Sunday, November 12, 2006

பெண்களின் பருவங்கள் - உலா இலக்கியம்

உலா இலக்கியம்

சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகிய ''உலா'' ௾லக்கியம்,
உலாவரும் தலைவனைக் காணும் ஏழ்பருவ மகளிரின் மனநிலை
சார்ந்திருப்பதை இலக்கியகாட்சியாக,
கவிச் சுவை தருவதை காண்போம்.
*********************************************************** :

இவள் பேதை....
பேதை.
மனிதப் பிஞ்சு.... வாழ்க்கையின் அரும்பு.
உலகியல் அறியா விளையாட்டுச் சிறுமி.
உலா வரும் சோழனை உற்றுப் பார்க்கிறாள்.
அவன் கழுத்தில் கிடக்கும் மாலையைத்
தன் மானுக்கு அணிவித்தால் அழகாக இருக்குமே
என ஏங்குகிறாள்....
வயதுக்கேற்ற ஏக்கம்தானே...!

" பேதைக்கு யாண்டே ஐந்து முதல் எட்டே ." [- பன்னிரு பாட்டியல்-]
.....................................................................................................................................................
பொதுமை

அவிழரும்பு !
௾வள்.....
அடி வான இமை பிளந்து
சூரியன் விழிப்பதற்கு முன்னதான பெதுமை.
௾ருளில் நனைந்த வைகறையாகக்
காதலை உணர்ந்தும் உணராததுமான பருவத்தாள்.
உலாவரும் தலைவனைப் பார்த்துப் பார்க்கிறாள்....
விழிக் கோப்பைகளில் காதல் தளும்புகிறது.

" பெதும்பைக்கு யாண்டே ஒன்பதும் பத்தும். ' [- பன்னிரு பாட்டியல்-]
......................................................................................................................................................

மங்கை.

அழகின் முழுமை !
பூத்த பெண்மை !
மங்கை
இவள்...
நிறை நிலா மங்கை !
உலாச் சோழனின்
ஆண்மை பூமியில்
இவளின்
விழி மேய்ச்சல்கள்....
மடந்தை.
" மங்கைக்(கு) யாண்டே பதினொன்று முதலாக
திரண்ட பதினா லளவுஞ் சாற்றும்."
[பன்னிரு பாட்டியல்-]
------------------------------------------------------
மடந்தை.
காதற் சாறுமிக்க காமனின் கரும்பு,
காதற் சாறுமிக்க மடந்தை.
அரிவை
கனிந்த மடந்தை...!
உலாப் போகும் சோழன் தந்த காம நோயினால் படுத்தவள்...
பனிநீரை நெருப்பென்றும்
குளிர் நிலவே சுட்டதென்றும் துடித்தாள்...!

" மடந்தைக்(கு) யாண்டே பதினைந்து முதலாத்
திடம்படும் ஒன்பதிற்(று) இரட்டி செப்பும்." [- பன்னிரு பாட்டியல்-]

.........................................................................................
அரிவை

கண்டக் காய்ச்சிய காமத்துப்பால்...!
காதற்கடலில் நீச்சடத் தெரிந்தவள்
அவள்தான் அரிவை...!
இன்றோ.....
சோழச் சூரியன்
உருக்கிடும் பனிச்சிலை...!

" அரிவைக் யாண்டே அறுநான் கென்ப."

[- பன்னிரு பாட்டியல்-]
....................................................................................................................................................
தெரிவை.

காமத் தூறலில்....
கருவறைச் சிப்பி
முத்துக்குத் தாகம் வளர்க்கும்
பருவத்தாள்.... அவள்தான்...தெரிவை.
உலாச் சோழனின் காதல் மயக்கில்....
படுக்கைச் சுடு மணலில்
ஒரு காதற்புழுவாய் நெளிகிறாள்...!

" தெரிவைக்கு யாண்டே இருபத் தொன்பது... "
[ -பன்னிரு பாட்டியல்-]

அன்புடன்
கிருஷ்ணன்

No comments: