறிக்கிறது.

இறைவன் ஏகநாயகன். உயிர்கள் நாயகிகள். இயற்கையின் அமைப்பும்,
அதில் கடைப்பிடிக்கும் இல்லறம் என்னும் நல்லறமும் சேர்ந்து உறுதிப்பாட்டை தரும்
என்பதை பார்வதி சமேதரராய் முருகன் பிள்ளையாரோடு வீற்றிருக்கும் பரமசிவனின்
வடிவம் உணர்த்துகிறது. உயிர் தத்துவம் சிவம். உடல் தத்துவம் சகதி.
உடல் இல்லாது உயிர் இல்லை.
''தன்னிலைமை மன்னுயிர்கள் சாரத் தரும் சக்தி
பின்னிமிலான் எங்கள் பிரான்'' என்கிறது திருவருட்பா.
சக்தியே உயிர்களை சிவத்தோடு சேர்க்க உதவுகிறது.சிவதத்துவத்திற்கும் சக்தி தத்துவத்திற்கும் புறம்பாக இயற்கையில் ஒன்றுமில்லை. இவற்றை தனது அர்த்த நாரீசுவர
வடிவில் நமக்கு உணர்த்தப்படுகிறது.

காமம் அகன்று சிவஞானத்தோடு கூடிய பக்தி உண்டாக ஞானக் கண்ணோடு
கூடிய முக்கண்ணராக மாந்தர் கவேண்டும் என்னும் கருத்தை முக்கண்ணன்
வடிவத்திலிருந்து சிவபெருமான் விளக்குகிறார்.ணவம்,கன்மம்,மாயை என்னும்
இருளிலிருந்து, உறக்கத்திலிருந்து விடுபட்டு,துயிலுணர்ந்து இந்த ன்மா
இறையருளில் தோய்விப்பதே சிவம்.

உருத்திரன் என்னும் உக்கிர சொரூபம் மூலம் பயத்தையும், அஞ்ஞான
இருளையும் மரணத்தை பற்றிய அச்சத்தையும் போக்குகிறார். உலக இன்பங்களை
பங்கிட்டுக் கொள்ளூம் மானிடர் அதனிடத்து இருந்து வரும் மரணத்தை
மட்டுமே ஏற்க அஞ்சுகின்றனர்.மரணத்திற்கு தப்ப இறைவனிடம் தஞ்சமடைதல்
வேண்டும். இதுவே தேவர்- அசுரர் பாற்கடல் கடைந்த கதையின் உட்பொருள்.
கேடுகளை ஏற்றுக்கொண்டு நலன்களை உலக மக்களுக்கு அளிப்பதை நீலகண்டன் வடிவலிருந்து உணர்த்துகிறார். இறைவனுடைய நடராஜ வடிவமானது இறைவனின் ஐந்தொழில்களையும் மக்களுக்கு உணர்த்துகிறார். உடுக்கை ஏந்திய கையானது படைத்தல் தொழிலையும், அபயகரமானது காத்தல் தொழிலையும், அக்கினி ஏந்திய கை அழித்தலையும், முயலகன் மீது ஊன்றிய திருப்பாதம் மறைத்தலையும், தூக்கிய திருப்பாதம் அருளலையும் குறிக்கிறது. அடிமுடி தேடிய கதையானது இறைவன்
தியும் அந்தமும் இல்லாத அருட் பெருஞ்சோதி என்பதையும் மட்டுமல்லாது
பரம்பொருள் உருவம் உடையதாகவும் உருவத்தை கடந்த நிலையிலும்
உள்ளதென்பதை விளக்குகிறது.

சிவனுக்கான வழிபாட்டு முறைகளில், சிவனை நினைத்து விரமிருந்து முக்கிய விரத
நாட்களாவன பிரதோஷம்,மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை என்பவனாகும். பிரதோஷம் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறையும், சிவராத்திரி மாசி மாதத்திலும், திருவாதி மார்கழி மாதத்திலும் வருபவை. சிவ வழிபாடானது திகாலந்தொட்டே நிகழ்ந்து வருவதை, சிந்து வெளி நாகரீக அகழ்வாராய்ச்சிகள், மகாபாரதம், இராமயணம் போன்ற புராணகால இதிகாசங்கள் சங்கம் மருவிய கால நூல்களான சிலப்பதிகாரம், மணிமேகலை சான்று பகர்கின்றன. ஆகவே அழகில் சோதியன் அம்பலத்தாடுவானை வாழ்த்தி வணங்கி பிறவிப் பயனை அடைவோமாக.

சக்தி.(அம்பிகை)

சக்தியை முழுமுதற் கடவுளாக சமயம் சாக்தமாகும். இந்து சமயத்தில் இறைவனைத்
தந்தையாக,தலைவனாக, தோழனாக, தனயனமாக என்று பல வழிகளில் அடியார்கள்
அன்பு பாராட்டினாலும் இவற்றில் தலைசிறந்ததும்,அந்நியோன்மானதுமான அன்பு
முறை தாய்-பிள்ளையாகும். இறைவனைத் தாயாகக் காணும் வழிபாடு சக்தி
வழிபாடாகும். பிள்ளையானவன் நன்றே செய்திகும், தீதே செய்திடினும் மாறாத
தாய் அன்புக்கு ஒப்பானது தெய்வத்தின் அன்பு, கூடவே தாயின் தன்மையுடைய
தெய்வத்தை வழிபடுவது யாருக்கும் எளிதாகிறது.

சக்தி என்பது என்ன? சக்திக்கும் சிவத்துக்கும் இடையே என்ன தொடர்பு?
இதனை விளக்குவதே இந்து மதம். சிவம் என்பது மெய்ப்பொருள். பிரியாது
இதனிடத்திலிருந்து நிலைத்துள்ள தொடர்புக்கு சக்தி என்று பெயர்.சிவத்தினின்று
சக்தியைப் பிரிக்க முடியாது. உலகம் யாவும் சிவசக்திமயமானது. சக்தி பல்வேறு
தொழில்களைப் புரியவும் பல்வேறு தத்துவங்களை விளக்கவும் பல்வேறு வடிவங்களை
எடுக்கிறாள்.

முத்தொழில்களை செய்யும் போது பிரம்மாணி,வைஷ்ணவி,உருத்ராணி என்று
பெயர் பெறுகிறாள். சிவத்திற்கு ஒப்பிடும்போது துர்க்கை என்றும்,தீமையை
அழிக்கும்போது காளியுமாகிறாள். வித்தை- கல்வியின் வடிவெடுக்கும் போது
சரஸ்வதி என்றும், தனதானிய-செல்வம் என்று வடிவெடுக்கும் போது இலக்குமியாகவும்
பெயர் பெறுகிறாள். வாழ்வு சிறப்புற ட்சியானது சிறப்புற்றிருக்க வேண்டும்
என்பதை துர்க்கையும், செல்வத்தை வழங்க திருமகளும்,கலை ஞானங்களைப்
பெற சரஸ்வதியும், ஞானத்துக்கும் நல்லறிவிற்கும் அறிகுறியாக விநாயகரும்,
வாழ்வை ற்றல் படைத்தாக்க முருகனும் விளங்குகின்றனர்.

அவதாரபுருஷர்களாக,சித்தர்களாக தோன்றியவர்கள் கூட சக்தியை வணங்கி
வந்தனர். இராமபிரான் இலங்கை போகும் முன்பு துர்க்கை பூஜை செய்த்தாகவும்,
கண்ணன் காத்யாயினி பூஜை செய்தாகவும், சங்கராச்சியார் சாரதா பூஜை செய்ததாகவும், இராமகிருஷ்ணர் காளியை வணங்கியதாகவும் நாம் அறிந்த செய்தியாகும்.

ஜகதம்பா உணவு அளிக்கும் அன்ன பூரணியாகவும், அனைத்துக்கும் அரசியான
இராஜராஜேஸ்வரி[பவானி] இயற்கையின் உயிரை உண்டு தோற்றுவிப்பவளாகவும்,
மகாசக்தி, பேராற்றல் மிக்கவள் என பல பெயர்களால் அழைக்கப்படுகிறாள்.
வீரம்,செல்வம்,கல்வி அருள் வேண்டி சக்தியை நோக்கி நோற்கப்படும் நவராத்திரி
விழா நம்மவர்களால் பயபக்தியுடன் கொண்டாப்படுகிறது.இதுவே சக்தியின்
சிறப்பை உலகெங்கும் பறை சாற்றுகிறது. இது மட்டுமன்றி கெளரி விரதம்,
வரலெட்சுமி விரதம் போன்ற சக்தியை நோக்கி நோற்கப்படும் விரதங்களாகும்.
சக்தி வழிபாட்டை நோக்கினால், இது திகாலந்தொட்டே மக்களிடையே
இருந்து வந்துள்ளமைக்கு தராங்கள் நிறைய உண்டு. சிவ வழிபாட்டைப்
போன்று சிந்துவெளி நாகரீக மக்களின் சமய வாழ்வில் சக்தி வழிபாடும்
சிறப்பிடம் பெற்றிருந்தது. மேலும் தொல்காப்பியத்தில் சக்தி பாலை
நிலத் தெய்வமாகப் போற்றப்பட்டாள். இன்று சக்தி வழிபாடானது தனியே
சாதகத்திற்கு மட்டுமல்லாது இந்து சமயம் முழுவதற்கும் பொதுவாக உள்ளது.

''மாதா பராசக்தி வைய்மெல்லாம் நீ நிறைந்தாய்
தாரம் உன்னை யல்லால் யாரெமக்குப் பாரினிலே...''

விஷ்ணு

விஷ்ணுவை முழுமுதற் கடவுளாக வழிபடும் வைஷ்ணமாகும். இந்து மதத்தவரில்
பெரும்பாண்மையோரால் பின்பற்றப்படும் சமயமும் இதுவாகும்.சைவரை எவ்வாறு மிளிரும் திருநீறு அடையாளம் காட்டுகிறதோ அவ்வாறே வைஷ்ணவரை திருநாமாம் உணர்த்துகிறது. விஷ்ணுவை முத்தொழில்களுள் காத்தல் தொழிலையும் புரியும் தெய்வம் எனக் குறிப்பிடுவதுண்டு. விஷ்ணு என்னும் என்னும் பொருள் எங்கும் பரந்து இருப்பவன்
என்பதாகும். கவே கடல்,வானம் என்று உலகெங்கும் வியாபித்துள்ள நீல நிறத்தை
அவனுடைய நிறமாகக் கருதுவது சாலப் பொருத்தமானது. இதன் பொருட்டே கார்மேக
வண்ணன் என வர்ணிக்கப்படுகிறான். பாற்கடலின் நடுவே திசேஷன் யோக நித்திரை
ழ்ந்திருந்தவாறே திருமால் நமக்கு பல்வேறு தத்துவ விளக்கங்களை அருள்கிறாள்.
ஊழிக்கால் முடிவினிலே அண்டங்களெல்லாம் ஒடுங்கிய நிலைக்கு வருவதை பாற்கடல்
விளக்குகிறது. அப்போது அண்டங்கள் அனைத்திற்கும் சுகமாக இருக்க திசக்தி
என்னும் திருமாலே.திசேஷன் என்னும் பாம்பு ஐந்து தலையையுடையவனாகவும்
இருக்கிறான்.இது பஞ்ச பூதங்களை குறிக்கிறது. திருமாலின் யோக நித்திரையானது
அறிதுயில் என்னும் தூங்காத்துயில் என்றும் பொருள் உணர்த்தப்படுகிறது. சித்தர்கள்
இதனை, 'தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது' என்பார்கள். அந்நிலையிலிருந்தவாறே
உலகனைத்தையும் காத்துக் கொண்டிருக்கிறார். திருமாலின் நாபிக் கமலத்தின்று
உருவானவர் நான்முகன் பிரம்மா. பஞ்ச பூதங்கள், உயிர்கள், இயற்கை அனைத்துக்கும்
தோற்றுவாயிலாக அமைந்துள்ளது பிரம்மாவின் தோற்றம். திருமாலின் நான்கு
திருக்கரங்களுள் சங்கை ஏந்திய கை. இறைவன் பிரணவப் பொருள் என்பதை உணர்த்துகிறது. மற்றக்கை உள்ள தர்ம சக்கரம் அல்லது அறிவாழியைக் கொண்டு உலகனைத்தையும் காத்துக் கொண்டு வருகிறார் திருமால்.அறம் செய்கின்றவர்களை காப்பாற்றியும் கேடு செய்கின்றவர்களை தண்டித்தும் வருகின்றது. இவ்வறவாழி திருமாலே காலச்சொரூபம் எனபதை உணர்த்த ழியை காலச்சக்கரம் எனச் சொல்வதும் உண்டு. மற்ற இரண்டு கைகளிலுள்ள கதையும், கமலமும் அறிவின் தோற்றங்களாகிய வல்லியல்பு, மெல்லியல்பை உணர்த்துகின்றன. துன்பம் வழங்கும் வல்லியல்பானது, முன்னேற்றத்தை வழங்குகிறது.

இதை உணர்த்த கதையும், இனிமையின் வடிவினை தரும் மெல்லியல்பை உணர்த்த
கமலமும், திருமாலின் கையில் விளங்குகின்றன.இவ்வாறு உலகெங்கும் நீக்கமற
வீற்றிருக்கும் விஷ்ணுவை பற்பல பெயர் கொண்டு அழைக்கின்றனர்.
நாராயணன் : தன்னிடத்தினின்று தோன்றி வந்த உலகில் வீற்றிருப்பவன்.

கோவிந்தன் : சீவன்களின் நிலையை அறிபவன்.
பரமாத்தமன் : பிரபஞ்சத்துக்கு அப்பால் உள்ளவன்.
கேசவன் : மும்மூர்த்தி வடிவினன்
என பல்வேறு பெயர்கள் வழங்கப்படுப்படுவதுண்டு.

விஷ்ணு வழிபாடானது திகாலந் தொட்டே இருந்து வந்ததாயினும் இதிகாச
புராண காலத்தின் (கி.மு 600 - கி.பி 200) போது வளர்ச்சி பெற்றதுள்ளது.
இக்காலத்தில் தோன்றிய இதிகாசங்களான மகாபாரதம், இராமாயணம் என்பன.
விஷ்ணுவின் அவதாரமாக இராமன், கிருஷ்ணன்-- விஷ்ணுவையே முழுமுதற்
கடவுளாக கொண்டு எழுதப்பட்டன. மேலும் விஷ்ணுவை நோக்கி நோற்க்கபடும்
விரங்களில் ஏகாதசியும்,கிருஷ்ண ஜெயந்தியும் முக்கியமானவை.இன்றும் இவை
உலகெங்கும் பெருவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. சைவத்தில் நாயன்மார்
போன்றௌ வைஷ்ணவத்தில் பொய்கை ழ்வார், பூதத்து ழ்வார் முதலிய பன்னிரு
ழ்வார்கள் இறைவனை வணங்கி பேறு பெற்றனர்.பச்சைமா மலைபோல் மேனி
பவளவாய் கமலச் செங்கண்ணனை நாமும் போற்றி பேறுபெறுவோமாக.
''பச்சைமாமலைப்போல் மேனி
பவளவாய் கமலச்செங்கன்
அச்சுதா வமரரேறே யர்தம்
கொழுந்தோ வென்னும்
இச்சுவை தவிர யான்போய்
இந்திரலோகமாளும்
அச்சுவைபெறினும் வேண்டேன்!''
*****************************************************

விநாயகர்

விநாயகரை முழு முதற் கடவுளாக வழிபடும் சமயம் காணபத்யம்.னால் இந்து
மதம் முழுவதற்கும் பொதுவாய் எழுந்தருளியிருக்கும் தெய்வம் விநாயகர்.எந்த ஒரு
நற்காரியத்தைத் தொடங்கு முன்னும் விநாயகர் வணக்கத்துடன் தொடங்கும் போது
காரியம் சித்தியடையும் என்பது நம்பிக்கை. அத்துடன் விநாயகர் வழிபாட்டில்
விநாயகரை உருவத்தில் கொண்டு வருவதும் எளிது. மண்ணினால், சாணத்தினால்,
அல்லது அரிசி மாவினால், மஞ்சளினால் பிள்ளையரை எளிதில் உருவாக்கிடலாம்.
வேறு சின்னம் ஒன்றும் அகப்படாத இடத்து அறுகம்புல் அவருக்கு அறிகுறியாக வந்து
நிற்கும்.இயற்கையின் முறைமகயைக் காக்க சிவசக்தியின் அருட்பிரசாதமாக னைமுகன்
உருவெடுத்தான் என்பது ஐதீகம்.மும்முறை தலைக்குட்டி தோப்புக்கரணம் போடுவது,
தேங்காய் உடைத்தல் விதவிதமான உணவுப்பொருள் படைத்தல்,போன்ற விசேட
வழிபாட்டு முறைகளும் இவருக்கே உரியன. ண்,பெண் பேதத்திற்கு அப்பாற்பட்டவர்
கையால் மற்ற தெய்வங்களைப் போன்று அவருக்கு சிக்தி,புத்தி என இரண்டு சக்திகளை
அவரோடு இணைத்து சொல்வது உண்மையாய் அவர் மகிமையை விளக்குவது கும்.
உடலின் அளவிற்கும் ன்மாக்களின் அளவிற்கும் தொடர்பில்லை என்பதை உணர்த்த
சிறிய உருவமான எலி பிள்ளை வாகனமாகிறது. அத்துடன் விநாயகரின் உருவமானது
பல்வேறு த்ததுவங்களை எமக்கு புகட்டுகிறது. விநாயகர் 'ஓம்'கார மூர்த்தியானவர்
என்பதை விளக்க னைமுகத்தானாக அவர் உருவெடுத்துள்ளார். அண்டங்கள் யாவும்
அவனிடத்து அடங்கியுள்ளன என்பதை விளக்க அவரது பேழை வயிறும், தன்னிடத்து
தங்கியிருக்கும் யாவையும் தனது சக்தியால் தாங்கிக்கொண்டிருக்கிறான்
என்பதை வயிற்றைச் சுற்றியிருக்கும் சர்ப்பமும் உணர்த்துகிறது. ற்றலிலே மானுடரை
விட மிக்கவர் என்பதைக் காட்ட தும்பிக்கையுட்பட்ட ஐந்து கைகளைக் கொண்டுள்ளார்.
மக்களை நல்வழியில் நடத்துதலை உணர்த்த அங்குசமும் துன்பத்திலிருந்து காக்கப்
பாசமும், சிந்தனாசக்தி வளர்ப்பது அவசியம் என்பதைக் காட்ட ஜபமாலையும்,கல்வியை
உணர்த்த தந்தமும், அவரது கைகளில் இருக்கின்றன. மேலும் தும்பிக்கை எப்பக்கம்
வளைந்து உள்ளதோ அதன்படி வலம்புரி விநாயகன், இடம்புரி விநாயகன் என இயம்ப்படுகிறான். தியாகத்தின் உயர்வைக் காட்ட தனது தந்தங்களில் ஒன்றை இழந்து
ஏகந்து எனப்பெறுகிறார். விநாயகருக்கு இன்னும் பல பெயர்கள் அடியார்களால்
வழங்கப்படுகின்றன். மூஷிகவாகனன்[பெருச்சாளி வாகனன்] வித்யராஜன்.[கல்விக்கு அரசன்]
ஓங்காரரூபன்[ஓம் என்னும் மந்திர வடிவினன்],ஞானகணபதி [ஞானியர் கூட்டத்திற்கு தலைவன்]


விநாயகர் வழிபாடு யாவருக்கும் எளிதானதாகவும், விநாயகர் வணக்கத்துடன்
தொடங்கும் எக்காரியமும் சித்திபெறும் என்பதாலும் இந்து சமய மக்களிடமும்
திகாலந்தொட்டு நிலவிவருகிறது. விநாயக சதுர்த்தி,விநாயக சஷ்டி, போன்ற விரத
தினங்கள் விநாயகரை நினைந்து அனுசரிக்கப்படுகின்றன. வெவ்வினையை வேரறுக்க
வல்லானை, விண்ணிற்கும், மண்ணிற்கும் ன நாதனை மனமுருக நினைந்து எங்கள்
விக்கின தீமைகளை தீர்ப்போமாக.
அல்லல் போம்

முருகன்

முருகனை முழுமுதற் கடவுளாக வணங்கும் சமயம் கெளமாரமாகும். தமிழரின்
முழுதற் கடவுள் எனவும் முருகனைப் பகர்வதுண்டு. எம்மனிதனும் மிக உயர்ந்த தெய்வ
கலாம் என்பதன் தெய்வக்காட்சியே முருகன் வடிவாகும். சூரபத்மனை அழித்து
ஒலகை உய்விக்கும் பொருட்டு உருவானவன் முருகன்.சிவனது ஐம்பொறிகளின்று
உருவான ஐந்து ஒளிப்பிழம்பு, மனத்தின்று உருவான மற்றோர் ஒளிப்பிழம்பு.இவை
றினாலுமான ஒளித்திரன் சரவணப் பொய்கையில் பிரவேசித்து றுமுகன் உருவானான்
எனபது விளக்கம்.சிவசொரூபம் சக்திசொரூபம் கிய இரண்டும் அமையப் பெற்றவன்
முருகன். மூலாதாரம், சுவாதிஷ்டானம் முதலிய உடலிலுள்ள 6 தாரங்களுக்கு
ஒப்பானது முருகனது அறுபடை வீடுகள். றுமுகப் பெருமானது சொரூப விளக்கமானது
பல்வேறு தத்துவங்களை எமக்குப் புகட்டுகிறது. ஐயபுலன்களையறியும் ஐம்பொறிகளும்.
எண்ண உதவும் நல்ல மனதும், முருகனது றுமுகங்களுக்கு ஒப்பானவை. முருகன்
பன்னிரு கைகளைக் கொண்டுள்ளமை மக்களுக்கு அவரின் ற்றலை ஞாபகப்படுத்துவதன்
பொருட்டேயாகும்.முயற்சியுடையவன் பலகையுடையவன் என்பது கோட்பாடு.

தைப்பூசத்தில் அழகன் முருகனைப்பற்றிக் கொள்ளவேண்டிய வழிமுறையினை
தெளிவாக விளக்கும் திருப்புகழின் 21- ம் பாடலையும், அறிவிலும், வயதிலும் மூத்த
பெரியவர் வாரியாரின் கூறுகிறார்.
வ்வறிய காலத்தே, முருகனை ஏன் படங்களிலும், பாடல்களிலும் சித்தரித்துள்ளனர்
என்று கொஞ்சம் சிந்தித்தல் அவசியமே
முகம் று - று சோதியாகவும், ற்றறிவாயும், றுதலையுடையதாக
இருப்பதால் முகம் று.றுதலைத் தருவதாலும் று முகமுண்டாயிற்
றென்று விளம்பலுமுண்டு.

கால் இரண்டு - தோன்றும் அறிவு, தோற்றுவிக்கும் அறிவு - என்ற
இரண்டறிவாகிய விடய உணர்வும், நிர்விடய உணர்வும் கும்.

கை பன்னிரண்டு - று தாரங்களிலுமுள்ள பிரகாச,அப்பிரகாசமாகும்.
தசாயுதம் - வச்சிரம் - தீட்சண்ய உணர்வு வேல் - சக்தி
(ச்சா, கிரியா,ஞானா சக்திகள்) - Potential & kinetic energy.

அபயம் - சமாதான உணர்ச்சி

வரதம் - நிராபரமாகிய தரவென்னும் சகிப்பு.

கடப்ப மாலை - சர்வ தத்துவ கண்டனம்.

மயில் - விசித்திர வடிவுடையதாகியதும், பல வர்ணமுள்ளதும், மறதி முதலிய
குணங்களுக்குக் காரணமானதும், விசித்திர மாயைக்கு ருப்பிடமானதுமான் மூலப்பிரகிருதி.

கோழி - மாச்சரியம்

தெய்வ யானை - தாந்தர தத்துவம்

கண்ட முதல் புருவ மத்தி வரை - மணி உருவு (சுப்பிரமணியன்)
உச்சியில் - ஒளி உருவு
புத்தியில் - சுத்த அறிவு

அநுபவத்தில், நித்தியமாயும் எங்கும் நிறைவாயும்,
கோணத்தில் றாயும்(ராயும்),மதங்களில் றாயும்,
சமயத்தில் றாயும் விளங்குபவனே சுப்பிரமணியம்.


ஞானிகள், கடவுளை எங்கும் கண்டு வணங்குவரென்றும்,
யோகிகள் ருதயத்தில் கண்டு வணங்குவரென்றும், கர்ம
காண்டிகள் அக்கினியில் கண்டு வணங்குவரென்றும்,
பத்திகாண்டிகள் விக்கிரகத்தில் கண்டு வணங்குவரென்றும் விதித்துள்ளது.

முருக வழிப்பாட்டில் குறிஞ்சி நிலத் தெய்வமாக போற்றப்படுகிறான். இயற்கையின்
வண்ணமெல்லாம் கொண்ட குன்றுதோறும் விளையாடுகிறான், பாலமுருகன்.
மாதந்தோறும் வரும் கார்த்திகைத் திருநாள் முருகப் பெருமானுக்கு உகந்த தினமாகும்.
மேலும் ஐப்பசி மாத சுக்கிலபட்ச பிரதமையன்று வரும். கந்தசஷ்டி நோன்பானது
முருகப்பெருமானுடைய சிறப்பான நோன்பாகும். இவ் று நாட்களில் போது
மக்களின் மனதிலுள்ள காமம்,வெகுளி, ஈயாமை, செருக்கு, பொறாமை என்னும்
று பகைகள் அழிக்கப்படுகின்றன. உருவாய் அருவாய் உளதாய் இலதாய் வீற்றிருக்கும்
முருகனை வணங்கி அருள் பெருவோமாக.
'' உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் குருவாய்
வருவாய் அருவாய் குகனே!''
*********************************************************************

சூரியன்.

சூரியனை முழுமுதற் கடவுளாக கொண்டு போற்றப்படும் சமயம் செளரமதமாகும்.
இன்றைக்கு பல்லாயிரம் ண்டுகளிற்கு முன்னரே நமது முன்னோர்கள் இயற்கையை
அன்புடன் வணங்கினார் என்கிறது பழம்பெரும் நூலான ரிக்வேதம். இயற்கையுடன்
நல்லிணக்கம் வைப்பதே அவர்களது சமயம் யிற்று. க இந்து மதத்தின் சகல
பிரிவினரும் சூரியனை வணங்கி வருதல் கண்கூடு. இயற்கை பொருகளுள் சூரியனே
முதன்மையான என்பதால் சூரியனை வழிபடும் முறை பண்டைக் காலந்தொட்டே
நடை முறையில் இருந்து வருகிறது. இயறகையோடு கொண்டுள்ள தெய்வீக
இணக்கமானது இயற்கைக்கு அப்பால் இறைவனைக் காண வழி வகுக்கிறது.
கண்கூடாக சூரிய பகவானை வானில் தெரிவதால் சூரிய வழிபாட்டில் விக்கரகங்களோ
கோயில்களோ அவசியமற்றதாகிறது. இதனால் சூரியபகவானை கண்கண்ட தெய்வம்
எனக் கூறுவதும் பொருத்தமானது. சூரியபகவானை தித்யம் (தேவர்க்கெல்லாம் தலைவன்)
திவாகரன்(பகல் செய்பவன்) பாஸ்கரன்(ஒளியை உண்டு பண்ணுபவன்) சூரிய நாராயணன்
(செயலில் தூண்டும் கடவுள்) என பல்வேறு பெயர்களில் குறிக்கப்பெறுகிறது.
சூரிய பகவானுக்குரிய மந்திரம் இவற்றுள் முதன்மை பெற்றது.
''யார் நம் அறிவை தூண்டுகிறாரோ அந்த சுடர்க்
கடவுளின் மேலான ஒளியை தியானிப்போமாக''
இதுவே சூரிய காயத்தீரியின் மூலப்பொருளானது.
பிரபஞ்சம் முழுதும் பரம்பொருளின் தோன்றி மீண்டும் அதனிடமே ஒடுங்குவது போல்
இப்பிரஞ்சத்தின் கண்ணுள்ள அழியாப் பொருள் சூரியனிடமிருந்து பூவுலகும், பூவுலகில்
வாழும் உயிர்களும் தோன்றி மீண்டும் அதனிடம் ஒடுங்கும் என்பது கோட்பாடு. சூரிய
சூரிய பகவனுடைய சொரூபம் இலட்சணமானது, பிரகாசமானது. பல்வேறு கருத்துக்களை
பொருள்களையும் கொண்டது.ஒற்றை சக்கரமுடைய இரதத்தை ஏழு பச்சைக் குதிரைகளை
இழுத்துச் செல்ல இடுப்புக்குக் கீழ் உடலற்ற பூஷன் என்னும் சாரதி ஒட்டுகிறான்.
ஒற்றை சக்கரமானது விண்ணில் சூரியனைக் காணும் பருதி வடிவத்தையும், ஏழு
குதிரைகளையும் ஒளியின் ஏழு நிறங்களையும், ன்மாவின் ஏழு பிறப்புகளையும்
ஏழு ஞான பூமிகளையும் குறிக்கின்றன.இரதத்தின் எழுந்தருயிருக்கும் சூரிய
பகவான சங்கு சக்கரத்தையும் ஏந்தியுள்ளார்.சங்கு சக்கரங்கள் பிரபஞ்சம் யாவும்
அவனிடமிருந்து வந்தவை என்பதையும் சக்கரமானது பிரபஞ்சமானது அவன்
ணையால் ஒழுங்குபாட்டுடன் இயங்கிறது என்பதையும் குறிக்கிறது.

இன்று செளரமதத்தவர் உலகில் எண்ணிக்கையில் குறைந்திருப்பினும்,
சூரிய பகவானை இந்துக்கள் மட்டுமன்றி உலகம் முழுவதுமே ராதிக்கும்
பண்பாடு பெருகி வருகிறது.

ஆக மொத்தத்தில் இறைவனின் திருவடிங்களும், வழிபாட்டு முறைகளும்
அவரவர் விருப்பத்திற்கும் வசதிக்கும் ஏற்ற வகையில் மாறுபடுகின்றன. கவே
எந்த, மதப்பிரிவும் இறைவனை அடைவதற்கான ஒரு மார்க்கமே என்பது
வெளிப்படை உண்மை. எம்மதமும், மதப்பிரிவும் இறுதியில் யாவற்றையும் கடந்து
நிற்கிற பரம்பொருளிடமே நம்மை அழைத்துச் செல்கிறது. இதையே நம்முடைய
இந்து மதமும் அதன் பிரிவுகளும் உணர்த்துகிறது. எனவே தன்மதத்தை போன்று
மற்றைய மதத்தையும் மதிக்கத் தெரிந்தவனே உண்மையான இந்து மதத்தவான்கிறான்.

நூல் குறிப்பு உதவி:--

வைணவ தோற்றம்.
கடவுளின் தத்துவம், தோற்றம்.
ஞான பூமி.

ஆகவே, அவரவர் நிலக்கு ஒத்தவாறு இறையை
வணங்குவோமாக.

அன்புடன்
கிருஷ்ணன்
சிங்கை