Thursday, September 02, 2010

சித்தர்களின் வழியில்...- குகை நமச்சிவாயர் #4

இறைவன் திருவருளை நினைத்து மனம்
உருகி நின்ற குகைநமச்சிவாய தேவர்
புதர்களில் இருந்த தழைகளைக் கொய்து
ஆட்டிற்குக் கொடுத்து மகிழ்ந்தார். மறுநாள்
அந்த இடையன் அவ்விடத்திற்கு வந்து,
ஆடு குட்டியுடன் மேய்ந்து கொண்டிருப்பதைக்
கண்டான்; பெருமகிழ்ச்சி கொண்டு குகை
நமச்சிவாய சுவாமிகளிடம் சென்றான்.

குகை நமச்சிவாய சுவாமிகளுடைய
கட்டளைப்படி இடையன் பெருமகிழ்ச்சியுடன்
ஆட்டினையும் குட்டிகளையும் கொண்டு சென்றான்.

இரண்டு குட்டிகளையும் இரண்டு தோள்களில்
சுமந்து கொண்டு செல்லும்போது முன்னாள்
உயிரிழந்து இடையனால் சுமந்து செல்லப்பட்ட
ஆடானது இன்று கூவிக்கொண்டே பின்னே
செல்லப்பட்ட ஆடானது இன்று கூவிக்கொண்டே
பின்னே செல்லத் தன் மனையைச் சார்ந்தான்.

முன்நாள் இடையனைக் குகை நமச்சிவாயரிடம்
அனுப்பிய வீணர்கள் இந்த அற்புத நிகழ்ச்சியைக்
கண்டு, சுவாமிகளை இழிவுபடுத்துவதற்காக,
உயிருள்ள ஒரு இளைஞனைப் பாடையில்
வைத்துக் கட்டி, ''முனிவர் எழுப்பினாலும் எழாதே!''
என்று பாடையில் வைக்கப் பெற்றவனிடம்
சொல்லி வைத்து அவனைத் தூக்கிக்கொண்டு
முனிவரிடம் சென்று, 'சுவாமி, நல்ல இளைஞன்
ஒருவன் இறந்து போனான்; அவனை
எழுப்பித்தந்தருளுக!'' என்று வேண்டினர்.

வீணர்களுடைய பொய்ச்செயல்களைக் கண்ட
குகை நமச்சிவாயமூர்த்தி, ''போனவன் போனவனே
இனி அவன் எழான்'' என்று சொல்லினார்.
உடனே பொய்யாகப் பிணம்போல் பாடையில்
படுத்திருந்த இளைஞன் உயிர் பிரிந்து எமபுரம் சென்றது.

வீணர்கள் மனம் உடைந்து பெருந்துன்பத்திற்கு
ஆளாயினர். இந்த ஊரானது குறும்பர்கள் வாழும் ஊர்;
கொன்றாலும் ஏன் என்று கேளாத ஊர்?
மிகக் கொடிய காளைகள் கதறும் ஊர்;
பழியைச் சுமக்கும் ஊர்? தேளுக்கு ஒப்பான
பாதகர்கள் வாழும் ஊர்'' என்று சொல்லிய பின்
''என் சொல்லால் அழியப் போகிற ஊர்;
என்று சொல்ல எண்ணினார்;

அவ்வாறு சொல்லுதற்கு முன்னே தடங்கருணைப்
பெருங்கடலாகிய அண்ணாமலைப் பெருமான்
தோன்றி, ''அடே நான் ஒருவன் இந்த ஊரில்
இருக்கின்றேனடா'' என்று திருவாய் மலர்ந்தருளினார்.

உடனே குகை நமச்சிவாயமூர்த்தி சினந்தணிந்து,
கருத்தை மாற்றி. ''அழியாவூர் அண்ணாமலை
என்று வெண்பாவை'' முடித்தருளினார்.

''கோளர் இருக்குமூர், கொன்றாலும் கேளாவூர்
காளையரே நின்று கதறுமூர் - நாளும்
பழியே சுமக்குமூர், பாதகரே வாழுமூர்
அழியாவூ ரண்ணா மலை'' என்பது அவ்வெண்பா.

குகை நமச்சிவாயருக்குத் தொல்லை கொடுத்தவர்களைச்
சார்ந்தவர் பலர் பல்வேறு இன்னல்களுக்கும்
நோய்களுக்கும் உள்ளாகிப் பல்வேறிடங்களுக்கும் குடியேறிச் சென்றுவிட்டனர். சிலர் மட்டும், வாழ்ந்த ஊர்
என்ற பாசத்தினால் அருணையிலேயே தங்கினார்கள்.

ஒருநாள் ஓரிடையன் நூறு பசுக்களோடு
மலைச்சாரலையடைந்தபோது, ஒரு பசுவை
வேங்கை பற்றிக் கொண்டு ஓடிற்று. அந்த இடையன்
விரைந்தோடிச்சென்று குகை நமச்சிவாயரிடம்
சொல்லினான்.

உடனே சுவாமிகள் அண்ணாமலை அண்ணலை
நோக்கி ஒரு வெண்பாவைப் பாடினார்.
அப்போது வேங்கை, தான் கவர்ந்து சென்ற
பசுவைக் கொணர்ந்து வைத்துச்சென்றது. இந்த
அருஞ்செயலைக் கண்ட இடையன் வியப்படைந்து
எல்லோரிடமும் இதனை எடுத்துரைத்தான்.
கேட்டோர் அனைவரும் அண்ணாமலைப் பெருமான்
அடியவர்களால் ஆகாதது ஒன்றும் இல்லை
என்று பேசிக்கொண்டனர்.

பின்னர் ஒருநாள், ஒரு வைணவ குரு
காஞ்சி மாநகரிலிருந்து புறப்பட்டு
வடதிசை நோக்கிசென்று கொண்டிருந்தார்.
அப்போது கண்ணப்பன் கண்ணைப் பறித்து
சிவபிரான் அருளைப் பெற்ற திருக்காளத்திமலை
தோன்றியது. அதனையுணர்ந்த வைணவ குரு
உடன் இருந்தவரை நோக்கி,
''இம்மலை என் கண்ணுக்குத் தெரியாமல்
மறைப்பீராக! என்றார்.
அவர்களும் திரையிட்டு மறைத்தார்கள்

அன்பொடு,
கிருஷ்ணன்,
சிங்கை

No comments: