Friday, May 26, 2006

விக்கினம் தீர்க்கும் முதல்வன்! - விநாயகர்

விக்கினம் தீர்க்கும் முதல்வன


பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகணபதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை
-- திருஞான சம்பந்தர் --

இறைவன் அல்லது பரம்பொருள் ஒன்றே. சரம் அசரம் என்ற எல்லாப் பொருகளிலும்
தங்கியிருப்பவன் இறைவன். '' பார்க்குமிடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூண ஆனந்தமே'' ;
அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி அருளொடு நிறைந்தது'' இறை.

ஐந்தொழில் புரியும் சிவன், சிவக்கனல் முருகன், மோனஞான போத தட்ச்சணா மூர்த்தி,பராசக்தி
பரம்பொருளின் ௾இச்சா,கிரியா, ஞான சக்தியின் கூட்டு. அவ்வாறே இறைவனின் திவ்விய வல்லமையின் வடிவம் என்று கூறப்படுவது விநாயகர்.

தமிழர் வழிபாட்டில் விநாயகர் புகுந்த விதம் மற்றும் அவர் அரசமரத்தில் அமர்ந்த
விதம் பற்றிப் படித்ததை இங்கு சுருக்கமாக பார்ப்போம்.

பல்லவ மன்னன் பரஞ்சோதி வாதாபி வென்று கொண்டு வந்த பல பொருட்களில்
விநாயகரும் அடங்குவார். அதனாலேயே ' வாதாபி கண்பதிம் பஜே ' என்று
வணக்கப் பட்டால் உருவாற்று. விநாயகர் வழிபாடு மேலைச் சாளுக்கியர் ஆண்ட
பகுதியான மகாராஷ்டிர மாநிலத்தில் பிரசித்தி பெற்றுள்ளது.

கொண்டு வந்த பரஞ்சோதி மன்னன் விநாயாகரை அரச மரத்தின் கீழ் ஏன் வைத்தான்?
பரஞ்சோதிக்கும் முற்பட்ட காலத்தில் பெளத்தம் தமிழகத்தில் வலுப்பெற்றிருந்தது.
புத்தர் அரச மரத்தடியில் அமர்ந்திருந்ததை அடுத்து அவரின் உருவங்கள் அரச
மரத்தடியில் நிறுவப்படிப்படிருந்தன. ௾தைத் தொடர்ந்து பரஞ்சோதி மன்னனும்
வாதாபியிலிருந்து கொண்டு வந்த விநாயகரை பிற சமய சிலைகளைப் போல
அரச மரத்தடியில் அமர வைத்தான்.

பல்லவர் காலத்தில் சமய மாறுபாடு உண்டானமை உண்மையே ஆயினும் அம்மாறுபாடு
வேறுபாடற்ற சங்க காலச் சமய நெறியினை வழங்க தவறிவிட்டது. வைதிகத்தோடு
பிணைந்த பிறிதொரு கலவைச் சமயமே தமிழகத்தில் கால் கொண்டது. அத்துடன்
புதுப்புது விதமான கடவுளரும் வழிபடு முறைகளும் புகுந்தன. விநாயகர் வணக்கம்
௾இக்காலத்தில் ஏற்பட்டதேயாகும். சைவ சமயத்தில் ஆழ்ந்த பற்றுக் கொண்டவாரகிய
பரஞ்சோதியார் வாதாபியை வென்று அங்கிருந்தவற்றுள் பல பொருள்களைக்
கொண்டு வந்தமை போன்ற பிள்ளையாரையும் உடன் கொண்டு வந்தார். விநாயகர்
வழிபாடு ௾இன்றும் மேலைச் சாளுக்கியர் ஆண்ட மராட்டியப் பகுதிகளிலும் பம்பாய்
பிறவிடங்களிலும் மிகச் சிறந்த முறையில் விரிந்த வகையில் கொண்டாடப்
பெறுவதை அறிகிறோம்.

பரஞ்சோதி விநாயாகரை ஏன் கொண்டு வந்தார். அதனை அரச மரத்தின் கீழ் நிறுவினார்?
அரச மரத்துக்கும் விநாயகர் உள்ள தொடர்பு என்ன?

பெளத்த சமயக் காலத்தில் தமிழ் நாட்டில் புத்தர் அருளாளராக அடிப்படையான அரச
மரத்தடியில் அவருடைய பேருருவங்களை நிறுத்தி வழிபட்டனர். அடுத்த வந்த சமணர்களும்
தம் சமயத் தலைவர்களை மக்கள் மனமறிந்து, அதே நிழலில் நிறுவி வழிபட்டிருக்க கூடும்.
அசோகரும் அவருக்கு அருந்துணையாக அமைந்ததன்றோ? அதே வேளையில் வாதாபி
விநாயகரின் பேருருவைக் கண்ட பரஞ்சோதியார் இ ௾ந்த விநாயகர் பேருருவை அசர
மரத்தின் கீழ் நிறுத்தின் மக்கள் மனம் நிறைவு பெறுவர் எனக் கணித்து இ ௾ங்கே கொண்டு
வந்து நிறுவிவிட்டார். மக்கள் அன்று மன நிறைவு பெற்றதோடு என்றும் அவ்விநாயகரையே
முதல் வழிபடு கடவுளாகவும் கொண்டுவிட்டனர். எனவே, பரஞ்சோதி அரசியல் வெற்றி
மட்டுமன்றித் தம் சமயக் கொள்கையிலும் வெற்றி பெற்றுவிட்டனர் என்பதை ௾இவ்வரலாறு
காட்டுகிறது.

'' ்பிள்ளையாரைப் பற்றித் தமிழ் இலக்கியத்தில் முதன் முதல் பரஞ்சோதியாரின்
காலத்தவரான ஞானசம்பந்தர் பாடுகிறார்''

விநாயகர் வழிபாடு மிகவும் தொன்மையானது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்னமே
பரவியிருந்தது என்பது வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். விநாயகர் ஆனந்தமானவர்;
பெருமையுடையவர், சச்சிதானந்த செரூபி,குணங் கடந்தவர்; தேகங்கடந்தவர்; காலங்கடந்தவர்;
என்று விக்கினங்களை தீர்ப்பவர், எக்காரியம் தொடங்கும் முன்பு ௾வரின் ஆசியும் வேண்டும்
என்பது விநாயகரைப்பற்றி கூறும் சாராம்சாகும். காட்சிக்கு எளிமையானவரான
இவருக்கு தமிழ் நாட்டில் கோயில் இல்லாத ஊர் இல்லை. மூலை முடுக்குகளிலும்,
சாலை சந்துகளிலும், ஆற்றங்கரை குளக்கரைகளிலும், ஆலமரத்தடியிலும், அரச
மரத்தடியிலும் காட்சிக்கு எளியவராக விளங்குபவர் விநாயகப் பெருமான். மெய்யடியார்களுக்கு
எளிதாக வந்து அருளும் இயல்புடையவர்.

அவரது திருவுருவம் இல்லாத இ டத்தில் மாட்டுச் சாணத்திலோ, மஞ்சள் பொடியிலோ
பிடித்து அருக சாத்தி வழிபாடு செய்வது இந்துக்களிடையே சர்வ சாதாரணமாக இருந்து
வரும் பழக்கம். இந்திய நாட்டில் மட்டுமின்றி இந்திய கலை நலம் பரவியுள்ள இலங்கை,
பர்மா, தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா, கம்போடியா, பிலிப்பைன், மெக்சிகோ,
பெரு போன்ற நாடுகளிலும் பரவியுள்ளது. வைஷ்ண சமயத்திலும், வழிபாட்டிற்கு இடந்தராத
புத்த,ஜைன மதங்களிலும் அவரவர் கோயில்களில் விநாயகருக்கு சிறப்பிடமுண்டு.
விநாயகருக்கு தனியாக அமைந்துள்ள ஆலயங்கள் எண்ணில் அடங்கா.

தனிப்பெருந் தலைவர் விநாயகர் என்றால் நாயகனில்லாதவர் என்பது பொருள். பிள்ளையார் என்ற சொல் விநாயகரையே குறிக்கும் இதிலிருந்து விநாயகரே சிறந்த பிள்ளையாகக்கருப்படுகிறார். இன்னும் அவருக்கு முன்னவன்,கணபதி, விக்னேஸ்வரன், ஐயங்கரன்,கஜானனன்,ஏகதந்தன்,மோத்கஸ்தன், பிரணவ சொரூபி எனப் பல காரணப் பெயர் உண்டு. மக்கள் ஈடுபடும் எம்முயற்சியும் இ ௾டையூறின்றி ௾இனிது முற்றுற விக்கினந் தீர்க்கும் விநாயகனை முதலில் வணங்குவது வழக்கில் வந்துள்ளது. ஆலயங்களிலும் அவனுக்கே முதல் வழிபாடு வழக்கில் வந்துள்ளது. தனி பெருந் தலைவனான சிவனும் விநாயகரை வழிபடத் தவறமாட்டார். திரிபுர சம்ஹாரம் செய்யச் சென்ற ௾இறைவன் ௾இப்பிரானை நினையாத்தால் அவரது
தேர் அச்சு முறிந்தது.

'' விக்கினந்தீர்க்கும் விநாயகன் எனச்சிக்கென இறைவன்
செப்பாதேறலின் சங்கரன் அச்சிறுத்தருளுமரசே போற்றி''

''முப்புரம் எரிசெய்த அச்சிவனுறை இரதம்
அச்சது பொடிசெய்த அதிதீரா..''
என்பது அருணகிரியார் திருவாக்காகும்.

அரக்கர்கள் செய்த கொடுமையைத் தாங்க மாட்டாத தேவர்களும் பிறரும் சிவபிரானிடம்
முறையிட, அவர்களின் துயர் தீர்க்க யானை முகத்துடன் விநாயக மூர்த்தியை தோற்றுவித்தார்.
'' பிடியதன் உருவுமை கொள மிக கரியது
வடி கொடுதனதடி வழிபடுமடுமவர் இடர், கடி கணபதி ''
எனத் திருஞான சம்பந்த சுவாமிகள் போற்றும் அத்திமுகத்தான் இவரே.

தேவர் துயர் தீர்க்கத் திருவுளங் கொண்ட விநாயகர் கயமுகாசுரனுடன் போர் செய்து,
அவன் எந்த ஆயுதத்தாலும் இறவாதிருக்க வரம் பெற்றுள்ளதை உணர்ந்து, தனது
தந்தங்களில் ஒன்றை ஒடித்து எறிந்து அவனை வைத்தார். அவன் அந்தச் சரீரம் மாறி
பெருச்சாளி வடிவம் கொண்டு வரவே ஆரோகணித்து அதனைத் தன் வாகனமாக
அருளினார், அதாவது ஆணவமலம் அடங்கி ஒடுங்கி நிற்பதைக் குறிக்கும்.

சுயமுகாசுரன் அதிகாரஞ் செலுத்திக் கொண்டிருந்த போது தேவர்கள் அவனிடத்து
வருகையின் போது தலையில் குட்டிக் கொண்டு தோப்புக் கரணம் போடச் செய்தான்.
''கிட்டித்தன் முன் கிடைத்துழி நெற்றிற்
குட்டிக் கொண்டு குழையினை யிற்கரத்
தொட்டுத் தாழ்ந்தெழ சொற்றனன் ஆங்கதும்
பட்டுப்பட்டுப் பழியிடை மூழ்கினேம்''
கயமுகாசுரன் இறந்த பின், தங்கள் வினை தீர்த்த விநாயகப் பெருமானைப் பணிந்து
தேவர்கள் அன்று முதல் '' சிரங்களிற்குட்டிக் கொண்டு தோப்புக்கரணம் செய்து ''
இனி இப்படியே எங்கள் வந்தனையை ஏற்றுக் கொள்ளவேண்டும் எனப் பிராத்தித்தார்கள்.
இன்றும் இம்முறையில் வழிபடுவதற்குக் காரணம் இதுவே.

விநாயகப் பெருமானுடைய உருவம் விசித்திரமானது; சிரசு யானையைப் போன்றும்
கழுத்து முதல் இடைவரை தேவர், மனிதரைப் போன்றும் அதற்கு கீழ்ப்பகுதி பூதங்களைப்
போன்றும் அமைந்துள்ளது. அவர் ஆணுமல்லர்; பெண்ணுமல்லர், அலியுமல்லர். அண்ட
சராசங்களுமாக உள்ளார்; அவை அனைத்தும் தம்முள் அடக்கம் என்பதை அவரது
பேழை வயிறு குறிக்கும். அடியார்க்கு வேண்டிய சித்திகளையும் அவற்றை அடைதற்கேற்ற
புத்தியினையும் அருளுபவர். '' சித்தி புத்தியோர் புகழும் உத்தம குணாதிபன்''.
விநாயகருடைய காது, தலை, துதிக்கை ஆகிய மூன்றும் சேர்ந்து '' ஓம் '' என்னும்
பிரணவத்தின் வடிவைக் காட்டும்.

அகரமாகிய எழுத்தைப் போன்று முதன்மையும் சிறப்பும்; அறிவின் திருவுருவம்; சர்வ வியாபி;
படைத்தல்,காத்தல்,அழித்தல் ஆகிய முத்தொழில்களுக்கும் அகரம் - உகரம்-மகரம் என்னும்
மூன்றும் சேர்ந்த பிரணவப் பொருள். தம்மை போற்றி வழிபடுபவர்க்கு அறம்,பொருள்,இ ௾ன்பம்,
வீடு என்னும் நான்கு உறுதி பொருளை அருளிவர். போற்றி வழிபடாதவர்களுக்கு
தடுத்தாட் கொண்டு பின் நலம் பலவும் அருளி மறக்கருணை புரியும் இயல்பினர்.
''அகரமென அறிவாகி, உலகம் எங்கும் அமர்ந்து
அகர உகர மகரங்கள் தம்மால் பகரும் ஒரு
முதலாகி பல்வேறு திருமேனி தரித்துக் கொண்டு
புகலில் பொருள் நான்கினையும் இடர் தீர்ந்தெய்தல்
போற்றுநருக்கு அறக்கருனை புரிந்து அல்லார்க்கு
நிகரில் மறக்கருணை புரிந்தாண்டு கொள்ளும்
திருமலனைக் கணப்தி நினைந்து வாழ்வோம்.

விநாயகர் ஐந்து திருக்கரங்களை உடையவர். ஒரு கரத்தில் மோதகம் ஏந்தியிருக்கிறார்;
இது தனக்காக. மற்றொரு கையில் ஏக தந்தமாகிய ஒன்றைக் கொம்பை வைத்திருக்கிறார்;
இது விண்ணவர்க்காக. தும்பிக்கையில் நீர் நிறைந்த பொற்கலசம் வைத்திருக்கிறார். இது
தாய் தந்தையாகிய பார்வதி பரமேஸ்வரரை வழிப்படுவதற்காக இங்ஙனம் ஒவ்வொரு கரத்தையே
பிற செயலுகளுக்குப் பயன் படுத்த்தும் விநாயகப் பெருமான், தம்முடைய அடியவர்களுக்கு
மட்டும் இரு கரங்களை ஒருங்கே பயன் படுத்துகிறார். அடியவர்களின் வினைகளை ஒழித்து
இன்பங்களையே தரும் இயல்பினராகிய அவர் ஆணவ பலம் என்னும் கொடிய யானையை
பிணித்து அவர்கட்கு அருள்புரிவதற்காக பாசம் அங்குசம் என்னும் அரு கருவிகளையும்
எஞ்சிய இரு கரங்களிலும் ஏந்திக் கொண்டுள்ளார். மாபெரும் கவிஞராகிய கச்சியப்ப
முனிவர் தம் கற்பனைத் திறத்தினால் பெருமானின் ஐந்து திருக்கரங்களும் செய்யும் செயல்களை
அழகுற விளக்கிறார்.
'' பண்ணியம் ஏந்தும் கரம் தனக்குனா ஆக்கிப்
பால்நிலா மருப்பமர் திருக்கை
விண்ணவர்க்காக்கி, அரதனக்கலச
வியன் கரம் தந்தை தாய்க்காகிக்
கண்ணீல் ஆவை வெங்கரி பிணித்து
அடக்கிக் கரிசினேற்கிருகையும் ஆக்கும்
அண்ணலைத், தணிகை வரை வளர்
ஆபத் சகாயனை, அகந்தழீ இக்களிப்பாம்.

முதற் பொருளாகிய விநாயகப் பெருமான் சமயத்திற்கேற்ற சிறந்த சாதுரிய முடையவர்.
நாரத முனிவரின் கொடுத்த மாம்பழத்தை பெற '' அந்த உலக மெலாம் சிவபிரானுடை திருவுருமே''

என நினைந்து அம்மையப்பரை சுற்றி வலம் வந்து அப்பழத்தைப் பெற்றுக் கொண்டார்.
இதனை :-
''மறை முனி ஒருவன் மாங்கனி கொணர்ந்து
கறைமிட்ற்றிறைவன் கையிற் கொடுப்ப
வேலனும் நீயும் விரும்பி முன்னிறக
ஒரு நொடியதனினுலகெலாம் வலமாய்
வருமவர் தமக்கு வழங்குவோம் யாமென
விரைவுடன் மயின்மிசை வேலோன் வருமுன்னர்
அரனைவலம் வந்து அக்கனி வாங்கிய
விரகுள விகனவிநாயாக போற்றி ''...

வள்ளற் பெருமான் இராமலிங்க சுவாமிகளின் உருக்கமான பாட்டு இங்கு கருதத்தக்கது

'' திருவும், கல்வியும், சீரும், சிறப்பும், உன்
திருவடிப் புகழ்பாடும் திறமும், நல்
உருவும், சீலமும், ஊக்கமும், தாழ்வுறா
உணர்வும், தந்து எனது உள்ளத்து அமர்ந்தவா !
குருவும் தெய்வமும் ஆகி, அனபாளர்தம்
குறை தவிர்க்கும் குணப் பெருங் குன்றமே !
வெருவும் சிந்தை விலகக் கஜானனம்
விளக்கும் சித்தி விநாயக வள்ளலே !

வினைதீர்க்க வல்லான்
`````````````````
''வேழ முகத்து விநாயகனை தொழ வாழ்வு மிகுந்து வரும் !
வெள்ளைக் கொம்பன் விநாயகனைத் தொழ
துள்ளியோடுந் தொடர்ந்த வினைகளே''
என்னும் சிறிய ஈரடிப் பாக்களும்,

'' கணபதி என்னிடக்கலங்கிடும் வல்வினை '', என்னும்
'' மாயாப்பிறவி மயக்கம் அறுத்து...' என ஒளவையாரின் அகவலில் வரும் சொற்
தொடரும் விநாயகர் ஆன்மாக்களின் மும் மலங்களையும் போக்கி வீடு பேறு அருளுவர்
எனபதை விளக்குவன். ஒளவையாரின் ''விநாகய அகவல்'' ஒவ்வொரும் படிக்க வேண்டிய கருவூலம். பொருளும் மந்திர சக்தியும் நிறைந்த அகவல் படித்தாலே போதும், வினைகள் அகலும்.

விநாயகப் பெருமான் வினையை வேரக்க வல்லவர் என்பதைப் பதினோராம் சைவத்திருமுறையில்
வரும் கபிலதேவ நாயனாடின் பாடல் மிகத் தெளிவாகக் கூறுகிறது.

''விநாயகனே வெவ்வினை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான் -
விநாயக்னே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணிற் பணிமின் கனிந்து.

விநாயகப் பெருமானைப் பூசித்துப் பேறு பெற்றவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்
புசுண்டி மகரிஷி, திரு, நாராயூர் நம்பியாண்டவர், நம்பி திருவெண்ணெய் நல்லூர் மெய் கண்ட
சிவாச்சாரியர், ஒளவையார், இன்னும் இந்திரன் முதலிய இறையவரும் ஆவர்.
ஒளவையாரை தம் தும்பிக்கையால் திருக்கோவிலூரிலிருந்து திருக்கைலாயத்தில் விடுத்த
விநாயகரின் அருட்கருணை மறக்கற்பாகதன்று. இத்தகைய சிறப்புப் பொருந்திய
வினைதீர்க்கும் விநாயகப் பெருமானை நாமும் மனமொழி, மெய்களால் வழிபட்டு நாளும்
வாழ்ந்து நலம் பெறுவோம்.

என்றும் இன்பம் தழைக்க இருக்கலாம்
இன்பத்தமிழ் எங்கள் மொழி
தமிழ் எமது மொழி
திருச்சிற்றம்பலம்
அன்புடன்
சிங்கை கிருஷ்ணன்
http://ezilnila.com/saivam

4 comments:

கோவி.கண்ணன் said...

தமிழ்மணத் தளத்துள் வருக வருக என வரவேற்கிறேன்

நெல்லை சிவா said...

பிள்ளையார் நமக்கு பிடிச்ச கடவுளுங்க.. அவர் பதிவிலிருந்து அறிமுகமாகிறீங்க..வளர வாழ்த்துக்கள்.

.

doondu said...

அற்புதமான வலைப்பதிவு அனுபவத்துக்கு வாழ்த்துகள்.

சிங்கை கிருஷ்ணன் said...

அன்பிற்குரிய,
கண்ணன், சிவா மற்றும் டூண்டு அவர்களே,

தங்கள் மடலுக்கும்,கருத்துகளும் நமது இதயபூர்வமான நன்றினை,அன்பினை இங்கு தங்களுக்கு பதிவாக்குகிறேன்.

இன்னும் சில பயனுள்ள கட்டுரைகள் நமது பதிவில் வரவிருக்கிறது.

படித்து தங்கள் கருத்தினை தெரிவிக்கவேண்டி விழைகிறேன்.

அன்புடன்
கிருஷ்ணன்