Tuesday, September 07, 2010

சித்தர்களின் வழியில்...-குரு நமச்சிவாய சுவாமிகள்-7

'சபாநாயகர் பிச்சை கொடுத்தால் கட்டளை
எப்போதும் தொடந்து நடைபெறும்'
என்று சொல்லிக்கொண்டே பொற்றாம்பாளத்தைக்
கையில் ஏந்தி
''காத லுடன் சர்வ கட்டளையாய் உன்னுடைய
பாத மலர்ப்பூசை பண்ணவே - ஓது
குருவா யெனையாண்டு கொண்டவனே! பிச்சை
தருவாய் சிதம்பர நாதா''
என்ற வெண்பாவைப் பாடினார்.

அப்போது குரு நமச்சிவாயர் வேண்டுளுக்கிணங்கி
அங்கு வந்திருந்த அடியார்களும் அன்பர்களும்
காணுமாறு தங்ககாசு ஒன்று தட்டிலே வீழ்ந்தது.

''நடராசப்பெருமானே நாம் அனைவரும்
காணுமாறு பிச்சையிட்டார். ஆகவே நாமும்
நன்கொடையளிக்க வேண்டும்'' என்று வந்திருந்த
பெரும்பான்மையினர் பொன்னும்,பொருளும் போட்டார்கள்.

குரு நமச்சிவாயர் தங்கத் தட்டினைத் தனக்கு
முன்னிருந்த அர்ச்சர்களிடம் கொடுத்து அவ்விடத்தை
விட்டு புறப்பட்டார். அப்போது சிறிது தாங்கிற்று.

உடனே குரு நமச்சிவாயர் ''இதற்குக் காரணம் என்ன?''
என்று மூவாயிரவரைக் கேட்டார். அதற்கு அவர்கள்
''நாங்கள் ஏதும் அறியோம்''என்றனர்.

குரு நமச்சிவாயர் யோகக் கண்கொண்டு நோக்கினார்.
மூவாயிரைவரை நோக்கி,சுவாமிக்கு
அணிகலன் இருந்ததுண்டா? என்று வினாவினார்.
அவர்கள்''இல்லை'' என்றனர்.

பின், சிறிது நேரம் சிந்தைனை செய்து
''பதஞ்சலியாக்கிர பாதர்காலத்தில்
பாதச்சிலம்பும் கிண்கிணியும் இருந்தன' என்று சொல்வார்
யாம் கண்டதில்லை என்றார்கள்.
அவர் தம் கூற்றினைக் கேட்ட குரு நம்ச்சிவாயர்,
சிற்பிகளை அழைப்பித்துப் ''பாதச்சிலம்பும் கிண்கிணியும்
விரகண்டா மணியும் செய்யவேண்டும்,
அவற்றைச் செய்ய எவ்வளவு பொன் தேவைப்படும்''
என்றார்.

சிற்பிகள்'' அவற்றைச் செய்ய ஐம்பதினாயிரம்
பொன் தேவை'' என்றனர்.

வந்து சேர்ந்திருக்கின்ற பொன்னையும் பொருளையும்
கொடுத்துத் திருவாபரணம் செய்து முடிக்குமாறு
சிற்பிகளிடம் கூறி அனுப்பிவிட்டு
திருக்கோயிலின் ஒருபுறத்தே அமர்ந்திருந்தார்.

அப்போது தில்லை மூவாயிரவர்கள் ஒன்று
சேர்ந்து ''நாம் அனைவரும் இவரைத்
துணையாகக்கொண்டு நல்வாழ்வு வாழலாம்
என்று நினைத்திருந்தோம்.செல்வத்தை எல்லாம்
சிலம்பும், கிண்கிணியும் வீரகண்டாமணியும்
செய்யக் கொடுத்துவிட்டாரே!'' என்று
குரு நமச்சிவாயர் மேல் குறைகூறிப் பேசினார்.

அன்றியும்''சிலம்பும் கிண்கிணியும் வீரகண்டா
மணியும் அணிந்துவிட்டால்,அம்பலவாணர்
இவருக்கு நடனம் செய்து காட்டுவரோ?''
என்று ஏளனமாகப் பேசினர்.

இவர்தம் உரையாடல் குரு நமச்சிவாயர்தம்
செவியில் பட்டது. இவர்தம் நிலை இவ்வாறு
இருப்ப, நாற்பதாம் நாள் சிலம்பும் கிண்கிணியும்
செய்யபெற்று வந்து சேர்ந்தன. அப்போது
குரு நமச்சிவாயர் தில்லை மூவாயிரம் பிறரையும்
அழைத்து,இப்போது தில்லை அம்பலக்கூத்தன்
நடனம் செய்து காட்டினால் அவைவரும்
காண்பீரோ?'' என்றார்.

அங்கிருந்தார் அனைவரும் ''அம்பலவாணர்
திருக்கூத்தினைக்காண எத்தனை பிறவிகளில்
நாங்கள் புண்ணியம் செய்திருக்கவேண்டும்ம்.
மூவேழ்தலை முறையினரும் கரையேறிவார்களே!
என்றார்கள்.

குரு நமச்சிவாய மூர்த்தி நடராசப்பெருமான்
திருவடிகளில் சிலம்பும் கிண்கிணியும் அணிந்து
தரிசனம் செய்யுமாறு சொல்லியபின்
இறைவன் திருநடனத்தை காண் விரும்பினராய்,
''அம்பலவா ஓர்கால் அடினால் தாழ்வாமோ
உம்பாரெல்லாம் கண்டதென கொப்பாமோ - சம்புவே
வெற்றிப் பதஞ்சலிக்கும் வெம்புலிக்கும் தித்தியென
ஒத்துப் பதஞ்சலிக்கு மோ''
என்ற பாட்டினை பாடினார். உடனே கல கல வென்றொரு
ஓசை கேட்டது. குரு நமச்சிவாயர் நின்று தோத்திரம்
செய்வாராயினர்.

தில்லை கூத்தன் நடனம் செய்யத் தொடங்கினார்.
எல்லோரும் கீழே விழுந்து வணங்கி அசைவற்றிருந்தார்கள்.
அப்போது மூவாயிரவருள் மூன்று பேர்
''நீண்ட நேரமாகத் திருநடனம் நிகழ்கிறபடியால்
நடனத்தை நிறுத்தவேண்டும்'' என கூறக்
குரு நமச்சிவாயர், ''ஆடச் சொல்கிறவர் நாமோ?''
என்றார். மீண்டும் அந்த மூவரும், '' தாளம் போடுகினறவர்கள்
நிற்கவேண்டும்'' என்றனர்.

அப்போது குரு நமச்சிவாயர் அம்பலவாரை
நோக்கிப் ''பெருமானே! தூக்கிய கால் நோகாதோ?
துட்டன் முயலகன் மேல் ஊன்றிய கால் சலியாதோ?
என்று கருத்து அமைய ஒரு வெண்பா இயற்றினார்.

உடனே, நடனம் மிகவும் சிறப்பாக நடைபெறலாயிற்று.

அன்பொடு,
கிருஷ்ணன்,
சிங்கை

No comments: