Monday, September 06, 2010

சித்தர்களின் வழியில்...- குரு நமச்சிவாய சுவாமிகள்-4

'கருணை கடலே! இரண்டு அம்மையார்
ஆக கூடுமே'' என்று சொல்ல அம்மையார்
''அதனால் பிழை ஒன்றும் இல்லை பாடுக!
என்றார். உடனே குரு நமச்சிவாயர் பின்வரும்
வெண்பாவினைப் பாடி மகிழ்ந்தார்.

''முத்தநதி சூழும் முதுகுன் றுறைவானே
பத்தர் பணியும் பதத்தாளே! அத்தர்
இடம்தாளே மூவா முலைமேல் எழிலார
வடத்தாளே சோறுகொண்டு வா...''

இவ்வெண்பாவைச் சொல்லியவுடன்
அம்மையார் பாலாம்பிகையாய்ச் சோறு
கொண்டு வந்து கொடுத்தார்.
அதனையுட்கொண்டு வழிநடந்து புவனகிரிக்கு
வந்து ஆனந்தத் திருநடனம் புரியும்
ஐயன் தில்லை அம்பலவாணப் பெருமான்
எழுந்தளியிருக்கும் தில்லைத் திருக்கோயில்
கோபுரம் கண்டு வணங்கி,

'' கோபுரங்கள் நான்கினையும் கண்டமட்டில் குற்றமெலாம்
தீபரந்த பஞ்சதுபோல் சென்றதே - நூபுரங்கள்
ஆர்க்கின்ற செஞ்சரண அம்பலவா நின்பாதம்
பார்க்கின்றார்க் கென்ன பலன்...''

என்ற இவ்வெண்பாவைக் கூறிகொண்டே
சிதம்பரம் சென்று திருக்கோயிலுட் புகுந்து,
சிவகங்கையில் நீராடி,

''கண்டமட்டில் கண்ட வினை காதம்போம்
கையிலள்ளி கொண்டமட்டில் கொண்டவினை
வண்டமிழ்சேர் வாயார வேபுகழும் வண்ணச் சிவகாமித்
தாயார் திருமஞ் சனம்....''

என்ற வெண்பாவினைச் சொல்லிக் கொண்டே
கனக சபைக்கு முன்சென்று பெருமானை
வணங்கும் போது, கூத்தப் பெருமான், அண்ணாமலையில்
குகைக்கண் அமர்ந்திருக்கும் குகை நமச்சிவாயரைப்
போலவே காட்சி கொடுத்தார்.

அப்போது வாழ்த்தி வணங்கி நின்று,

''திருவண்ணா மலையிற் குகை
நம சிவாய தேசிக வடிவமா யிருந்து
கரவனா மடியேன் சென்னிமே லுனது
கழலினை வைத்தவா நுறுரேன்
விரகின் நாரியரைப் புதல்வரை பொருளை
வேண்டிய வேண்டிய தனைத்தும்
பரவினார் புகழ்வார்க் களித்திடும் பொன்னம்
பலவனே பரமா சிரியனே...''

என்ற பாடலை முதலாகக் கொண்டு தொடங்கி,
ஒரு நாழிகை அளவிற்குள் நின்ற இடத்திலேயே,
உலகத்தை மறந்து நின்று,

''என்று வந்தாய் எனும் எம்பெருமான்' என்ற
திருக்குறிப்பில் ஒன்றி இருந்து நூறு
பாடல்களைப் பாடினார். பிறகு ஓர் அறையில்
அமர்ந்து சிவயோகத்தில் அமர்ந்தார்.

அந்நாளில் தில்லை மூவாயிரவருள்,
சீவன்மூத்தர், சடாமுத்தர். மாகமுத்தர்
என்ற மூவர் என்ற மட்டும் பல்லக்கேறும்
தனிச்சிறப்புடையவர்களாக இருந்தனர்.

அவர்கள் கனவில் ஆடல் அழகராகிய
அம்பலவாணப் பெருமான் தோன்றி,
''திருவண்ணாமலையில் இருந்து ஞானி
நம் திருநகரில் வந்து தங்கியிருக்கிறார்;
அவர் சிவயோகத்தில் மிகுதியாக ஈடுபட்டிருப்பவர்.

அவருக்குத் தனிமையான இடத்தினைத் தருதல்
வேண்டும். அவரால் நமக்குப் பற்பல பணிகள்
நடைபெற இருக்கினறன. அவருக்கு தகுதியான
இடத்தினை தருதல் வேண்டும் நாம் இருமுறை திருவடி வைத்திருக்கின்றோம்.

அவ்விடத்தில் குரு நமச்சிவாயரைக் கொண்டு
போய் விடுவீராக" என்று திருவாய் மலர்ந்தளினார்.
அவ்வாறே அர்ச்சகர் மூவரும் குரு நமச்சிவாயரை
அவ்விடத்தில் கொண்டு போய் விட்டுத்திரும்பினர்.
அங்கே யோகத்தில் இருக்கும்போது நமச்சிவாயருக்குப்
பசியுண்டாயிற்று. அப்போது,

கிருஷ்ணன்,
சிங்கை

No comments: