Saturday, September 30, 2006

திருமந்திரம் ஒரு பார்வை1

''திருமந்திரம்'' ஒரு பார்வை

மகத்துவங்களின் தொகுப்பு மனிதன்.தெய்வ நிலைக்கு மனிதன் உயரலாம்.
ஆயினும் அதனை உணர்ந்தோர்,சிலரே. உணராதோர் தாம் நம்மில் பலரே.
உணரத் தலைப்படுதல் ஆன்மீகம். உணர்ந்ததைக் கடைபிடித்தால் நன்னெறி.
உறைத்தலோ இன்றி மனிதனை நகர்த்தும் லெளகீகத்தில்,உழன்று கொண்டே
இருப்பதை அனுபவித்து கிடப்பது துர்கர்மம். ஆனால், உணரத் தலைப்படுதல்
என்பது நமக்கு ஞான வீதிக்கு வழிசொல்லும்....வழி செல்லும்

பிரம்ம ஞானத்தின் கதவுகள் திறக்கும். மனிதனின் நம்பிக்கைகளுக்கு
ஆதாரமாய் விளங்கும் சாஸ்திர உண்மைகள்,நெறிகள்,நமது தெய்த்திருப்
பாடல்களில் குவிந்து கிடக்கின்றன். அவற்றை வெளிக் கொணர்ந்து
மக்கள் மத்தியில் நிலைநிறுத்தம் முயற்சிகளே தெய்வப் பணியாகும்.

ஆன்மீகம் இன்றைய கால வேகத்திற்கு தமிழர்கள் ஈடுகொடுக்க
முனைந்து தெய்வத் தமிழ் பக்தி இலக்கியங்களில் இளைப்பாறும் பழக்கத்தை
இழந்து விட்டார்கள்.இந்நிலையில் நாளைய சந்ததியின் நிலையை சொல்ல
வேண்டியதே இல்லை. திருமந்திரம்,நன்னெறி நூலாக மட்டும் அமையவில்லை.
இன்றைய காலட்டத்திற்கு ஏற்ற விஞ்ஞான கண்ணோட்டமும் அதில் உண்டு.
கள்ளூண்ணாமை,புலால் உண்ணாமை,வாய்மை போன்ற நெறிகளை திருமந்திரம்
கொண்டிருக்கும் வேளையில் அதிலுள்ள 2-வது மந்திரத்தை எடுத்துக்கொண்டால்
'கரு உற்பத்தி'பற்றிய விஞ்ஞானப்பூர்வமான கண்ணேட்டத்தை கொண்டிருக்கிறது.
திருமுறைகளில் திருமந்திரம் 10வது திருமுறை.முதல் மூன்று திருமுறைகள்

திருஞான சம்பந்தர் எழுதிய தேவாரங்களாகும். அடுத்து மூன்று திருமுறைகள்

திருநாவுக்கரசர் எழுதிய தேவாரங்களாகும்.7வது திருமுறைகள் சுந்தரமூர்த்தி
நாயனார் எழுதிய தேவாரமாகும்.

8வது மாணிக்க வாசகர் எழுதிய திருவாசகம்,திருக்கோவையார்

ஆகியவை.9வதி திருமுறையாக திருவிசைப்பா,திருப்பல்லாண்டு குறிப்பிடப்படுகிறது.
நம்பியாண்டார் நம்பி போன்றோர் எழுதியவை.



12வது திருமுறை என்பது சேக்கிழார் எழுதிய பெரிய புராணம்.

சிவனடியார்களின் புகழ் மணக்கும் புராணம்.வருடம் ஒரு பாடலாக திருமந்திரத்தை
திருமூலர் எழுதினார் என்று குறிப்பிடப்படுகிறது. அவர் 3000 பாடல்களை 3000
ஆண்டுகள் எப்படி எழுதியிருக்க முடியும் எண்ணத்தோன்றும்.திருமந்திரத்தை
முடிப்பதற்காக யோக நிலையில் இருந்து எழுதியதாகக் கூறுவார்கள்.

9 தந்திரங்களாக திருமந்திரம் பிரிந்திருக்கிறது. மொத்தம் 232 அதிகாரங்களைக்
கொண்டது.அந்த வகையில் நமது திருமுறைகளிலேயே மிகச் சிறந்த பக்தி
இலக்கியமாகவும் மந்திரமாகவும் விளங்குகிறது.
நாம் அல்லாததை எல்லாம் நாமே என்று நினைக்கிறோம். நம்முடையது
அல்லாததை எல்லாம் நம்முடையது என்று நினைக்கிறோம்.
இங்கு ''நாம்'' என்பது என்ன? நம்முடையது எது என்ன? அதுதான்
உண்மையறியும் சிந்தனை. அதுதான் ஞானம்.. நாம் அல்லாததை நாம்
என்று நினைப்பதையும்,நம்முடையது அல்லாததை நம்முடையது என்று
கருவதையும் அர்ப்பணம் செய்துவிடவேண்டும். அதற்கான பயிற்சி நம்மிடம்
இல்லை. முயற்சி இல்லை. இந்நிலையில் ஞானம் எங்கிருந்து வரும்?

வேள்வி,சடங்கு,சாஸ்திரம்,பூஜைகள் என்றெல்லாம் நம்மை ஈடுபடுத்திக்
கொண்டிருக்கிறோம். இவற்றை முயற்சியாக எடுத்துக்கொள்ளலாம்.'இதனை

கிரியை என்பார்கள். ஒரு வகையில் நாம் ஞானத்தைப் பெற மேற்கொள்ளும்
முயற்சிகள் என்று ஏற்றுக்கொள்ளலாம்.ஆனால் வெறுமனே சடங்குகளில்
ஈடுபடுவதால் அந்த முயற்சி வெற்றி பெற்றுவிடாது.இதற்கு அப்பால் நமது

காரியங்களை உணர்ந்து செயல்படுதல் வேண்டும்.ஒரு பிரக்ஞை வேண்டும்.
பயிற்சி இல்லாமல் ஞானமில்லை. கிரியை என்பதும் அத்தகைய பயிற்சிதான்.
பொருளைக் கருதி அர்ப்பணம் செய்வதே கிரியை ஆகும்.
உடம்பு நம்முடையது அல்ல.இந்த உடம்பே நாம் என்று அர்த்தமல்ல.
இந்த உடம்பு செயல்பட பல்வேறு சூழல்கள் தேவைப்படுகிறது. அவற்றை
நமக்கு உருவாக்கித் தந்து நம்மை இயக்குகிறவன் இறைவன்.அதனை
இறைவன் செயல்படுத்துகிறான். உடம்பு நமக்கானது அல்ல.
'நான்' என்பது உண்மையல்ல.
அப்படி நடப்பதாக நினைத்தால் அது அகங்காரம்.இதனைத்தான் அர்ப்பணிக்க
வேண்டும்.இன்றைக்கு நம்மிடம் இருந்துவரும் சடங்கு சாஸ்திர முறைகள்,

வழிபாட்டு விதம் என்பதெல்லாம் வெறும் சடங்காகத் தோன்றுகிறது.
இருந்தாலும் உட்பார்வையில் இதற்கெல்லாம் அர்த்தங்கள் உண்டு.
புறப்பொருளை அர்ப்பணிப்பதோடு அகப்பொருளையும் அர்ப்பணிப்பதே
இதன் உள்ளார்ந்த நோக்கமாகும். உடம்பு ஒரு புறப்பொருள்.உயிர்
ஓர் அகப்பொருள்.புறத்தையும் அகத்தையும் தகுதியாக்குதலே அர்ப்பணம்.
நம்முடைய கடைசி அர்ப்பணம்தான் 'நான்' 'எனது' என்ற அகங்காரம்.
இதுவே முழு அறிவு. இது இறைவுணர்வுக்கு அடிப்படை.

சைவ சித்தாந்தத்தில் இதற்கு முக்கியத்துவம் உண்டு. அதாவது
சரியை.கிரியை,யோகம்,ஞானம் ஆகியவைதான் மூலக்கூறுகள்.
சரியை என்ற ஒழுக்கத்தாலும் கிரியை என்ற அர்ப்பணத்தாலும்
யோகம் என்பது பொருந்தி இருந்தாலும் ஞானம் என்ற அருளால்
இறைவுணர்தலுக்கு சைவ சித்தாந்தம் வழி கோலுகிறது.அதாவது
சரியையும்,கிரியையும் கொண்டுவந்த யோகத்தால் ஞானத்தை
எட்ட முடிகிறது.

இதில்,முதல் மூன்றிலும் நமக்குப் பயிற்சி தேவைப்படுகிறது.
இந்த பயிற்சிக்கு குருவாக இறைவனே முன் நிறகிறார்
என்பதுதான் சித்தாந்தம். இறைவன் ஒருவன் இருக்க -
அவனை முன்னிட்டே பிற யாவும் உண்டு என்கிறது

சித்தாந்தம். இறைவனைத் தவிர எதுவுமே இல்லை என்று சொலவது வேதாந்தம்.
சைவ சித்தாந்தம் உலகியலோடு முடண்படாவண்ணம் திகழ்கிறது.பிறவியுற்று
உலகியலில் வாழ்ந்து,கடந்து இறைவனை உணர்ந்து அடைதலே சைவ

சித்தாந்தம்.
நாம் அன்றாடச் செயல்களை மாற்ற வேண்டும்.அதற்கு மந்திரச்
சொல் வேண்டும்.அன்றாடச் செயல்கள் இன்பம்,துன்பம் நிறைந்தது.
ஆனால்,மந்திரச் செயல் அப்படியல்ல.மகிழ்வை மட்டுமே உணர்த்துகிறது.
அன்றாடம் செயல் மாற,மந்திர உபாஷனைகளில் ஈடுபடுதலாகும்.அன்றாட
வினையாகி உலகியலில் இருந்து பிறகு வைதீக வினையாகி,ஆன்ம
வினை,மார்க்க வினை,மந்திர வினை என்று மாற்றங்கள் பெறுகின்றன.
கடைசியாக மந்திர வினைதான். மந்திர வினை என்பது உயிருக்கு
வேண்டிய உபஷாந்தம்,விருப்பு,வெறுப்பற்ற நிலை.இதனை அடைய
மந்திர உபஷானை அவசியமாகிறது. அதனால் நமது வாழ்வியல்
திருமந்திரம் அவசியமாகிறது.


மந்திரம் என்பதே சொல்லுக்குள் பொருளை சுருக்கி வைத்து
அதனை உணரும்படி செய்தல் எனலாம்.ஒரே எழுத்தில் அடக்கி வைத்தல்.
உதாரணமாக நமசிவாய,சிவாய நம என்பதெல்லாம் மந்திரச் சொற்களே.
நமக்கும் உலகத்திற்கும் உள்ள தொடர்பு,நமக்கும் பிறருக்கும் உள்ள
தொடர்பு,நமக்கும்உடம்புக்கும்

உள்ள தொடர்பு,நமக்கும் இறைவனுக்கு உள்ள தொடர்பு ஆகியவற்றை
பொருளுணர்வை ஏற்படுத்துகின்றது மந்திரம்.உயிர்களுக்கு வேண்டிய அமைதி
நிலையை உணர்த்தவல்ல மந்திரமாக நமக்கு அருளப்பட்டிருக்கிறது 10வது

திருமுறையான திருமந்திரம்.
திருமந்திரத்தை நமக்கு தந்த திருமூலருக்கு அந்த ஆகமம் இறைவனால்
அருளப்பட்டது.இறைவனாகப் பட்டவன் தேவிக்கு அதனைச் சொல்ல,தேவி
அதனைத் தெய்வ முனிவர்களுக்குச் சொல்ல இந்த ஆகமம் உருவானது.
இந்தியத் தத்துவத்திலுள்ள 24 நெறிகளையும் கடந்து உண்மை நிலையை
உணர செய்ய தலைப் பட்டதே சைவ சித்தாந்தமாக விளங்குகிறது.சைவ
நெறி பரப்பும் நெறி நூல்களில் திருமந்திரம் முக்கியத்துவம் பெறுகிறது.
தோத்திர நூல் மட்டுமல்ல சாஸ்திர விளக்கமும் அதில் உண்டு.வழிபாட்டின் அவசியவத்தையும்

முக்கியத்துவத்தையும் திருமூலர் இதன் வழி உணரச் செய்கிறார்.தமிழர்களின்
வழிபாட்டுக்கு உகந்த மந்திரம் கொண்டு தனித்தமிழ் தெய்வ இலக்கியமாகவும்,
வழிபாட்டு நெறியாகவும் விளங்குகிறது.
உயிர்கள் கேவல நிலையில் இருப்பது என்பது ஓர் அறியா நிலை.
இந்த அறியா நிலையில் இருந்து மீளவேண்டும்.அறியாதை அறிய வேண்டும்..
அறிந்தவன் பிறருக்கு அறிவிக்க வேண்டும்.அப்போதுதான் அறியப்படும்.
திருமந்திரம் பொருளுணர்ந்து மக்கள் ஓதி உணரவேண்டும் என்றும்,
இளைய தலைமுறைக்கு இது சென்றடைய வேண்டும் என்பதே நமது ஆவா.
அன்புடன்,
கிருஷ்ணன்
சிங்கை

அன்புடன்,
கிருஷ்ணன்,
சிங்கை
..........................................
இன்பத் தமிழ் எங்கள் மொழி.
தமிழ் எமது மொழி.
என்றும் இன்பம் தழைக்க இருக்கலாம்
Krishnan,Singapore
For your Book Markhttp://ezilnila.com/saivamhttp://www.singai-krishnan.blogspot.com/

4 comments:

Sivabalan said...

அய்யா

நல்ல பதிவு.

வாழ்த்துக்கள்..

சிங்கை கிருஷ்ணன் said...

அன்பிற்குரிய திரு.சிவபாலன்,
தங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி.

அன்புடன்
கிருஷ்ணன்

கிருஷ்ணா said...

இன்றைய நவீன விஞ்ஞான வளர்ச்சியின் அறிவிற்கு எட்டாத பல விஷயங்கள் திருமந்திரத்தில் உண்டு.. உதாரணத்திற்கு 'கரு உற்பத்தி'! பிறக்கும் பிள்ளை எப்படி ஆணாகவோ பெண்ணாகவோ பிறக்கிறது என்பதை இப்போதுதான் நவீன விஞ்ஞானம் ஓரளவுக்கு புரிந்து வருகிறது. ஆனால், திருமூலரோ.. எப்படி குழந்தைகளின் 'பாலை' நிர்ணயிப்பது, ஞானம் நிறைந்த குழந்தைகள், ஆயுள் அதிகமான குழந்தைகள்.. குருடு செவிடு ஊனமில்லாத குழந்தைகள் என்று, எப்படி நல்ல குழந்தைகளை உருவாக்குவதென்று எண்ணாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சொல்லியிருக்கிறார் என்றால்.. தமிழின் சரித்திரம் என்ன? நம் மதத்தின் மகத்துவம்தான் என்ன?? இத்துனை அறிவு கொண்ட தமிழை காப்பது நம் இனத்தின் ஒவ்வொரு விந்திலும் இருக்க வேண்டும் அல்லவா?

நல்ல பதி ஐயா.. தொடர்ந்து எழுதுங்கள்..!

Ashwin Ji said...

ஐயா. உங்கள் பனி போற்றத் தக்கது. பணிந்து வணங்குகிறேன்.

அஷ்வின்ஜி, சென்னை.