Saturday, September 30, 2006

திருமந்திரம் ஒரு பார்வை1

''திருமந்திரம்'' ஒரு பார்வை

மகத்துவங்களின் தொகுப்பு மனிதன்.தெய்வ நிலைக்கு மனிதன் உயரலாம்.
ஆயினும் அதனை உணர்ந்தோர்,சிலரே. உணராதோர் தாம் நம்மில் பலரே.
உணரத் தலைப்படுதல் ஆன்மீகம். உணர்ந்ததைக் கடைபிடித்தால் நன்னெறி.
உறைத்தலோ இன்றி மனிதனை நகர்த்தும் லெளகீகத்தில்,உழன்று கொண்டே
இருப்பதை அனுபவித்து கிடப்பது துர்கர்மம். ஆனால், உணரத் தலைப்படுதல்
என்பது நமக்கு ஞான வீதிக்கு வழிசொல்லும்....வழி செல்லும்

பிரம்ம ஞானத்தின் கதவுகள் திறக்கும். மனிதனின் நம்பிக்கைகளுக்கு
ஆதாரமாய் விளங்கும் சாஸ்திர உண்மைகள்,நெறிகள்,நமது தெய்த்திருப்
பாடல்களில் குவிந்து கிடக்கின்றன். அவற்றை வெளிக் கொணர்ந்து
மக்கள் மத்தியில் நிலைநிறுத்தம் முயற்சிகளே தெய்வப் பணியாகும்.

ஆன்மீகம் இன்றைய கால வேகத்திற்கு தமிழர்கள் ஈடுகொடுக்க
முனைந்து தெய்வத் தமிழ் பக்தி இலக்கியங்களில் இளைப்பாறும் பழக்கத்தை
இழந்து விட்டார்கள்.இந்நிலையில் நாளைய சந்ததியின் நிலையை சொல்ல
வேண்டியதே இல்லை. திருமந்திரம்,நன்னெறி நூலாக மட்டும் அமையவில்லை.
இன்றைய காலட்டத்திற்கு ஏற்ற விஞ்ஞான கண்ணோட்டமும் அதில் உண்டு.
கள்ளூண்ணாமை,புலால் உண்ணாமை,வாய்மை போன்ற நெறிகளை திருமந்திரம்
கொண்டிருக்கும் வேளையில் அதிலுள்ள 2-வது மந்திரத்தை எடுத்துக்கொண்டால்
'கரு உற்பத்தி'பற்றிய விஞ்ஞானப்பூர்வமான கண்ணேட்டத்தை கொண்டிருக்கிறது.
திருமுறைகளில் திருமந்திரம் 10வது திருமுறை.முதல் மூன்று திருமுறைகள்

திருஞான சம்பந்தர் எழுதிய தேவாரங்களாகும். அடுத்து மூன்று திருமுறைகள்

திருநாவுக்கரசர் எழுதிய தேவாரங்களாகும்.7வது திருமுறைகள் சுந்தரமூர்த்தி
நாயனார் எழுதிய தேவாரமாகும்.

8வது மாணிக்க வாசகர் எழுதிய திருவாசகம்,திருக்கோவையார்

ஆகியவை.9வதி திருமுறையாக திருவிசைப்பா,திருப்பல்லாண்டு குறிப்பிடப்படுகிறது.
நம்பியாண்டார் நம்பி போன்றோர் எழுதியவை.



12வது திருமுறை என்பது சேக்கிழார் எழுதிய பெரிய புராணம்.

சிவனடியார்களின் புகழ் மணக்கும் புராணம்.வருடம் ஒரு பாடலாக திருமந்திரத்தை
திருமூலர் எழுதினார் என்று குறிப்பிடப்படுகிறது. அவர் 3000 பாடல்களை 3000
ஆண்டுகள் எப்படி எழுதியிருக்க முடியும் எண்ணத்தோன்றும்.திருமந்திரத்தை
முடிப்பதற்காக யோக நிலையில் இருந்து எழுதியதாகக் கூறுவார்கள்.

9 தந்திரங்களாக திருமந்திரம் பிரிந்திருக்கிறது. மொத்தம் 232 அதிகாரங்களைக்
கொண்டது.அந்த வகையில் நமது திருமுறைகளிலேயே மிகச் சிறந்த பக்தி
இலக்கியமாகவும் மந்திரமாகவும் விளங்குகிறது.
நாம் அல்லாததை எல்லாம் நாமே என்று நினைக்கிறோம். நம்முடையது
அல்லாததை எல்லாம் நம்முடையது என்று நினைக்கிறோம்.
இங்கு ''நாம்'' என்பது என்ன? நம்முடையது எது என்ன? அதுதான்
உண்மையறியும் சிந்தனை. அதுதான் ஞானம்.. நாம் அல்லாததை நாம்
என்று நினைப்பதையும்,நம்முடையது அல்லாததை நம்முடையது என்று
கருவதையும் அர்ப்பணம் செய்துவிடவேண்டும். அதற்கான பயிற்சி நம்மிடம்
இல்லை. முயற்சி இல்லை. இந்நிலையில் ஞானம் எங்கிருந்து வரும்?

வேள்வி,சடங்கு,சாஸ்திரம்,பூஜைகள் என்றெல்லாம் நம்மை ஈடுபடுத்திக்
கொண்டிருக்கிறோம். இவற்றை முயற்சியாக எடுத்துக்கொள்ளலாம்.'இதனை

கிரியை என்பார்கள். ஒரு வகையில் நாம் ஞானத்தைப் பெற மேற்கொள்ளும்
முயற்சிகள் என்று ஏற்றுக்கொள்ளலாம்.ஆனால் வெறுமனே சடங்குகளில்
ஈடுபடுவதால் அந்த முயற்சி வெற்றி பெற்றுவிடாது.இதற்கு அப்பால் நமது

காரியங்களை உணர்ந்து செயல்படுதல் வேண்டும்.ஒரு பிரக்ஞை வேண்டும்.
பயிற்சி இல்லாமல் ஞானமில்லை. கிரியை என்பதும் அத்தகைய பயிற்சிதான்.
பொருளைக் கருதி அர்ப்பணம் செய்வதே கிரியை ஆகும்.
உடம்பு நம்முடையது அல்ல.இந்த உடம்பே நாம் என்று அர்த்தமல்ல.
இந்த உடம்பு செயல்பட பல்வேறு சூழல்கள் தேவைப்படுகிறது. அவற்றை
நமக்கு உருவாக்கித் தந்து நம்மை இயக்குகிறவன் இறைவன்.அதனை
இறைவன் செயல்படுத்துகிறான். உடம்பு நமக்கானது அல்ல.
'நான்' என்பது உண்மையல்ல.
அப்படி நடப்பதாக நினைத்தால் அது அகங்காரம்.இதனைத்தான் அர்ப்பணிக்க
வேண்டும்.இன்றைக்கு நம்மிடம் இருந்துவரும் சடங்கு சாஸ்திர முறைகள்,

வழிபாட்டு விதம் என்பதெல்லாம் வெறும் சடங்காகத் தோன்றுகிறது.
இருந்தாலும் உட்பார்வையில் இதற்கெல்லாம் அர்த்தங்கள் உண்டு.
புறப்பொருளை அர்ப்பணிப்பதோடு அகப்பொருளையும் அர்ப்பணிப்பதே
இதன் உள்ளார்ந்த நோக்கமாகும். உடம்பு ஒரு புறப்பொருள்.உயிர்
ஓர் அகப்பொருள்.புறத்தையும் அகத்தையும் தகுதியாக்குதலே அர்ப்பணம்.
நம்முடைய கடைசி அர்ப்பணம்தான் 'நான்' 'எனது' என்ற அகங்காரம்.
இதுவே முழு அறிவு. இது இறைவுணர்வுக்கு அடிப்படை.

சைவ சித்தாந்தத்தில் இதற்கு முக்கியத்துவம் உண்டு. அதாவது
சரியை.கிரியை,யோகம்,ஞானம் ஆகியவைதான் மூலக்கூறுகள்.
சரியை என்ற ஒழுக்கத்தாலும் கிரியை என்ற அர்ப்பணத்தாலும்
யோகம் என்பது பொருந்தி இருந்தாலும் ஞானம் என்ற அருளால்
இறைவுணர்தலுக்கு சைவ சித்தாந்தம் வழி கோலுகிறது.அதாவது
சரியையும்,கிரியையும் கொண்டுவந்த யோகத்தால் ஞானத்தை
எட்ட முடிகிறது.

இதில்,முதல் மூன்றிலும் நமக்குப் பயிற்சி தேவைப்படுகிறது.
இந்த பயிற்சிக்கு குருவாக இறைவனே முன் நிறகிறார்
என்பதுதான் சித்தாந்தம். இறைவன் ஒருவன் இருக்க -
அவனை முன்னிட்டே பிற யாவும் உண்டு என்கிறது

சித்தாந்தம். இறைவனைத் தவிர எதுவுமே இல்லை என்று சொலவது வேதாந்தம்.
சைவ சித்தாந்தம் உலகியலோடு முடண்படாவண்ணம் திகழ்கிறது.பிறவியுற்று
உலகியலில் வாழ்ந்து,கடந்து இறைவனை உணர்ந்து அடைதலே சைவ

சித்தாந்தம்.
நாம் அன்றாடச் செயல்களை மாற்ற வேண்டும்.அதற்கு மந்திரச்
சொல் வேண்டும்.அன்றாடச் செயல்கள் இன்பம்,துன்பம் நிறைந்தது.
ஆனால்,மந்திரச் செயல் அப்படியல்ல.மகிழ்வை மட்டுமே உணர்த்துகிறது.
அன்றாடம் செயல் மாற,மந்திர உபாஷனைகளில் ஈடுபடுதலாகும்.அன்றாட
வினையாகி உலகியலில் இருந்து பிறகு வைதீக வினையாகி,ஆன்ம
வினை,மார்க்க வினை,மந்திர வினை என்று மாற்றங்கள் பெறுகின்றன.
கடைசியாக மந்திர வினைதான். மந்திர வினை என்பது உயிருக்கு
வேண்டிய உபஷாந்தம்,விருப்பு,வெறுப்பற்ற நிலை.இதனை அடைய
மந்திர உபஷானை அவசியமாகிறது. அதனால் நமது வாழ்வியல்
திருமந்திரம் அவசியமாகிறது.


மந்திரம் என்பதே சொல்லுக்குள் பொருளை சுருக்கி வைத்து
அதனை உணரும்படி செய்தல் எனலாம்.ஒரே எழுத்தில் அடக்கி வைத்தல்.
உதாரணமாக நமசிவாய,சிவாய நம என்பதெல்லாம் மந்திரச் சொற்களே.
நமக்கும் உலகத்திற்கும் உள்ள தொடர்பு,நமக்கும் பிறருக்கும் உள்ள
தொடர்பு,நமக்கும்உடம்புக்கும்

உள்ள தொடர்பு,நமக்கும் இறைவனுக்கு உள்ள தொடர்பு ஆகியவற்றை
பொருளுணர்வை ஏற்படுத்துகின்றது மந்திரம்.உயிர்களுக்கு வேண்டிய அமைதி
நிலையை உணர்த்தவல்ல மந்திரமாக நமக்கு அருளப்பட்டிருக்கிறது 10வது

திருமுறையான திருமந்திரம்.
திருமந்திரத்தை நமக்கு தந்த திருமூலருக்கு அந்த ஆகமம் இறைவனால்
அருளப்பட்டது.இறைவனாகப் பட்டவன் தேவிக்கு அதனைச் சொல்ல,தேவி
அதனைத் தெய்வ முனிவர்களுக்குச் சொல்ல இந்த ஆகமம் உருவானது.
இந்தியத் தத்துவத்திலுள்ள 24 நெறிகளையும் கடந்து உண்மை நிலையை
உணர செய்ய தலைப் பட்டதே சைவ சித்தாந்தமாக விளங்குகிறது.சைவ
நெறி பரப்பும் நெறி நூல்களில் திருமந்திரம் முக்கியத்துவம் பெறுகிறது.
தோத்திர நூல் மட்டுமல்ல சாஸ்திர விளக்கமும் அதில் உண்டு.வழிபாட்டின் அவசியவத்தையும்

முக்கியத்துவத்தையும் திருமூலர் இதன் வழி உணரச் செய்கிறார்.தமிழர்களின்
வழிபாட்டுக்கு உகந்த மந்திரம் கொண்டு தனித்தமிழ் தெய்வ இலக்கியமாகவும்,
வழிபாட்டு நெறியாகவும் விளங்குகிறது.
உயிர்கள் கேவல நிலையில் இருப்பது என்பது ஓர் அறியா நிலை.
இந்த அறியா நிலையில் இருந்து மீளவேண்டும்.அறியாதை அறிய வேண்டும்..
அறிந்தவன் பிறருக்கு அறிவிக்க வேண்டும்.அப்போதுதான் அறியப்படும்.
திருமந்திரம் பொருளுணர்ந்து மக்கள் ஓதி உணரவேண்டும் என்றும்,
இளைய தலைமுறைக்கு இது சென்றடைய வேண்டும் என்பதே நமது ஆவா.
அன்புடன்,
கிருஷ்ணன்
சிங்கை

அன்புடன்,
கிருஷ்ணன்,
சிங்கை
..........................................
இன்பத் தமிழ் எங்கள் மொழி.
தமிழ் எமது மொழி.
என்றும் இன்பம் தழைக்க இருக்கலாம்
Krishnan,Singapore
For your Book Markhttp://ezilnila.com/saivamhttp://www.singai-krishnan.blogspot.com/

Monday, September 11, 2006

பாரதியார்-2

நல்லதோர் விணை

''பைந்தமிழ் தேர்ப்பாகன், அவனொரு
செந்தமிழ்த் தேனீ; சிந்துக்குத் தந்தை;
குவிக்கும் கவிதைக் குயில்; இந்நாட்டைக்
கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு;
நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா!
காடு கமழும் கற்பூரச் சொற்கோ!
கற்பனை யூற்றாம் கவிதையின் புதையல்!
திறம்பாடி வந்த மறவன்; புதிய
அறம் பாடி வந்த அறிஞன்; நாட்டிற்
படரும் சாதிப் படை மருந்து
மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்!
அயலார் எதிர்ப்பும் கணையா விளக்கவன்! ''
-- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.

மகாகவி பாரதியார் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர்.
அடிமை இருளை அகற்றத் தோன்றிய 'இளம் ஞாயிறு' 'எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய'
இந்த மண்ணில் சாதி மத வேறுபாடு அகன்றிட,அறியாமை இருள் நீங்கிட,சமுதாயம் சீர்பெற்றிட,
வறுமையை வெளியேற்ற 'எல்லோரும் ஓர் நிலை எல்லோரும் ஓர் நிறை'
ஆகவேண்டும் என்று கனவு கண்டவர்.

சொல் புதிதாகவும் பொருள் புதிதாகவும் கொண்டு பாடி, ஒப்பில்லாத ஓரு சமுதாயத்தை அமைக்க
முயன்றிட்டார். வயிற்றுக்குச் சோறிடவேண்டும்,பயிற்சி பல கல்வி தந்து தமிழ் சமுதாயத்தை இந்த
பாரையில் உயர்த்திட வேண்டும்.... ஞானமும்,பரமோனமும்,புத்தர் பிரானின் இன்னருளும் பொழிந்த
இந்த பழம்பெரும் பூமியில் மனவளம் பெற்று, கல்வியில் சிறந்திடவேண்டும் என்று தம் கவிதைக்
கனல் கொண்டு போக்கிட முயன்றிட்டான். காலம் படைத் திட்ட சிறந்த கவிஞன் என்றால்
அது மிகையாகாது.
............................................................................

1921ம் ஆண்டு ஜூலை - ஆகஸ்ட் மாதம் திருவல்லிக்கேணி கோயில் யானை தும்பிக்கையால்
தள்ளிவிட குவளை கண்ணன் காப்பாற்றுகிறார். அதிர்ச்சியால் நோயுறுகிறார். பின்னர் குணமாகி
அலுவலகமும் செல்கிறார். ஆனால் செப்டம்பர் மாதம் வயிற்றுக் கடுப்பு கண்டு படுத்த படுக்கையாகிவிடுகிறார்.
செப்டம்பர் 11ம் தேதி நோய் கடுமையாகி விட, பாரதி மருந்துண்ண மறுக்கிறார்.

செப்டம்பர் 12ம் தேதி இரவு அவர் எழுதி அவரால் மிக விரும்பப்பட்ட
"நல்லதோர் வீணை செய்து " பாட்டை பாடச் சொல்லி கேட்டிக்கார்.

பாரதியார் நல்ல,ஆரோக்கியமான உடலினை பெறாதவர் ஆகையால் தமது உடலுக்கு வலிமைத்
தருமாறு பராசக்தியிடம் வேண்டுகிறார்.மனித உடலை வீணையோடு ஒப்பிடுகிறார் பாரதியார். மனித
உடலை வீணையோடு ஒப்பிட்டு, அதனை சங்கீத சாத்திரப்படி நிரூபித்து காட்டுகிறார் இசைப்
புலவரான தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்.

பாரதியார், நல்லதோர் விணைக்கு நிகராக தம் உடலை கற்பனை செய்து,
'அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ ?
என்று பராசக்தியிடம் கேட்கிறார்.ஆரோக்கியமற்ற உடலை புழுதியில் எறிப்பட்ட
நல்லதோர் வீணைக்கு பாரதியார் ஒப்பிடுகிறார்.
''வல்லமை தாராயோ?'' என்றும் காளியைக் கேட்கிறார்.

தமது உடலுக்கு வலிமை தருமாறு கேட்பது தாமும் தமது குடும்பத்தாரும் வாழ்வதற்காக
அல்ல என்பதனையும் நாடு பயனுற வாழ்வதற்கே வல்லமை தாராயோ? என்று கேட்கிறார்.

உயர்ந்த இலட்சியங்களை கொண்ட நாட்டுப் பற்றுகொண்டவரானும் உறுதியுடைய
உடலை பெறாதவர் பூமிக்கு பாரந்தானே!

நல்லதோர் வீணைசெய்தே - அதனை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ ?
சொல்லடி சிவசக்தி! -எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்;
வல்லமை தாராயோ; - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி! - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?
''உடலுக்கு வல்லமை தாராயோ?'' எண்டு கேட்கும் பாரதி, எப்படிப்பட்ட வல்லமை என்பதையும் விளக்குகிறார்.

''விசையுறு பந்தினைப் போல் - உள்ளம்
வேண்டிய படி செல்லும் உடல் கேட்டேன்
நசையறு மனங்கேட்டேன் - நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்!
தசையினை தீச்சுடினும் - சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்;
அசைவறு மதிகேட்டேன்; - இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?

ஆம். விசையுறு பந்தினைப்போல் தம்முடைய உடம்பு தாம் விரும்புகிறபடி எல்லாம் வேகமாக
நடைபோட்டு, நாடு விடுதலை பெற உழைக்க வேண்டும்!துன்பங்களைக் கண்டு அஞ்சாத மனம்
வேண்டும், நித்தம் நித்தம் புத்துணர்ச்சியைப் பெறும் சக்தி தமது உயிருக்கு வேண்டும் என்று
வேண்டுகிறார்.

''தசையினை தீச்சுடினும் - சிவ
சக்தியைப் பாடும் அகங்கேட்டேன்''
என்னும் வரிகளிலே, பெரு நெருப்பு உடம்பை எரித்துக்கொண்டிருக்கும் நேரத்திலும் பராசக்தியைப்
பாடி பக்தி செய்கின்ற உள்ளம் தமக்கு வேண்டும் என்கிறார்.அத்துடன் மதியும் சலனமற்றுச்
செயல்பட வேண்டும் இன்பத்தைக் கண்டு மயங்காமல்,துன்பத்தைக் கண்டு மருளாமல் மதி
துணிவோடு செயல்பட வேண்டுகிறார். இவ்வளவுவையும் சொல்லிவிட்டு...,
-- ''இவை அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ''
என்றும் பராசக்தியிடம் நெஞ்சுரத்தோடு கேட்கிறார்.

வள்ளலார் ஆன்மிகத்தில் பாரதியாருக்கு முன்னோடியாக விளங்கியவர் எனலாம்.
மரணமிலாப் பெருவாழ்வு வேண்டுவதிலே பாரதியாருக்கு வழிகாட்டியவர் வள்ளலார்தான்
காற்றாலே அசைக்கப்படாத,புனலாலே மூழ்கடிக்கப்படாத, கனலாலே எரிக்கப்படாத,
கதிராதியாலே பாதிக்கப்படாத உடல் தமக்கு வேண்டுமென்று அம்பலவாணரிடம் முறையிட்டார்.

''காற்றாலே புவியாலே சுகனமத னாலே
கனலாலே புனலாலே கதிராதி யாலே
கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலே
கோளாலே பிற இயற்றும் கொடுஞ் செயல்க னாலே
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்தளித்தான் எனக்கே''

எந்நேரமும் தமிழ்க் கவிதைகளையேப் பாடிப்பாடி பராசக்தியை பக்தி செய்து வழிப்பட்டவர் பாரதியார்
''சக்தியென்று நேரமெல்லாம்
தமிழ்க்கவிதை பாடி,
பக்தியுடன் போற்றி நின்றால்
பயமனைத்தும் தீரும்...'' என்று முழக்கமிட்டவர்
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

ஆன்ற கவிஞர் அனைவோர்க்கும் முன் முதலாய்
தோன்றும் கவிதைச் சுடரொளியே நீ வாழ்க!
பேசுந் தமிழில் பெரும் பொருளைக் கூறிவிட்ட
வாசத் தமிழ் மலரே வாரிதியே, நீ வாழ்க!
தொட்ட தெல்லாம் பொன்னாகத் துலங்கும் கவிக்கடலே
பட்ட மரம் தழைக்கப் பாட்டெடுத்தோய், நீ வாழ்க !
எங்கே தமிழென்று என் தமிழர் தேடுகையில்
இங்கே தமிழென்று எடுத்து வந்தோய் நீ வாழ்க!
என்று கவிஞர் கண்ணதாசன் வாழ்த்தியதில் வியப்பொன்றுமில்லை.

பழமைக்கும் புதுமைக்கும் பாலமாகத் திகழ்ந்தவர். மரபு வழி வந்தவர் என்றாலும் அவர் மரபைக்
கண்மூடிப் போற்ற-வில்லை.பாமர மக்கள் அணுகும் வண்ணம் எளிய பதங்கள், எளிய நடை,எளிதில்
அறிந்துகொள்ளக்கூடிய சந்தம், பொது சனங்கள் விரும்பும் மெட்டு ஆகியவற்றைக் கொண்டு
இலக்கியம் படைத்தார்.அது உலக இலக்கியமாகதிகழ்கிறது.பாரதியாரே தம்முடைய கவிதைகளில்
பாங்கை உணர்த்த முற்படும்போது,

''சுவை புதிது; பொருள்புதிது; வளம்புதிது;
சொற்புதிது;சோதி மிக்க நவகவிதை;
எந்நாளும் அழியாத மாக்கவிதை.

என்று பூரிப்போடும் பெருமித்ததோடும் கூறியுள்ளார்.


மூட நம்பிக்கையின் முகமூடியைக் கிழித்தெறியத் தன் பாட்டையும், உரை நடையையும்
பயன் படுத்தினான் பாரதி.புதுமையைச் செய்ய விழையும் பாரதியார் அதைப் பொறுப்புடன்
செய்திருக்கிறார் என்பது ஒரு தனிச் சிறப்பு. புதுமையை மேற்கொள்ளும் முயற்சியில் பெண்மை
வரம்புகடந்து விடுமோ என்ற அச்சத்தையும் பாரதியார் போக்குகிறார். எழுச்சியுற்ற பெண்மை
அறநெறியினின்றும் திரும்ப மாட்டார்கள் என்று கூறுகிறார்.

புவியனைத்தும் போற்றிட வான்புகழ் படைத்த தமிழ்மொழியைப் புகழிலேற்றும் புலவர்கள்
இனி வரப்போவதில்லை.தமிழ்மொழியின் வளர்ச்சியில் ஒரு தேக்கம் ஏற்பட்டபோது
''நான் இருக்கிறேன்'' என்று மார்தட்டும் பெருமாளாக வந்தார் பாரதி.
இப்படி சமுதாய நோக்கில் மூடநம்பிக்கையின் முகமூடியைக் கிழித்து எறிய தன் பாட்டை,உரை
நடையும் பயன்படுத்தினான்.ஆனால்,அவன் கண்ட கனவு முழுவதும் நிறைவேறவில்லை. அரை
குறையாகத்தன் நிறைவேறியிருக்கிறது..அந்த பைந்தமிழ்ப் பாவாணன் கனவு நிறைவேற, அவன்
கண்ட கனவு நனவாக இந்த பாரதி நினைவு நாளில் நாமும் பாடுபடுவோமாக!
நன்றி, வணக்கம்.

அன்புடன்,
கிருஷ்ணன்,
சிங்கை
..........................................
இன்பத் தமிழ் எங்கள் மொழி.
தமிழ் எமது மொழி.
என்றும் இன்பம் தழைக்க இருக்கலாம்
Krishnan,Singapore
For your Book Mark
http://ezilnila.com/saivam
http://www.singai-krishnan.blogspot.com/

பாரதியார் - 1

பாரதியின் நினைவு நாள் 11-09-2006.

அதனை முன்னிட்டு பாரதியின் சில நினைவுகளை உங்களோடு பகிர்ந்துக்கொள்கிறேன்.

பாரதி ஒரு விடியலுக்காகப் பாடிய பிதா மகன்; பாட்டுத் திறத்தாலே இந்த வையத்தைப்
பாலித்திட வேண்டும் என்று பாடி அந்த எண்ணத்திலே மிகப்பெரும் வெற்றி கண்டவன்.
அவன் இன்று நம்மிடையே இல்லை. அவன் முகழ்க் கவிதைகளோடு மட்டுமே நாம்;
அவனைச் சொல்லும்போது தமிழகக் கவி என்றோ புதுவைக் கவிஞன் என்றோ
சுருக்கிச் சொல்லி விடாமல் தேசியக் கவி என்றும் மகா கவி என்றும் விரித்துச்
சொல்லி நாம் விலாசமானவர்கள் என்று அவன் விலாசம் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

பாரதி ஒரு பண்முகக் கவிஞன்; அவன் ஒரு கவிஞன் மட்டுமல்ல;
ஒரு சிறந்த தமிழாசிரியர்; சிறந்த பத்திரிக்கை ஆசிரியர்; ஒரு எழுத்தாளன்;
சிறந்த கட்டுரையாளன்; சிறந்த சிறுகதை எழுத்தாளர்; தலை சிறந்த
நாவலாசிரியன்; ஒரு சிறந்த நாடக கலைஞர்; ஒரு மனிதாபிமானி;
அவன் ஒரு அரசியல்வாதி; சமூகச் சீர்திருத்தவாதி; அவன் ஒரு தத்துவ ஞானி;
ஆங்கிலப் முலமையுள்ள இந்திய எழுத்தாளன்; அவன் ஒரு சிறந்த
மொழிபெயர்ப்பாளன்; தமிழைத் தாயாகப் போற்றியவன் பாரதி.
சமூகக் கொடுமைகளை எதிர்த்துச் சதிராடும் ஒரு போராளி அவன்;
இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்; அவனை ஒரு பட்டியல்
போட்டு அதற்குள் அடக்கிவிடமுடியாது;
தேசீயக் கவிஞாராக,விடுதலைக் கவிஞராக,புரட்சிக் கவிஞாராக,
புதுமைக் கவிஞாராக நாம் பாரதியைப் பார்த்தாலும் அடிப்படையில்
அவர் ஞான சித்தர்!
'எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாராப்பா!
யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்...'
என்று தம்மை ஒரு சித்தன் என்றே அவர் கூறிக்கொள்கிறார்.பக்தி நெறி பரவும் திருக்கூட்ட
மரபில் வாழையடி வாழையென வந்தவர் பாரதி.பொய் சாத்திரகளில் உள்ள புன்மைகளை
அவர் கடுமையாக சாடுகிறார்
''பொய்மைச் சாத்திரம் புகுந்திடின் மக்கள்
பொய்மை யாகிப் புழுவென மடிவர்''

எங்கும் நிறைந்த சிவசக்தியை பாடும் தம்மை மறந்து பாடுகிறார்.
பாரதியார் பராசக்தியை குறித்து பாடிய பாடல்கள் 55 -க்கு மேற்பட்டவை
அவர் பார்த்த பொருள் எல்லாம் பராசக்தியாகவே காட்சி அளித்தாள்.அதனால்தான்
இந்தியாவை 'பாரத தேவியாக' பார்த்தார்.
''சுதந்தர தேவி நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே!'
என்று பாடுகிறார்.

'காளியே! நீயே யாதுமாகி நிற்கின்றாய்! எங்குமாகி நீ நிறைந்துள்ளாய்.
எனில்,தீமையும் நன்மையும் உனது விளையாடுத்தானே! என்றார் பாரதி
''யாதுமாகி நினறாய்- காளி!
எங்கும் நீ நிறைந்தாய்;
தீது நன்மை எல்லாம் காளி!
தெய்வ லீலை அன்றோ?
பூதம் ஐந்து மானாய் - காளி!
பொறிகள் ஐந்து மானாய்
போதமாகி நின்றாய் - காளி!
பொறியை விஞ்சு நின்றாய்''

பாரதியார் 'பராசக்தி' என்னும் பெயரில் ஒரு தனி தெய்வத்தை வழிப்பட்டார் என்று
சொல்வதற்கில்லை.பரம்பொருளையே அவர் 'தெய்வம் ஒன்றே' என்ற நம்பிக்கையுடைவர்.
ஆகையால், 'ஒன்று பரம்பொருள்; நாம் அதன் மக்கள்'' என்றும் சாதித்தவர்.எம்மதமும்
சம்மதம் என்னும் கொள்கையுடைவர்.

நிலம்,நீ,நெருப்பு,காற்று,வான் என்ற ஐம்பூதங்களின் சேர்க்கையையே,அந்த சேர்க்கையின்
படைப்புக்களையே,அந்தப் படைப்புக்களின் இயக்கங்களையே பராசக்தியாகவே பாவித்து பாரதியார்
வழிபட்டார்.பூதங்கள் தோறும்ம்- புலன் தோறும்- பொறிகள் தோறும் கலந்து நிற்கும் பரம்பொருளையே
பராசக்தியாக வருணிக்கிறார்.

இதனை விளக்கமே 'சிவசக்தி' பாடல்.
இயற்கையென்று உனையுரைப்பார் - சிலர்
இயங்கும் ஐபூதங்கள் என்றிசைப்பார்
செயற்கையின் சக்தியென்பார் - உயிர்த்
தீயென்பர், அறிவென்பர்,ஈசன் என்பர்
அன்புறு சோதியென்பார் - சிலர்
ஆரிகுட் காளியென் றுனைப்புகழ்வார்
இன்பமென றுரைத்திடுவார் - சிலர்
எண்ணருந் துன்பமென்றுநுனை யிசைப்பார்
மின்படு சிவசக்தி - எங்கள்
வீரைநின் திருவடி சரண் புகுந்தோம்

காண்பதெல்லாம் காளியின் வடிவமாகப்படுகிறது பாரதிக்கு!

நாளை ''நல்லதோர் விணை'' காண்போம்..




அன்புடன்,
கிருஷ்ணன்,
சிங்கை
..........................................
இன்பத் தமிழ் எங்கள் மொழி.
தமிழ் எமது மொழி.
என்றும் இன்பம் தழைக்க இருக்கலாம்
Krishnan,Singapore
For your Book Mark
http://ezilnila.com/saivam
http://www.singai-krishnan.blogspot.com/

பாரதி பயணத்தின்......ஒரு சிறு குறிப்பு.

எட்டயபுரத்து கவிதைக்கரசன் பாரதி நடத்தி முடித்த பயணத்தின்....... ஒரு சிறு குறிப்பு.

1882 : டிசம்பர் 11, கார்த்திகை 27 ம் தேதி பாரதி பிறந்தார். எட்டயபுரத்தில் தந்தை
சின்னச்சாமி அய்யருக்கும் தாய் லட்சுமி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார்.
பெற்றோர் வைத்த பெயர் சுப்பிரமணியன். செல்லப் பெயர் சுப்பையா.

1887 : பாரதியாரின் தாய் லட்சுமி அம்மாளுக்கு மரணம் சம்பவித்தபோது, அவருக்கு வயது 5.

1889 : தந்தை மறுமணம். சுப்பையாவுக்கு பூணூல் போடும் சடங்கு;
கவி இயற்றும் ஆற்றல் வெளிப்படுகிறது.

1893 :11 வயதான சுப்பையாவை எட்டயபுரம் சமஸ்தானப் புலவர்கள் சோதித்து,
கவித் திறனை வியந்து கலைமகள் சுப்பையாவின் நாவில் குடி கொண்டிருக்கிறாள்
என்று சொல்லி " பாரதி " என்ற பட்டத்தை வழங்கிக் கெளரவிக்கின்றனர்.

1894 - 1897 : திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் ஐந்தாம் படிவம் வரை பயிலுதல்;
தமிழ் பண்டிதர்களுடன் விவாதங்களில் கலந்து வெற்றி கொள்ளுதல்.

1897 : ஜூன் மாதம் 15ம் தேதி பதினான்கரை வயது பாரதிக்கும் ஏழு வயதுச்
செல்லம்மாளுக்கும் திருமணம் நடந்தேறுகிறது.

1898 : ஜூன் மாதம் தந்தை திடீர் என மாரடைப்பால் மரணம். மிகுந்த துயரடைகிறார் பாரதி.

1898 :மறு மாதமே, பாரதியின் அத்தை ருக்மணி அம்மாள் என்ற குப்பம்மாள்
பாரதியை காசிக்கு அழைத்துச் செல்லுகிறார்.

1898 - 1901 : அலகாபாத்தில், எட்டாவது வகுப்பில செயநாராயண் உயர்நிலைப்
பள்ளியில் சேந்தார். இரண்டு வருடத்தில் பத்தாவது முடித்து அலகாபாத்
யூனிவர்சிட்டி மேற்பார்வையில நடந்த தேர்வில் முதல் வகுப்பில் பாஸ்
செய்கிறார். இந்து சர்வகலா சாலையில் சமச்கிருதம், இந்தி பயின்றார்.
அப்போதுதான் கச்சம், வால்விட்ட தலைப்பாகை, மீசைப் பழக்கம் எல்லாம்
பாரதியின் உருவத்தில் மாற்றம் ஏற்பட்டது.

1902 - 1904 : எட்டயபுரம் வருகை. விருப்பமில்லா வேலையான மன்னருக்குத்
தோழர் வேலை. மதுரை விவேக பாநுவில் " தனிமை இரக்கம் " என்ற
முதல் பாடல் அச்சேறுகிறது. மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளியில்
1904 ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை தமிழ் ஆசிரியர் பணி. பின்னர்
சென்னை வந்து சுதேச மித்திரனில் உதவி ஆசிரியர் பொறுப்பேற்பு.
சக்கரவர்த்தினி மாதப் பத்திரிக்கையில் ஆசிரியராகவும் ஆகிறார்.

1905 - 1906 : பாரதி அரசியலில் தீவிரமாகிறார். காசி காங்கிரஸ் கூட்டத்தில்
கலந்து கொள்ளச் சென்று விவேகானந்தரின் சிசியை நிவேதிதா தேவியைச்
சந்தித்து அவரை ஞான குருவாக ஏற்றல். 1906 ஏப்ரலில் "இந்தியா "
வாரப் பத்திரிக்கை உதயம். பாரதி பொறுப்பாசிரியராகிறார். மண்டபம்
ந. திருமலாச்சாரி, எஸ்.சிறீ.நிவாஸாச்சாரியார், சா.துரைசாமி அய்யர்,
வி.சக்கரைச் செட்டி, வ.உ.சி. ஆகியோருடன்

நட்பு ஏற்படுதல். பால பாரதா ஆங்கில வாரப் பத்திரிக்கை ஆரம்பம்.

1907 :டிசம்பர் மாதம் சென்னையில் இளைஞர் படையைத் திரட்டி சூரத் அழைத்துச்
செல்கிறார். காங்கிரசில் பிளவு ஏற்பட திலகர், அரவிந்தர், லாலாலஜபதி ராய்
ஆகியோருடன் பாரதி சந்திப்பு நிகழுகிறது. வி.கிருஷ்ண சாமி அய்யர் பாரதியின்
சுதேச கீதங்கள் பாடல் தொகுப்பை அச்சிட்டு இலவசமாக விநியோகிக்கிறார்.


1908 : சுயராஜ்ய தினம் சென்னையில் பாரதியாலும், தூத்துக்குடியில் வ.உ.சி. யாலும்
மற்றும் சுப்பிரமணிய சிவா,சுதேசி பத்மநாப அய்யங்கார் முதலியோரால்
கொண்டாடப்படுகிறது. சிறைத் தண்டனை. வழக்கில் பாரதி சாட்சியமளிக்கிறார்.
புதுவைக்குப் புறப்பட்டுப் போகிறார்.

1908 ஖ 1910 : சுதேச கீதங்கள் கவிதைத் தொகுதியை பாரதி முதல் நூலாக
வெளியிடுகிறார். இந்தியா பத்திரிக்கை ஆசிரியர் கைது. பாரதிக்கு கைது
வாரண்ட். பாரதி தப்பிப் போய் புதுவையில் இந்தியாவை வெளியிடும்
முயற்சியில் ஈடுபடுகிறார். குவளைக் கண்ணன் சந்திப்பு.. புதுவையிலிருந்து
இந்தியா அச்சிட்டு பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மீது நெருப்பு மழை பொழிகிறது.
பிரிட்டிஷ் அரசாங்கம் தடை செய்ய இந்தியா பத்திரிக்கை நின்று போகிறது.
பாரதி ஏற்பாட்டின் பேரில் அரவிந்தர் புதுவை வந்து சேருகிறார். பாரதியின்
" சன்ம பூமி " வெளியீடு. நவம்பரில் கனவு வெளியீடு. வ.வே.சு. அய்யர் வருகை.

1911 : மணியாச்சியில் கலெக்டர் ஆசு துரை கொலை. புதுவை தேச பக்தர்கள் மீது சந்தேகம்.
போலீஸ் கெடுபிடிகள் அதிகரிப்பு. பாரதியின் சிசியகோடிகள் பெருகுகின்றனர்.
1912: உழைப்பு மிக்க வருடம். கீதையை மொழி பெயர்க்கிறார். கண்ணன் பாட்டு,
குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் எழுதப் பெறுகின்றன. பாஞ்சாலி சபதம் முதல்
பாகம் பிரசுரமாகிறது.

1913 - 1914 :சுப்பிரமணிய சிவாவின் ஞானபாநு பத்திரிக்கைக்கு எழுதுகிறார்.
முதல் உலகப் போர் துவக்கம். தென் ஆப்பிரிக்காவில் மாதா மணி வாசகம்
நூல் பிரசுரம். சின்னச் சங்கரன் கதை கையெழுத்துப் பிரதி நின்று போதல்.
( இந்த ஆவணமெல்லாம் திரட்ட முடிந்தால் எப்படி இருக்கும்?)

1915 : பாப்பாப் பாட்டு உதயம்.

1917 :கண்ணன் பாட்டு முதல் பதிப்பை பரலி நெல்லையப்பர் சென்னையில் வெளியிடுகிறார்.

1918 :புதுவை வாசம் சலித்துப் போய் சென்னை வரும் பாரதியை கடலூர் அருகே நவம்பர்
20ம் தேதி கைது செய்து 34 நாட்கள் சிறை வாசம். வழக்கில் பாரதி விடுதலையாகிட
நேரே மனைவி செல்லம்மாளைத் தேடி கடயம் வருகிறார். திருவனந்தபுரம், எட்டயபுரம்,
காரைக்குடி, கானாடுகாத்தான் போய் வருகிறார். எட்டயபுர மன்னருக்குச் சீட்டுக்
கவிகள் பயனில்லை என்ற முடிவு. தாகூருடன் நோபல் பரிசுக்காகப் போட்டியிட
விருப்பம். ஆனால் ஆசை நிறைவேறவில்லை.

1919 :மார்ச் மாதம் சென்னைக்கு விஜயம் செய்கிறார். ராஜாஜி வீட்டில் காந்திஜியைச் சந்திக்கிறார்.

1920 :டிசம்பர் மாதம் மீண்டும் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக வேலை.
பாரதி நிறைய கட்டுரைகள் எழுதுகிறார்.

1921 :ஜூலை - ஆகஸ்ட் திருவல்லிக்கேணி கோயில் யானை தும்பிக்கையால் தள்ளிவிட
குவளை கண்ணன் காப்பாற்றுகிறார். அதிர்ச்சியால் நோயுறுகிறார். பின்னர் குணமாகி
அலுவலகமும் செல்கிறார். ஆனால் செப்டம்பர் மாதம் வயிற்றுக் கடுப்பு கண்டு படுத்த
படுக்கையாகிவிடுகிறார். செப்டம்பர் 11ம் தேதி நோய் கடுமையாகி விட, பாரதி
மருந்துண்ண மறுக்கிறார்.

செப்டம்பர் 12ம் தேதி இரவு அவர் எழுதி அவரால் மிக விரும்பப் பட்ட "நல்லதோர் வீணை செய்து "
பாட்டை பாடச் சொல்லி கேட்டிருக்கார்.

அங்கிருந்த பாரதி தம்பி விசுவநாதன் பாடியிருக்கார்.கடைசியாக அந்தப் பாட்டைக்
கேட்டுக் கொண்டே தன் உயிரை விட்டிருக்கார். அப்போது நள்ளிரவு தாண்டி மணி
1.30. 39 வயது நிரம்பாத நிலையில் தன் நிறைவேறாத பாரத தேச விடுதலைக்
கனவுகளுடன் இந்த மண்ணுலக வாழ்க்கையிலிருந்து விடுதலை
பெற்று விண்ணுலகம் ஏகினார்.








அன்புடன்,
கிருஷ்ணன்,
சிங்கை
..........................................
இன்பத் தமிழ் எங்கள் மொழி.
தமிழ் எமது மொழி.
என்றும் இன்பம் தழைக்க இருக்கலாம்
Krishnan,Singapore
For your Book Mark
http://ezilnila.com/saivam
http://www.singai-krishnan.blogspot.com/

Friday, September 08, 2006

அருணாச்சல மகிமை - பகுதி2/2

திருவண்ணாமலையில் கிரிவலம் [மலை வலம் வருதல்]

எங்காவது துவங்கி,எப்படியாவது முடிக்ககூடாது.மலையை சுற்றி 14 கி.மீ. பக்தர்கள் நடந்தே செல்ல வேண்டும். வாகனங்களில் செல்லுதல் கூடாது..இடமிருந்து வலமாக மட்டுமே சுற்ற வேண்டும். மலைசுற்றும் போது கைகளை வீசிக்கொண்டும், பேசிக்கொண்டும் நடக்க கூடாது. சாதாரணமாக நமச்சிவாய நாமத்தை உச்சரித்துக்கொண்டு நடந்து செல்லவேண்டும். இந்த மலையை அங்கப்பிரதட்சணம் செய்த காலங்களும் உண்டு. இப்போதும் பலரும் அங்கப்பிரதட்சணம் செய்வதுண்டு.
அது சாத்தியமில்லாது போது நடந்து சென்றாலே போதும். எல்லா மாதங்களும் கிரி வலத்திற்கு ஏற்ற மாதங்களான போதும் ஐப்பசி,கார்த்திகை, மார்கழி, பெளர்ணமி காலங்கள் மலை வலத்திற்கு ஏற்ற காலங்களும்,மாதங்களும் கும்.

மலை வலம் வரும்போது அருணாசலேஸ்வரின் கிழக்கு கோபுரத்தில் துவக்கி முடிக்கும் போது அருணாசலேஸ்வரரை வணங்கினால் தான் மலைவலம் முடித்தாக அர்த்தம். அருணாசலேஸ்வரரின் கிழக்கு வாயிலில் இருந்து மலை வலம் வர ரம்பிக்க வேண்டும். மலையின் எட்டு திசைகளிலும் தன் பாவங்களை போக்குவதற்காக அஷ்டதிக்கு பாலகர்களில் கிழக்கு அதிபதியான இந்திரன் வழிபட்ட இந்திரலிங்கத்தை வழிபடவேண்டும்.பிறகு மலை சுற்றும் சாலையில் நந்திகேசுவரர் சன்னதி உண்டு. இங்கு வணங்கி வழிபட்டு தான் மலைவலம் வரவேண்டும். ஏனெனில் மலை சுற்றுகையில் நமக்கு சிவன் அளித்த அதிகார மூர்த்தி அவர். அடுத்து தென்கிழக்கு திசைக்கு அதிபதி அக்னி பூஜை செய்த அக்னி லிங்கம் உள்ளது. இதன் அருகில் சிம்ம தீர்த்தம் உள்ளது.இந்த தீர்த்தத்தின் கரையில் அரிச்சந்திர மகாராஜாவின் சிலை ஒன்றும் உள்ளது.அதன் வழியே சென்றால் பிருங்கி மகரிஷி முனிவரின் வழிபாட்டு தலம் உள்ளது. அடுத்து தெற்கு திசைக்கு அதிபதி எமன் பூஜை செய்து வழிப்பட்ட எமலிங்கம் உள்ளது.

எமன் கட்டளை நிறைவேற்றும் கின்னர் முதலானோர் இங்கிருந்து தான் புறப்பட்டு செல்லுகின்றனர் என்ற ஐதீகம் உள்ளது.இங்கு தியானம் செய்தால் நம்மிடையே உள்ள தீய எண்ணங்கள் மறையும் நினைக்கின்ற செயல்கள் நிறைவேறும்.

அடுத்து மகாசக்தி மாரியம்மன் கோயில் உள்ளது.இந்த கோயிலில் மஞ்சள் கயிற்றில் தொட்டில் செய்து அங்குள்ள மரத்தில் தொங்குவதை காணலாம்.இந்த மரத்தில் அங்ஙனம் கட்டினால் குழந்தை வரம் அளிப்பதாக கூறப்படுகிறது.

தென்மேற்கு திசைக்கு அதிபதியான நிருதி சிவனை வழிப்பட்ட நிருதி லிங்கம் உள்ளது. இங்கு வணங்கிய பின்பு தெற்கிலிருந்து மேற்கில் திரும்பும் வளைவில் நின்று மலையை பார்க்க வேண்டும்.இந்த இடம் பார்வதி தேவிக்கு ரிஷப வாகனத்தில் சிவபெருமான காட்சி அளித்த இடம். ஆதலால் இங்கு மலையின் முகப்பில் நந்தியின் தலை திரும்பி நம்மை பார்ப்பது போல் இருக்கும். அதை வணங்கி செல்ல வேண்டும்.

அடுத்து அருணாசலேஸ்வரின் கோயிலுக்கு நேர் எதிரில் திருநேர் அண்ணாமலை கோயில் உண்டு.இங்கு உண்ணாமுலை அம்மன் தீர்த்தம் அருகிலேயே உள்ளது. ஞ்சனேயர் சன்னதி, ராகவேந்திரா லயம்,முருகன் லயம் உள்ளது.இங்குள்ள முருகன் சிலை பழநி மலை சித்தர் போகரால் நிர்மாணிக்கப்பட்டது. பழநியில் நவபாஷாண சிலை அமைத்த போகர் இங்கு மூலிகைகளால் சிலை அமைத்தார் (இந்த சிலை நவாப்புகள் காலத்தில் திருட்டு போய்விட்டது) அடுத்து இராஜராஜேஸ்வரி ஆலயம் புதுப்பித்து புத்தொளியுடன் இருக்கிறது. இராஜராஜேஸ்வரி ஆலயத்திற்கு நேர் எதிரில் மலை அடிவாரத்தில் கண்ணப்பர் கோயில் அமைதியான சூழ்நிலையில் குளிர் மரங்களுக்கு இடையில் இருக்கிறது.

தியானத்திற்கு ஏற்ற இடம்.சாதுக்களும், ஆங்கிலேயரும் இங்கு தியானத்தில் அமர்ந்திருப்பதைக் காணலாம். இராஜராஜேஸ்வரி லயம் அடுத்து, கவுதம மகரிஷி கோயில் இருக்கிறது. கவுதம மகரிஷி இங்கு வந்து வழிபாடும், நிஷ்டையிலும் இருந்ததாக சொல்லப்படுகிறது.அடுத்து சூரியன் வழிபட்ட லிங்கம். மேற்கு திசைக்கு அதிபரான வருணன் வழிபட்ட லிங்கம் உள்ளது.

அதன் பிறகு பிரம்மன் வழிபாடு செய்து பாவங்களை போக்கி கொண்ட தி அருணாசலேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலை அடி அண்ணாமலையார் என்று அழைப்பர்.அருகில் மாணிக்க வாசகர் கோயில் உள்ளது. அகஸ்தியர் குளம் உள்ளது.அதற்கடுத்து வடமேற்கு திசைக்கு அதிபதியான வாயு லிங்கம் உள்ளது. சிறிது தூரம் சென்றால் வட திசைக்கு அதிபதியான குபேரன் வழிபட்ட குபேரன் லிங்கம் உண்டு.

அடுத்து இடுக்கி பிள்ளையார் கோயில் உள்ளது.இதனை கோயில் என்று சொல்லுவதை விட சுளுக்கும்,உடல் வலி தீர்க்கும் இடம் எனலாம்.முன்காலத்தில் கடவுளின் பெயரை கூறி பக்தியும், ஒழுக்கத்தினை வளர்த்தார்கள். அதே போல் இதுவும் ஒன்று.இந்த கோயிலில் நுழைத்து ஒருக்களித்து வெளியே வரவேண்டும். ஒரு அடி அகலத்தில் உடம்பை ஒருகளித்த படி வரவேண்டும்.அப்படி இல்லை என்றால் உடம்பு சிக்கி கொள்ளும். அதிலிருந்து விடுபடுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.. அப்போது உடம்பில் ஏதாவது சுளுக்கு,வலி இருந்தால் விலகிவிடும்.

ஆனால், உடம்பு மாட்டிக் கொள்ளாமல் வெளியே வரவேண்டும் என்ற் எண்ணத்தில்
அங்குள்ள பிள்ளையாரை தரிசிக்க எண்ணம் வருவதில்லை. அதனால் தான் அய்ம்பூதங்களையும் அடக்கினால் தான் வாழ்வில் உயர்வடைய முடியும் என்ற ஒப்பற்ற தத்துவத்தை இடுக்கு பிள்ளையார் காட்டுகிறார்.

இங்கிருந்து மலையை பார்த்தால் ஐந்து முகங்கள் தெரியும்.இது சிவனின் ஐந்து
திருமுகங்களை குறிக்கக்கூடியது.அடுத்து மலை வல பாதையில் இருந்து சுடுகாட்டுக்கு பிரியும் தனிப் பாதையில் சென்றால் வட கிழக்கு அதிபாரான ஈசானன் வழிபட்ட ஈசான லிங்கம் உள்ளது. இதனையும் வழிபட்டு அதன் பிறகு அருணாசலேஸ்வரர் கோயில் சென்று தரிசித்த பிறகுதான் மலைவலம் பூர்ணத்துவம் அடைகிறது. எல்லா தீர்த்தங்களிலும் ஒவ்வொரு சிறப்பு உண்டு என்றாலும்,துர்க்கையம்மன் கோயிலுக்குள் கட்க தீர்த்தம் மிகச்சிறந்த தீர்த்தமாக போற்றப்படுகிறது.மகிடாசுரனை வதம் செய்த பார்வதிதேவியின் பாபம் போக்குவதற்கு துர்க்கையம்மன் வாள் (கட்கம் என்றால் வாள்) வீசி தோற்றுவித்தது.

மலை வலம

மலை வலம் வர சிறந்த, சிறப்பான நாள்

புராண காலத்தில் பார்வதி தேவியார் சிவனின் இடப்பாகம் பெற வேண்டும் என்பதற்காக கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத்தில் விழா எடுத்து மலையை வலம் வந்தார்.அப்போதுதான் சிவன் காட்சி தந்து உமையாளுக்கு இடப்பாகம் அளித்தார் என்பது வரலாறு. சித்தர்கள், ஞானிகள் கியோர் ஒவ்வொரு மாதப்பிறப்பு மற்றும் பிரதோஷ காலத்தில் மலை வலம் வந்தனர்.

அதன் பின்னர் பெளர்ணமி அன்று மலைவலம் வர ரம்பித்தார்கள்.சந்திரன் நம் மனத்துக்கு (எண்ணத்திற்கும்) காரகன். அன்று பூமியில் சூரியனிடமிருந்து சக்திகளை அதிகளவில் பெற்று பூர்ண நிலவாக சந்திரன் நிறைந்த உயிர்களை தருகிறார்.இதனால் பெளர்ணமி மலை வலம் வருவது சாலச்சிறந்தது என பெரியோர்களால் போற்றப்பட்டது. மனோன்மணியான சக்தி சிவனுடன் இரண்டற கலக்கும் இந்த நாளில் வழிபடும் பக்தர்களுக்கு விசேஷ சக்திகளை வழங்குகிறது என முனிவர்கள் கூறுகின்றனர்.

இதை விஞ்ஞானமும் உறுதிபடுத்துகிறது.இதை விட அதிசூட்சம் நாளாக வியாதீபாத
யோக நாள் அன்று மலை வலம் வந்தால் நினைத்த காரியம் சித்தி அடையும் என்று கோயில்
குருக்கள் கூறுகின்றனர்.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

செவ்வாய் சிறப்பு.

சிவன் கோயில்கள் அனைத்திலும் சிறப்பு வழிபாடு திங்கள்கிழமையாக இருக்கும்.
ஆனால், திரு அண்ணாமலை அக்னி மலை.இதனால் தான் அருணாசலம் என்ற பெயரும் உண்டு. அருணம் என்றால் சிவப்பு என்று பொருள்.இந்த கோயில் அக்னி கோயில்.அக்னிக்குரிய நாள் செவ்வாய்கிழமை.அக்னிக்குரிய கிரகம் அங்காரன்.கவே இந்த கோயிலில் மட்டுமே சிவ பெருமானுக்கு செவ்வாய்கிழமை அன்று விசேஷ வழிபாடு நடக்கும். அதுபோலவே செவ்வாய்க்கிழமை அன்று வழிபடுவோர் பிறவி பிணியிலிருந்து விடுபடலாம் என்று புராணங்கள் கூறுகிறது.

மலை வலத்தினால் கிடைக்கும் நன்மைகள்

ஆயுளைக்கூட்டும் ற்றல் கொண்டது திருக்கடையூர். சனித்தொல்லையில் இருந்து விடுப்பது திருநள்ளாறு.நோய்களில் இருந்து நம்மை காப்பது வைத்தீஸ்வரன் கோயில்.அது போல் ஊழ்வினைகளை நீக்கக்கூடியது அண்ணாமலையார் கோயில். பிறவிப்பிணி நீங்க வேண்டும் என விரும்பும் எவரும் மலை வலம் வருவதால் தத்தம் கர்மாவை குறைத்து கொள்ள முடியும். அண்ணாமலையை சுற்றி வருவது சம்சாரக்கடலை கடக்கும் தெப்பமாக அமையும்.அதுபோல் ஏழு நகரங்களையும் கடந்து முக்தி அடையும் ஏணியம்மன் கோயிக்குள் கட்க தீர்த்தம் மிகச்சிறந்த தீர்த்தமாக போற்றப்படுகிறது. மகிடாசுரனை
வதம் செய்த பார்வதி தேவியின் பாபம் போக்குவதற்கு துர்க்கையம்மன் வாள் வீசி தோற்றுவித்தது.

மலை சுற்றி வரவேண்டும் என நினைத்து ஓரடி எடுத்து வைப்பவர்களுக்கு ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும்.இரண்டாம் அடி எடுத்து வைத்தால் ராஜிய யாகம் செய்த பலன் கிடைக்கும் மூன்றடி எடுத்து வைத்தால் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.நான்காவது அடி எடுத்து வைத்தால் எல்லா யாகங்களும் பலன் கிடைக்கும்.நினைப்பவர்களுக்கே இந்த பலன் என்றால் மலை சுற்றுபவர்களுக்கு கிடைக்கும் பலன் கைலாசத்திற்குள், நுழைந்து பிறப்பு இறப்பாகிய பிணி நீங்கி உயர் பதவி கிடைக்கபெறுவார்கள் என்று அருணாசல் புராணம் தெரிவிக்கிறது. நம்பிக்கைதான் வாழ்க்கை. இன்று படுக்கும் போது நாளை காலையில் எழுந்து விடுவோம்
என்ற திட நம்பிக்கையில்தான் துயில் கொள்கிறோம். நம்பிக்கைதான் நமது உயிர் மூச்சு. நம்பிக்கையால்தான் எல்லாவற்றியும் சாதிக்கிறோம்.நம்பிக்கை இல்லாதவர் இந்த உலகில் வெற்றி பெற முடியாது.

எனவே பூரணமான நம்பிக்கையோடு தொடங்குங்கள். மலையை சுற்றும் போது சிவலிங்கம், சிவன்,சிவம் என்ற எண்ணத்தோடு வலம் வர தொடங்கினால், நீங்கள் நினைத்த எண்ணங்கள் கண்டிப்பாக நிறைவேறும்


ஞாயிற்று கிழமை சுற்றினால் சிவபதவி கிடைக்கும்
திங்கள் கிழமை சுற்றினால் இந்திர பதவி கிடைக்கும்.
செவ்வாய் கிழமை சுற்றினால் கடன்,வறுமை நீங்கும்.
தொடர்ந்து வரும் ஏழு பிறப்புகளை நீக்கி சுபிட்சும் பெறலாம்.
புதன்கிழமை சுற்றினால் கலைகளில் தேர்ச்சியும் முக்தியும் கிடைக்கும்.
வியாழக்கிழமை சுற்றினால் ஞானிகளுக்கு ஒப்பான நிலையை அடையலாம்.
வெள்ளிக்கிழமை சுற்றினால் விஷ்ணு பதம் அடையலாம்..
சனிக்கிழமை சுற்றினால் நவக்கிரகங்களை வழிப்பட்டதன் பயன் கிடைக்கும்.
நாற்பத்தெட்டு நாட்கள் அதிகாலையில் கணவனும்,மனைவியும் நீராடி
மலைவலம் வந்தால் மகப்பேறு கிடைக்கும்.
அமாவாசை அன்று சுற்றினால் மனதில் உள்ள கவலைகள் போகும்.
மனம் நிம்மதி அடையும்.

மலை வலம் வரும் போது பக்தர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்
என்பதை அருணாசல புராணத்தில் பிரம்மன் தெரிவிக்கிறார்.

மலை வலம் வரும் பக்தர்கள் அன்றைக்கு பெண்களை நினையாமலும், அவர்களோடு சேராமலும், நீரில் மூழ்கி, தூய்மையான் டையை உடுத்திகொண்டு விபூதி அணிந்து,தானம் தாம் கொடுத்து ஒருவரிடத்தும் தானம் வாங்காமல் காலினால் நடந்து வரவேண்டும்.மலையை சுற்றி இருக்கின்ற தேவர்களையும் முனிவர்களையும் வணங்கி சட்டையும்,போர்வையும் நீக்கி குடை பிடியாமல்,செருப்பு அணிப்பணியாமல்,பயம், கோபம், சோகம், இவற்றை நீக்கி குதிரை,யானை இவற்றின் மீது ஏறாமல் தாம்பூலம் தரிக்காமல், சிந்தையை சிவன்பால் செலுத்தி வலம் வரவேண்டும். கையை வீசிக்கொண்டு
போகாமலும், மனச் சோர்வில்லாமல், ஆர்வத்தோடு கைகளை தலை மேல் குவித்து கொண்டு, உடல் உறுப்பு ஊனம் உற்றவர்களையும் பாராமல்,தீயவர்களை கண் எடுத்தும் பாராமல் நடத்தல் வேண்டும். மலை சுற்றப்போகும் பக்தர்களை பரிசோதிக்க நினைப்பது இறைவனின் தினசரி விளையாட்டு. எனவே இச்சோதனைகளை வென்று மலை வலம் வரவேண்டும்.

சமாதி அடைந்த சித்தர்களின் சக்தி

நம் மனதில் கோபம், க்ரோஷம், குழப்பம், கவலை ஆகியவை எழும் போது நம் உடலை சுற்றி உள்ள அலைகள் 14 ஹெர்ட்ஸ்க்கு மேல் இருக்கும்.இதனை பீட்டா அலைகள் என கூறுகின்றனர். நம் ஓய்வெடுக்கும் போது (ழ்ந்த தூக்கத்தின் போது) உடலை சுற்றி உள்ள அலைகள் 14 ஹெர்ட்ஸ்க்கு கீழே இருக்கும்.அந்த அலைகளை ஆல்ஃபா அலைகள் என கூறுகின்றனர்.அதே உடல் தியான நிலையில் இருக்கும் போது எட்டு ஹெர்ட்ஸ்க்கு கீழே இருக்கும்.அதை தீட்டா அலைகள் என்கிறனர் விஞ்ஞானிகள்.

தவ நிலையில் உள்ள சித்தர்களின் உடலில் இருந்து இந்த அலைகள் வெளிப்பட்டு கொண்டே இருக்கும். மிகப் பிரசித்தமான கோயில் சித்தர்கள் சமாதி அடைந்திருக்கும் மர்மம் இதுதான்..


அண்ணாமலையில் வாழ்ந்து முக்தி பெற்ற மகான்கள

குகை நமச்சிவாய தேவர்
குகை நமச்சிவாய சுவாமிகள்
அருணகிரி நாதர்
திருவண்ணாமலை தின நுமுதல் குருமூர்த்தி
தேசிகப் பரமாசாரிய சுவாமி
பாணி பத்திர சுவாமி
அன்னை மங்கையர்க்கரசியார்
சோணாசல் தேவர்
ஞானப்பிரகாசர்
வீர வைராக்கிய மூர்த்தி சுவாமி
அப்பைய தீட்சிதர்
சிவப்பிரகாசர்
ஞானியாரடிகள்
தட்சிணாமூர்த்தி சுவாமி
குமாரசாமி பண்டாரம்
அழியாவிரதம் கொண்ட தம்பிரான்
ஈசானிய ஞான தேசிகர்
சற்குரு சுவாமி
பழனி சுவாமி
அருள்மொழி அம்மணி அம்மாள்
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமி
காரியானூர் நடேச சுவாமி
அங்கப்பிரதட்சணம் அண்ணாமலி சுவாமி
திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் சுவாமி
சிவா சுவாமி
பத்திராசல சுவாமி
சேஷாத்திரி சுவாமி
ரமண முனிவர்
சடைச்சி அம்மாள்
அழகானந்த அடிகளார்
இரை சுவாமி
இசக்கி சுவாமி
சோணசால பாரதியார்
யோகி ராம்சுரத் குமார்[விசிறி சாமியார்]

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் - ஒரு விஞ்ஞான விளக்கம்

ஞானிகள்,முனிவர்கள்,சித்தர்கள் சிறந்த கோயில்களையும்,அதில் தெய்வ திருவுருவச் சிலைகளையும் ஏற்படுத்தும் முறைகளை வகுத்து கொடுத்து கோயில் திசை நான்கிலும் விண்ணை முட்டும் பெரிய கோபுரங்களை நிர்மாணித்து அவற்றின் சக்தியால் உயிர்கள் நல்ல முறையில் வாழும் அமைப்பை ஏற்படுத்தி கொடுத்தார்கள்.

கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம். லயம் தொழுவது சாலவும் நன்றே என்ற முன்னோர்களின் பொன் மொழிகள் இதன் பயன் கருதி கூறியவை.

ஆகம விதிப்படி கோயில் நிர்மாணித்து,அபிஷேகிக்கப்பட்டு,காலம் தவறாது புணர் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடந்து கொண்டிருக்கிற கோயில்களில் உள்ள கோபுங்ரகளின் மேல் தங்கத்தாலும், செம்பினாலும் செய்யப்பட்ட கலசங்கள் தனது கூரிய முனை வழியாக காயத்தில் உள்ள உயிர் சக்தி என்று அழைக்கப்படும் பிராண சக்தியை கிரகித்து வெளிவிடுகிறது.அந்த சக்தியை நம் உடல் பெறுவதால் புத்துணர்ச்சி,புது உணர்வு, உள்ளத் தூய்மை,ன்மீக ஈர்ப்பு, நோயின்மை,நோய் எதிர்ப்பு சக்தி அடைகிறோம்.

இதனால் தான் கோபுர தரிசனம் கோடி புண்ணீயம் என்று முன்னோர்கள் கூறினர்.
கர்ப்பக்கிரக கோபுரத்தின் மேல் வைக்கப்பட்டுள்ள கலசங்கள் அதே போல் பிராண சக்தியை கிரகித்து கலசத்தின் நேர் கீழே உள்ள இறை பீடத்திற்கு இடையறாது அனுப்பி கொண்டிருக்கிறது. இந்த சக்தி பீடத்தின் அடியில் உள்ள தங்கத்தாலும்,வெள்ளியினாலும் செய்யப்பட்ட மந்திர சக்கரங்கள், யந்திரங்கள் தன்பால் இழுத்து தான் அமையப் பெற்றிருக்கும் தன்மைக்கு ஏற்ப பீடத்தின் மேல் தன் சக்தியை வெளிப்படுத்துகிறது.

இந்த பிராண சக்தியின் அளவை மேலை நாட்டு விஞ்ஞானி போவிஸ் கண்டு பிடித்துள்ளார். இதிலிருந்து வெளிப்படும் சக்தியை(14 யிரம் போவிஸ்) நம் உடலில் உள்ள உயிர் அணுக்கள் தாங்க இயலாது. எனவே தான் பீடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலை அந்த சக்தியை பிரித்து ஒன்பது முனைகள் வழியாக வெளியேற செய்கிறது. அந்த சக்தி கர்ப்பக்கிரத்தின் வாயில் வழியாக வெளியே வருகிறது. அங்கு இறைவனை வணங்கி கொண்டுள்ள நம் மீது படுகிறது. இதனால் ஆன்மீக உணர்வு, சக்தி நம்மீது பரவி மனதில் உள்ள கவலைகள், குடும்பத்தில் உள்ள பிரச்னைகள்,உடல் நோய்கள்
அனைத்தையும் போக்கி னந்தத்தை கொடுக்கிறது. கர்ப்பக்கிரத்தில் கிழக்கு அல்லது வடக்கு திசைகளில் நீர் செல்லும் பொருட்டு ஓர் தூவாரம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த துவாரத்தின் வழியே செல்கின்ற நீரிலும் கலந்து பிராண சக்தி வெளிப்படுகிறது.

அங்கு அமைக்கப்பட்டுள்ள சதுர வடிவ தொட்டியில் விழும் நீரை கோயிலை வலம் வரும் நாம் அந்த இடத்தில் வந்தவுடன் எடுத்து கண்ணிலும் சிரசிலும் ஒற்றிக் கொள்கிறோம்.அந்த சில நிமிடங்களில் நம் மீதும் பிராணசக்தி பரகிறது. இந்த பிராணசக்தி வெளிப்பட்டு கொண்டு இருப்பதால் தான் சிலையின் குறுக்கே செல்லக்கூடாது.. சிலையின் பக்கவாட்டில் தான் செல்ல வேண்டும். சிலையை விட்டு விலகி நிற்பதுடன், அபிஷேகம் செய்யும் போது கைகள் சிலைக்கு மேல் செல்லக்கூடாது. ஒரு காலை வெளியிலும், மறு காலை கர்ப்பக்கிரகத்தின் வாயிலிலும் வைக்ககூடாது.கர்ப்பக்கிரகத்திற்குள் இரும்பாலான எந்த பொருளையும் பயன்படுத்த கூடாது என முன்னோர்கள் விஞ்ஞானத்தின் அடிப்படையில் தான் கூறியுள்ளனர்.

அன்புடன்
கிருஷ்ணன்
சிங்கை