Sunday, September 26, 2010

சித்தர் வழியில்...-சிவவாக்கியர் #1

“ ஓடியோடி யோடி யுட்கலந்த சோதியை
நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய்
வாடிவாடி வாடிவாடி மாணுபோன மாந்தர்கள்
கோடிகோடி கோடிகோடி யெண்ணிறந்த கோடியே ‘’

( சிவ வாக்கியரின் புகழ் பெற்ற பாடல். இதயத்துள்ளே இருக்கும் இறைவனைக் காணாமல் கோயிலில் தேடியலைந்து,
இறுதியில் எங்கும் காண இயலாமற் அறியாமையால் மாண்டு
போனார்கள். அவ்வாறு மாண்டு போவனர் எண்ணிக்கை எத்தனை என்று அறிவுறுத்தியவர் சிவவாக்கியர். மூடப்பழக்க வழக்கங்கள்,தீண்டாமை,போலி சாமியார்கள்,அகத்தில் அழுக்குடன் திரியும் மானிடர் கண்டிக்கிறார் )

சிவ வாக்கியர் யோக சித்தரில் சிவயோகியாவர்.
தாயுமானவரால் குறிப்பிடப்படும் பெருமை பெற்றவர்.
இவரது காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டாக இருக்கும் கணிப்பு.

இவர் இயற்றிய பாடல்கள் ’சிவ வாக்கியம்’ என
இவர் பெயராலேயே வழங்கப்படுகிறது.
சிவ வாக்கியம் 1012 மொத்தம் பாடல்களாகும்.
இதில் இராமனை புகழ்ந்து பாடியுள்ளார்.
அந்தப் பாடல்கள்தான் இவர் முதலில்
வைணராயிருந்து பின்னர் சைவராக
மாறியமைக்கு சான்று என்று கூறப்படுகிறது.

கார கார கார கார காவலூழி காவலன்
போர போர போர போர போரினின்ற புண்ணியன்
மார மார மார மார மரங்களேழு மெய்தஸ்ரீ
ராம ராம ராம ராம ராமவென்னு நாமமே

( கரா கரா என்னும் அடுக்குச் சத்தத்துடன்
போர்களத்தில் கைகளில் ஆயுதம் ஏந்தி நின்ற
புண்ணிய மூர்த்தியும், போரில் அர்ச்சுனனுக்கு
வெற்றி தேடித்தர தேரோட்டியாய்
அமர்ந்தவனும், மராமரங்களாகிய ஏழு
விருட்சங்களை துளைத்து சுக்கிரீவனுக்கு வெற்றி
கொடுத்த விஷ்ணுவின் ஸ்ரீராம ராம என்னும் நாமமே.)

வாலியை கொல்ல இராமன் ஏழு மாமரங்களின்
பின்னால் ஒளிந்திருந்து அம்பெய்தார்.
இதனையே மார மார மார மார மரங்களேழு
மெய்தஸ்ரீ என்னும் வரி குறிக்கிறது

உருவ வழிபாட்டை இவர் சாடியதுண்டு.
பிரமம் எனப்பரம் பொருளையும் பேசுவார்.
இவர் சில சமயங்களில் வெறுப்பில்லாத சைவர்.
சிவனே பரம்பொருள் என்பார். கடவுளின் உயிரின்
வேறாக உளது என்பார். ஆனாலும் கடவுள்
இல்லாமல் உயிரில்லை என்பார்.
கடவுள் ஆன்மாவின் உள்ளத்தில் ஞானமயமாக
நிலவுகிறார் “திருவுமாய் சிவனுமாய்த்
தெளிந்துள்ளோர்கள் சிந்தையால்
மருவி எழுந்து வீசும் வாசனையதாகுவேண்”

எனத் தெளிந்த ஞான நிட்டையுடையயோர்
திருவுள்ளத்தில் மலரின் மணம்போல் தோன்றுவான
இறைவன் என்பார்.. “ உற்றவாக்கையின்று பொருள்
நறுமலர் எழுதரு நாற்றம் போல், பற்றலாவதோர்
நிலையிலாப் பரம்பொருள் ” என்னும்
திருவாசகத்தோடு ஒத்துள்ளதை காணலாம்.

இவர் வேதியர் குலத்தில் தை மாதம் மக
நட்சத்திரத்தில் பிறந்தவர். ஆணும் பெண்ணும்
இருவரும் ஏகமனத்தோடு புணர்ந்து விரும்பி செய்கின்றன
போகமாகிய இன்பம் எல்லா உயிர்களுக்கும் பொதுவாகிப்
பொருந்துகிறது. உயிர்கள் உடம்போடு தோன்றுவதும்
அவ்வுடல் அழிவதும் எல்லா உயிர்களுக்கும்
பொகிவாகியதால் யாரும் எதுவும் சாவதில்லை;

பிறப்பதும் இல்லை என்ற கருத்துடையவர்.ஆனாலும்
அவரும் இவ்வாறே பிறந்தார் என்பதுவும் உண்மை.
இளம்வயதிலேயே கால தத்துவதை நன்றாக உணர்ந்தவர்.

‘அபிதான சிந்தாமணி’ எனும் நூலில் இவரைப் பற்றிய
கூறப்பட்டுள்ளது. காசிக்குப் போக வேண்டும் என்ற
முடிவெடுத்து தேச சஞ்சாரம் செய்து காசியை
அடைந்தார். மூச்சுக் காற்றைக் கட்டுப்படுத்தும்
பிராணாயாம வித்தை அறிந்து ஒரு செருப்பு
தைப்பதை தொழிலாக கொண்ட ஞானியிடம்
சீடராக சேர்ந்தார். இருவரிடமும் ஈர்ப்பு சக்தி
ஏற்பட்டு நெருங்கிய நண்பர்கள் போல் கலந்தனர்.
சிவ வாக்கியர் தனது மனக்குறையை கூறி
தன்னை ஆதரிக்கும்படி வேண்டினார்.

சிவ வாக்கியரை சோதிக்க “ சிவ வாக்கியா!
என்னிடம் செருப்பு தைத்த கூலிக்குக் கிடைத்த
காசு என்னிடம் இருக்கிறது. இதனை எடுத்துப்போய்
என்னுடைய தங்கையான கங்காதேவியிடம் கொடுத்து விட்டு வா…..,

அத்துடன் இந்த பேய்ச் சுரைக்காய் ஒரே கசப்பாக கசக்கிறது.
இதன் கசப்பையும் கழுவிக் கொண்டு வா!’ என்றார்.

காசையும் பேய்ச்சுரைக்காயையும் பெற்றுக்கொண்ட
நேராக கங்கை நதிக்கரை வந்தார். கொடுத்த காசை
சுழன்றோடும் ஆற்று நீரின் மேல் வைக்க
நீருக்குள்ளிருந்து இரு வளைக்கரம் வெளியே நீண்டு அந்த
காசைப் பெற்றுக்கொண்டது.

மறு நிமிடம் மறைந்தது. எவ்வித வியப்பும் கொள்ளாது,
தன்னிடமிருந்த பேர்ச் சுரைக்காயை எடுத்து நீரில்
அலம்பிக் கொண்டு போய் சித்தரிடம் கொடுத்தார்.

‘சிவ வாக்கியா, வந்துவிட்டாயா! நான் அவசரப்பட்டு
விட்டேன். நீ கங்காதேவியிடம் கொடுத்த காசு
எனக்குத் திரும்பவும் வேண்டுமே…, இதோ இந்தத்
தோல்பையில் தண்ணீர் இருக்கிறது. அங்கே கொடுத்த
காசை இந்தத் தண்ணீரிடம் கேள்’ என்றார். சிவ வாக்கியர்
எவ்வித சலனமும் இன்றிக் கேட்டார். தண்ணீருக்கு
உள்ளிருந்து ஒரு வளைகரம் நீண்டது. அதன் கரத்தில்
காசு இருந்தது. சிவ வாக்கியர் அந்தக் காசை சித்தரிடம்
கொடுத்தார்.

சித்தர் இதனை கண்டு மகிழ்ச்சியடைந்தார்.
‘ எனக்கேற்ற மாணவனாக நீ பரி பக்குவம் பெற்றுள்ளாய் ’
என்று ஆசீர்வதித்தார். அந்த பேய்ச் சுரைக்காயையும்,
கொஞ்சம் மணலையும் கொடுத்து, ‘முக்தி நிலை சித்திக்கும்
வரை நீ இல்லறத்தில் இருக்க வேண்டும். இந்த இரண்டையும்
எந்தப் பெண் உனக்குச் சமைத்து கொடுக்கிறாளோ
அவளை நீ மணந்து இல்லறம் நடத்துவாயாக’ என்று
ஆசீர்வதித்தார். இத்தனை காலம் அவருக்கு இருந்த
மனக்குறை அதுதான். ஐம்பத்தொரு வயது வரை
திருமணமின்றி இருந்த தனக்குள்
இல்லற நாட்டம் ஏற்பட்டிருந்ததை இவர் எவ்வாறு
அறிந்தார் என்று வியந்தார்.

குருவின் பாதம் தொட்டு வணங்கி அவரிடம் சித்த
உபதேசம் பலவும் கேட்டறிந்து, பின் பிரிந்தார்.
ஒருவருக்கு பெரிய அனுபவமும் அவனுக்கு நடைமுறை
வாழ்க்கையில் ஏற்படும், - உள்ள சூட்சமங்களை அறிந்து,
மக்களுக்கு உபதேசிப்பது அறிவுதான். செல்லும் வழியில் பல அனுபவங்களால் அவர் தவஞானம் அறிவைப் பெற்றார்.

ஆன்மாவால் பெறுகின்ற அற்புதமான சுகத்தை
அளப்பரிய நிலையான இன்பத்தை ஓரே ஒருவரால்
மட்டுமே இந்த உலகத்திற்கு தரமுடியும். அவரே
ஞானகுரு ஆவார். வித்தை கற்றுக் கொடுப்பவர்
வித்யாகுரு. வினைகளை தீர்க்க வந்தவன் ஞானகுரு.

உடம்பால் மனிதன் பெறுகின்ற இன்பம் சரீர
சந்துஷ்டி ஆகும். ஆன்மாவினால் பெறுகிற இன்பம்
ஆத்ம சந்துஷ்டி. இதுவே பேரின்பம் எனப்படுகிறது.
கல்வி நெறியை வரையறை செய்வது யோக சாஸ்திரம்.

சிவ வாக்கியர் ஆதம் தத்துவத்தை அற்புதமான
பாடல்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இவரது
பாடல் திருவிளக்கமாகத் தோன்றிவர். பாடல்கள்
பெரும்பாலும் திருமந்திர நடையை ஒத்திருக்கும்.
கடவுள் ஆன்மாவின் உள்ளத்தில் ஞானமயமாக நிலவுகிறார்.

எதிர்ப்பட்ட பெண்களிடமெல்லாம் “ இந்தப்
பேய்ச்சுரைக்காயையும் மணலையும் பிசைந்து அமுது
படைக்கும் பெண் உங்களில் யார்?” என்று கேட்டார்.
இளமையும் அழகும் நிரம்பிய சிவ வாக்கியரை
நெருங்கிய பெண்கள் அந்தக் கேள்வியைக் கேட்டதும்
ஓடி ஒளிந்தனர். சிலர் இவரை பித்தர் என்றனர்.
சிலர் புத்தி பேதலித்து விட்டது ஓடி ஒளிந்தனர்.

இதனால் மிகவும் சலித்துப்போன சிவவாக்கியர்
கடைசியாக சிற்றூரில் குறவர்கள் வசிக்கும்பகுதி
வழியாகச் சென்று கொண்டிருந்தபோது ஒரு
குடிசையின் வாயிலில் கன்னிபெண் ஒருத்தி உட்காரந்திருந்தாள்.

சிவ வாக்கியரை கண்டதும் ஏதோ ஒரு உள்ளூணர்வு
தூண்ட அவரை எழுந்து வணங்கி ஒதுங்கி நின்றாள்.
குடிலின் வாசலில் மூங்கில்கள் பிளக்கப்பட்டு
கட்டுகட்டாகக் கிடந்தது.

எளியெனின் நன்றிகள்,
வணக்கம்
அன்பொடு,
கிருஷ்ணன்,
சிங்கை

No comments: