Tuesday, September 07, 2010

சித்தர் வழியில்...- குரு நமச்சிவாய சுவாமிகள்-8

''ஆடச் சொல்கிறவர் நாமோ?'' என்றார்.
மீண்டும் அந்த மூவரும்,

'' தாளம் போடுகினறவர்கள் நிற்கவேண்டும்'' என்றனர்.

அப்போது குரு நமச்சிவாயர் அம்பலவாரை நோக்கிப்

'' பெருமானே! தூக்கிய கால் நோகாதோ?
துட்டன் முயலகன் மேல் ஊன்றிய கால் சலியாதோ?

என்று கருத்து அமைய ஒரு வெண்பா இயற்றினார்.
உடனே, நடனம் மிகவும் சிறப்பாக நடைபெறலாயிற்று.

குரு நமச்சிவாயர் மீண்டும் மனமுருகி வெண்பா
ஒன்றினைப் பாட திருநடனம் நின்றது.அதற்கு மேல்
தில்லை மூவாயிரம் கூடி, ''குரு நமச்சிவாயர்
பரிபூரணத்தை அடைந்து காரணமானதால் நாங்கள் பூசிப்போம்'' என்று
சொல்லிக்கொண்டார்கள்.

குரு நமச்சிவாயர் மேல் குடிமக்களும்
'பெருஞ்செல்வரும் வள்ளல் தன்மையுடையவர்களும்,
குறுநில மன்னர்களும், அளவற்ற அன்புக்கொண்டு
அவர் பெயரால் நடைபெறும் அம்பலவாணர்
திருக்கோயில் திருப்பணிக்கு நிறைவான பொருளைக் கொடுத்தனர்.

பல்வேறு அறக்கட்டளைகள் ஏற்பட்டன.
அன்றியும் எழுபத்திரண்டு தம்பிரான்களுக்குப்
பல்லக்கும் விருதும் மற்றும் கொடுத்து நாடெங்கும்
அனுப்பிக் கோயில் திருப்பணிகளும்,
அறக்கட்டளைகளும் விரிவாகவும்
சிறப்பாகவும் நடைபெற வழி வகுக்கப்பெற்றது.

இவ்வாறாக் குரு நமச்சிவாய சுவாமிகள் காலத்தில்
சைவம் தழைத்து ஓங்கிற்து, கோயில் திருப்பணிகள்
விரிவாக நடைபெற்றன.பல்வேறு அறக்கட்டளைகள் உண்டாயின.
குரு நமச்சிவாய மூர்த்தி, தலயாத்திரை பல இடங்களுக்குச் சென்று,
ஆங்காங்குள்ள பெருஞ்செல்வர்கள் தானமாகக் கொடுத்த
பல கிராமங்களைத் திருமடத்தில் நடைபெறும் அன்றாட
தருமங்களுக்காவும் அம்பலக் கூத்தர் திருக்கோயிலில்
நடைபெறும் சர்வ கட்டளைக்காகவும் சிலாசனம் செய்து
வைத்தார். இவ்வாறாகப் பல சிவ தருமங்கள் சிறப்பாக நடைபெற
வழிவகுத்த பின்னரும் பல்லாண்டு வாழ்ந்திருந்து, திருப்பெருந்துறை
சென்று அங்கே இலிங்காரம் ஆயினர்.

''வத்தீச் சுரவருடம் வைகாசி தேதிநவம்
இந்துநா னாழிகை யேழரைமேல் - வந்தகுரு
தானா மருணகிரி தாணுசிவ லிங்கத்துள்
ஆனால் நம்ச்சிவா யன்.."

குரு நமச்சிவாயர் அம்பலக் கூத்தருக்கு
அளித்த நிலங்கள் அணிகலன்கள்,
தோப்புகள் பற்றிய கல்வெட்டுகள்
தில்லைக் கோயிலிலும் பிற இடங்களிலும்
மிகுதியாகக் காணப்படுப்படுகின்றன
என்று சொல்லப்படுகிறது.
-- நிறைவு --
<><><><><><><><><><><><><><><><><><><>

செவிவழி கேட்ட ஒரு செய்தி.
தில்லை [சிதம்பரம்] கோயிலுள் ஒரு சுரங்கம்
உண்டு எனவும், அந்நியர் படையெடுப்பின்போது
பொன், தங்க ஆபரணங்கள், நவரத்தின கற்கள்
யாவும் அங்குதான் மறைத்து வைக்கப்பட்டது எனவும்,
இன்னும் அந்தச் சுரங்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால், அந்த சுரங்கள் பற்றிய இரகசியம்,
அதன் உள்ளடக்கம் யாவும் கோயில் தலைமை
குருக்கள் ஒருவருக்கு மட்டும் தெரியும் என்றும்-
அவர் ஒருவர்தான் செல்ல அனுமதியுண்டு என்றும் -
மற்றவர்களுக்கு இந்த இரகசியம் சொல்லக்கூடாது
என்ற இரகசிய காப்புறுதி உண்டு என்றும்
சொல்லப்படுகிறது....??? !!!

தெரிந்த அன்பர்கள் விபரம் கூறலாம்.
இது சிதம்பர இரகசியம் அல்ல.
ஒருகால்.... இதுதான் சிதம்பர இரகசியமோ....!

அன்பொடு,
கிருஷ்ணன்,
சிங்கை

No comments: