Monday, September 11, 2006

பாரதியார் - 1

பாரதியின் நினைவு நாள் 11-09-2006.

அதனை முன்னிட்டு பாரதியின் சில நினைவுகளை உங்களோடு பகிர்ந்துக்கொள்கிறேன்.

பாரதி ஒரு விடியலுக்காகப் பாடிய பிதா மகன்; பாட்டுத் திறத்தாலே இந்த வையத்தைப்
பாலித்திட வேண்டும் என்று பாடி அந்த எண்ணத்திலே மிகப்பெரும் வெற்றி கண்டவன்.
அவன் இன்று நம்மிடையே இல்லை. அவன் முகழ்க் கவிதைகளோடு மட்டுமே நாம்;
அவனைச் சொல்லும்போது தமிழகக் கவி என்றோ புதுவைக் கவிஞன் என்றோ
சுருக்கிச் சொல்லி விடாமல் தேசியக் கவி என்றும் மகா கவி என்றும் விரித்துச்
சொல்லி நாம் விலாசமானவர்கள் என்று அவன் விலாசம் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

பாரதி ஒரு பண்முகக் கவிஞன்; அவன் ஒரு கவிஞன் மட்டுமல்ல;
ஒரு சிறந்த தமிழாசிரியர்; சிறந்த பத்திரிக்கை ஆசிரியர்; ஒரு எழுத்தாளன்;
சிறந்த கட்டுரையாளன்; சிறந்த சிறுகதை எழுத்தாளர்; தலை சிறந்த
நாவலாசிரியன்; ஒரு சிறந்த நாடக கலைஞர்; ஒரு மனிதாபிமானி;
அவன் ஒரு அரசியல்வாதி; சமூகச் சீர்திருத்தவாதி; அவன் ஒரு தத்துவ ஞானி;
ஆங்கிலப் முலமையுள்ள இந்திய எழுத்தாளன்; அவன் ஒரு சிறந்த
மொழிபெயர்ப்பாளன்; தமிழைத் தாயாகப் போற்றியவன் பாரதி.
சமூகக் கொடுமைகளை எதிர்த்துச் சதிராடும் ஒரு போராளி அவன்;
இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்; அவனை ஒரு பட்டியல்
போட்டு அதற்குள் அடக்கிவிடமுடியாது;
தேசீயக் கவிஞாராக,விடுதலைக் கவிஞராக,புரட்சிக் கவிஞாராக,
புதுமைக் கவிஞாராக நாம் பாரதியைப் பார்த்தாலும் அடிப்படையில்
அவர் ஞான சித்தர்!
'எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாராப்பா!
யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்...'
என்று தம்மை ஒரு சித்தன் என்றே அவர் கூறிக்கொள்கிறார்.பக்தி நெறி பரவும் திருக்கூட்ட
மரபில் வாழையடி வாழையென வந்தவர் பாரதி.பொய் சாத்திரகளில் உள்ள புன்மைகளை
அவர் கடுமையாக சாடுகிறார்
''பொய்மைச் சாத்திரம் புகுந்திடின் மக்கள்
பொய்மை யாகிப் புழுவென மடிவர்''

எங்கும் நிறைந்த சிவசக்தியை பாடும் தம்மை மறந்து பாடுகிறார்.
பாரதியார் பராசக்தியை குறித்து பாடிய பாடல்கள் 55 -க்கு மேற்பட்டவை
அவர் பார்த்த பொருள் எல்லாம் பராசக்தியாகவே காட்சி அளித்தாள்.அதனால்தான்
இந்தியாவை 'பாரத தேவியாக' பார்த்தார்.
''சுதந்தர தேவி நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே!'
என்று பாடுகிறார்.

'காளியே! நீயே யாதுமாகி நிற்கின்றாய்! எங்குமாகி நீ நிறைந்துள்ளாய்.
எனில்,தீமையும் நன்மையும் உனது விளையாடுத்தானே! என்றார் பாரதி
''யாதுமாகி நினறாய்- காளி!
எங்கும் நீ நிறைந்தாய்;
தீது நன்மை எல்லாம் காளி!
தெய்வ லீலை அன்றோ?
பூதம் ஐந்து மானாய் - காளி!
பொறிகள் ஐந்து மானாய்
போதமாகி நின்றாய் - காளி!
பொறியை விஞ்சு நின்றாய்''

பாரதியார் 'பராசக்தி' என்னும் பெயரில் ஒரு தனி தெய்வத்தை வழிப்பட்டார் என்று
சொல்வதற்கில்லை.பரம்பொருளையே அவர் 'தெய்வம் ஒன்றே' என்ற நம்பிக்கையுடைவர்.
ஆகையால், 'ஒன்று பரம்பொருள்; நாம் அதன் மக்கள்'' என்றும் சாதித்தவர்.எம்மதமும்
சம்மதம் என்னும் கொள்கையுடைவர்.

நிலம்,நீ,நெருப்பு,காற்று,வான் என்ற ஐம்பூதங்களின் சேர்க்கையையே,அந்த சேர்க்கையின்
படைப்புக்களையே,அந்தப் படைப்புக்களின் இயக்கங்களையே பராசக்தியாகவே பாவித்து பாரதியார்
வழிபட்டார்.பூதங்கள் தோறும்ம்- புலன் தோறும்- பொறிகள் தோறும் கலந்து நிற்கும் பரம்பொருளையே
பராசக்தியாக வருணிக்கிறார்.

இதனை விளக்கமே 'சிவசக்தி' பாடல்.
இயற்கையென்று உனையுரைப்பார் - சிலர்
இயங்கும் ஐபூதங்கள் என்றிசைப்பார்
செயற்கையின் சக்தியென்பார் - உயிர்த்
தீயென்பர், அறிவென்பர்,ஈசன் என்பர்
அன்புறு சோதியென்பார் - சிலர்
ஆரிகுட் காளியென் றுனைப்புகழ்வார்
இன்பமென றுரைத்திடுவார் - சிலர்
எண்ணருந் துன்பமென்றுநுனை யிசைப்பார்
மின்படு சிவசக்தி - எங்கள்
வீரைநின் திருவடி சரண் புகுந்தோம்

காண்பதெல்லாம் காளியின் வடிவமாகப்படுகிறது பாரதிக்கு!

நாளை ''நல்லதோர் விணை'' காண்போம்..




அன்புடன்,
கிருஷ்ணன்,
சிங்கை
..........................................
இன்பத் தமிழ் எங்கள் மொழி.
தமிழ் எமது மொழி.
என்றும் இன்பம் தழைக்க இருக்கலாம்
Krishnan,Singapore
For your Book Mark
http://ezilnila.com/saivam
http://www.singai-krishnan.blogspot.com/

No comments: